அட்லாண்டா: அட்லாண்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை ராபின்- மைக்கேல் என்ற தம்பதிக்கு பிரிக்க முடியாத ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
இந்த குழந்தைகள் ஒரே கைகள், கால்கள் மற்றும் உடல் என ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை ஆகும். பிறந்த போது 9 பவுண்டுகள், 10 அவுன்ஸ் எடையுடன் இருந்த இந்த இரட்டை குழந்தைகளை பிரிக்க முடியாது.
தற்போது நலமாக உள்ள இந்த குழந்தைகளுக்கு ஒரே இதயம், மூன்று நுரையீரல்கள் உள்ளன. மேலும் மூன்றாவது நுரையீரல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுக்கு ஆஷா மற்றும் எலி ஹாம்பே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.