கனெக்டிகட்: அமெரிக்காவின் மேற்கு ஃபோர்ட் ஹார்டில் உள்ள கனெக்டிகட் நகரத்தில், விமானம் ஒன்று பழுதானதால் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை மதியம் விபத்துக்குள்ளான இந்த விமானத்தை கனெக்டிகட் அருகிலுள்ள கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி ஹால் ஓட்டினார்.
விமானத்தை திடீரென சாலையில் தரையிறக்கிய போதும், அவர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
தன்னுடைய ஸ்கைலைன் விமானத்தில் செல்லும்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்த அவர், விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். ஒருவேளை விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியவில்லை என்றால், என் குழந்தைகளிடம் நான் அவர்களை உயிராக நேசிப்பதைச் சொல்லி விடுங்கள் என்று விமான கட்டுப்பாட்டு துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு நிலைய அதிகாரி நீங்கள் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்க வாழ்த்துக்கள் என்றார்.
இந்த விபத்தில் விமானத்தின் இறக்கைகள் முறிந்தது, மேலும் இஞ்ஜினிலிருந்து புகை வர ஆரம்பித்தது. விபத்து நடந்த பகுதியை விட்டு தூரமாக வந்த பின்னரே பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்ததாக, இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாதது மனதுக்கு ஆறுதலாக உள்ளது என்று ஹால் கூறியுள்ளார்.