ஆன்ட்ரியோ: கனடாவில் உலகின் மிகவும் பழமையான தண்ணீர் கிடைப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள, லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த, டாக்டர் கிரெக் ஹாலந்து மற்றும் இரண்டு விஞ்ஞானிகள் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆன்ட்ரியோவில் உள்ள, டிமின்ஸ் சுரங்கத்தில், 7,000 அடி ஆழத்தில் எடுக்கப்பட்ட தண்ணீர், 'டேட்டிங்' எனப்படும் தொழில்நுட்ப முறை மூலம் அதில் உள்ள ஜெனான் தனிமங்கள், வாயுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட திரவம் கடைசியாக எப்போது பூமியுடன் தொடர்புடையது என்பதை, ஜெனான் தனிமத்தைக் கொண்டு கண்டறிய முடியும். இந்த ஆய்வின்படி, கனடாவின் டிமின்ஸ் சுரங்கத்தில் எடுக்கப்பட்ட தண்ணீர் 150 கோடி ஆண்டுகள் பழமையானது என்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.