குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சமையல்....டிப்ஸ்.... டிப்ஸ்..! & சமையலில் செய்யக்கூடாதவை!

சமையலில் செய்யக்கூடாதவை!

காபிக்கு பால் நன்றாகக் காயக்கூடாது.

மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.

தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

பிரிட்ஜில் வாழைப்பழத்தையும் உருளைக்கிழங்கையும் வைக்கக்கூடாது.

குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லியை போடக்கூடாது.

பெருங்காயம் தாளிக்கும்போது, குலாம்ஜாமூன் பொரிக்க எண்ணெய் நன்றாக காயக்குடாது.

தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது.

ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது..

 

சமையல்....டிப்ஸ்.... டிப்ஸ்..!

வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.