மியாமி: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவர் ஒருவர் காமெடிக்காக தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் பீதியில் வெளியேறினர். மனுவேல் அல்வர்டோ என்ற 60வயது நபர் செய்த சர்ச்சைக்குரிய காமெடியால் பதற்றம் மற்றுமின்றி விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அவருக்கு 89,172 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி அவர் கூறியதாவது:மக்களை அச்சுறுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இதனை செய்யவில்லை, காமெடிக்காக தான் செய்தேன். ஆனால் இதன் விளைவு இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் அறியவில்லை என்றார். 2001 செப்டம்பர் 11, அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய பின்பு வெடிகுண்டு அச்சுறுத்தல்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.