டோக்கியோ :யப்பானில் காபி தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்ய ரோபோக்களை ஈடுபடுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
காபி மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ் தயாரிப்பி்ல் பிரபலமானது நெஸ்ட்லே நிறுவனம். இந்நிறுவனம் ஜப்பானில் உள்ள ஸ்டோர்களில் காபி தயாரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்வதற்கென்றே பிரத்யேகமாக 'பெப்பர்' என்ற ரோபட்டுகளை பயன்படுத்துகிறது.
ஹாலிவுட் படத்தில் வருவதைப் போன்றே வெள்ளை நிற பிளாஸ்டிக் பாடியால் போர்த்தப்பட்டுள்ள இந்த ரோபட்டுக்கு மனிதர்களை போன்ற முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 அடி உயரமுள்ள இந்த ரோபோ ரோலர்களால் அற்புதமாக நகரும். வாடிக்கையாளர்களுக்கு விபரங்களை தெரிவிக்க ரோபோவின் இதயத்தில் டேப்லட் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு தனது செயற்கை அறிவு மூலம் 80 சதவீதம் வரை துல்லியமாக பதிலளிக்கிறது.
1,670 டாலர் மதிப்புடைய இந்த ரோபோ வரும் பிப்ரவரி மாதம் மூலம் விற்பனைக்கு வருகிறது. அதற்கு மாதாந்திர பிரீமியம் கட்டணமும் உண்டு. ஏற்கனவே, இந்த ரோபோக்கள் ஜப்பானில் 74-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் மொபைல் போன்களை விற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.