மெழுகுவர்த்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மிச்சிகனை சேர்ந்த ஆசியா நியூட்டன் என்ற சிறுமி, 2008ம் ஆண்டில் சூப்பர் பிஸ்னசு சிறுமி என்று அழைக்கப்பட்டார்.
அதே நேரத்தில் அவருடைய விற்பனையில் மிகுந்த வெற்றியடைந்த பின்னர் தற்போது 'டெட்ராய்ட்டின் இளைய தொழில்முனைவோர்' என்று அழைக்கப்படுகிறார். ஆசியா தனது 5 வயதில் மெழுகுவர்த்தி நிறுவனம் ஒன்றை தொடங்கினார், தற்போது 11 வயதில் சொந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். 11 வயதான ஆசியா நியூட்டன் கடந்த ஆறு வருடங்களாக தன்னுடைய சொந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஆசியா தன்னுடைய பெற்றோர்களின் உதவியுடன் வீட்டிலேயே மெழுகுவர்த்தியை தயார் செய்து, தெருகளில் விற்பனை செய்து வருகிறார். இந்த விற்பனை மூலம் கிடைத்த தொகையினை கொண்டு தனது பள்ளி படிப்பு செலவுக்கும், துணிகளுக்கும் மற்றும் சாப்பாட்டிற்கும் செலவு செய்து வருகிறாள். மேலும் ஏழை குழந்தைகளுக்கும் நன்கொடை வழங்குகிறாள்.
'இன்று, $20 இருந்தால் நிறுவனத்திற்கு தேவையான கருவிகளை வாங்கி வணிக தரப்பில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தவும் மற்றும் உயர்த்த முடியும்' என்று ஆசியா கூறியுள்ளார். ஆசியாவால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண், அவளுக்கு உற்சாகத்துடன் $100 பில் வழங்கினார். ஆசியா தந்தையுடன் சுற்று வட்டாரங்களில் தனது வணிக அட்டைகளை விநியோகம் செய்து வருகிறாள்.
'டெட்ராய்ட்டில் தொழிலை தொடங்க இன்னமும் ஒரு பெரிய இடம் உள்ளது. எங்களிடம் அற்புதமான மனிதர்கள் உள்ளனர். அவர்கள் உங்களை ஊக்குவிப்பார்கள். அதாவது, நான் மெழுகுவர்த்தியை இங்கே விற்பனை செய்வதால் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது' என்று ஆசியா கூறியுள்ளார்.
பேம்பூ டெட்ராய்ட் நிறுவனத்தின் இணை உரிமையாளரான டேவ் ஆண்டர்சனின் கவனத்தை ஆசியா ஈர்த்தார். 'அவள் பெரியவர்களை விட வணிக கருத்துக்களை நன்றாக அறிகிறாள், அது என்னை மிகவும் ஈர்த்தது' என்று கடந்த ஆண்டு ஆசியாவிடமிருந்து மெழுகுவர்த்தியை வாங்கிய திரு ஆண்டர்சன், தெரிவித்துள்ளார். மேலும், ஆசியா விற்பனை செய்யும் போது அவளது குரலால் நான் மிகவும் கவரப்பட்டேன், அதனால் என் பையில் உள்ள அனைத்து பணத்தையும் அவளுக்கு கொடுக்க விரும்பினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூப்பர் பிஸ்னஸ் கேர்லை மேம்படுத்துவதற்கும் மற்றும் தொழில் முனையும் மற்ற குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற அவளின் கனவை நிறைவேற்றுவதற்கும் ஆசியாவிற்கு பேம்பூ டெட்ராய்ட் நிறுவனம் இலவச இடத்தையும் மற்றும் இன்டர்நெட் ஆதரவையும் கொடுத்துள்ளது.