லண்டன்: இங்கிலாந்து நாட்டில் மனிதக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயு மூலம் இயங்கும் துதல் பேருந்து தனது பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பாத் என்ற நகரில் இருந்து பிரிஸ்டல் என்ற நகருக்கு சமீபத்தில் புதியதாக பயோ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஓடுவதற்கு டீசல் தேவையில்லை. மனிதக்கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் biomethane வாயுவவால் பேருந்து இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை பயணம் செய்ய முடியும்.
ஐந்து மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து ஒரு டாங்க் வாயு தயாரிக்கலாம் என்றும், அதில் சுமார் 190 கிமீ வரை பேருந்தை இயக்கலாம் என்றும் இந்த பேருந்தை வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர். இன்று தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ள இந்த பேருந்து படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பேருந்தில் மனிதர்கள் டாய்லட்டில் உட்கார்ந்திருப்பது போன்ற படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.