நியூயார்க்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா-மிச்செல் காதல் கதை விரைவில் காலிவுட் படமாக உருவாக உள்ளது.சவுத்சைட் வித் யூ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில், ஒபாமாவாக நடிக்கும் நடிகருக்கான தீவிர வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தில் டிகா சம்ப்டர் என்ற இளம் நடிகை மிச்செல் ஒபாமாவாக நடிக்கவுள்ளார்.இயக்குனர் ரிச்சர்ட் டேனி இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.
கடந்த 1989-ம் ஆண்டில் சிகாகோவின் சவுத் சைட் என்ற இடத்தில் நடந்த இவர்களது முதல் சந்திப்பு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இருவருக்குமிடையேயான காதல் சம்பவங்கள் படமாக உருவாக உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜீலையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.