பருப்பு அடை தோசை தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
பச்சை பயறு-1 கப்,துவரம் பருப்பு-1 கப்,உளுந்தம் பருப்பு-1 கப்,பெருங்காயம்- சிறிதளவு, தேங்காய் எண்ணெய்- சிறிதளவு,பச்சை மிளகாய்- 4 எண்ணிக்கை, கொத்தமல்லி இலை- ½ கட்டு, உப்பு தேவையான அளவு.
செய்முறை:-
• பச்சை பயறு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகிய மூன்றையும் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பும் சேர்த்து அரைத்து வைத்த மாவில் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
• பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி மாவை விடவும். ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.
• இப்போது சூடான பருப்பு அடை தோசை தயார் ஆகிவிடும். இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.