நியூயார்க் : 775 மில்லியன் டாலர் செலவில் கிவா சொலுஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து 'உற்பத்தித் திறனை மேம்படுத்த' அமேசான் நிறுவனம் ரோபோக்களை வாங்கியுள்ளது. பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் பணி உதவிக்காக ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.
அமேசான் குடோனில் இருந்து ஒரு பொருள் பேக்கிங் செய்து வெளியே செல்வதிற்கு ரோபோக்களால் வெறும் 13-15 நிமிடங்களே ஆகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரோபோக்கள் அமெரிக்காவில் உள்ள 10 குடோன்களில் பணியில் ஈடுபட்டுள்ளன. ரோபோக்கள் நிறுவனத்தின் 50 சதவீத பொருட்களை கையாண்டு வருகிறது. இதன் மூலம் மிக குறைந்த நேரத்திலே வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.