குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கொக்கியில் இந்தியநட்சத்திர சாய்னாகுத்துச் சண்டை: சிவ தாபா, சுமித் சங்வானுக்கு தங்கம்கொக்கி: இந்திய மகளிர் தோல்வி

புதுடில்லி, ஏப்.13- இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி வருகிற 24ஆம் தேதி டில்லியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது (டிரா) என்பது நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தொடக்க ஆட்டத்தில் காங்காங்கின் யுப் பியு யின்னை சந்திக்கிறார். அவருக்கு எதிராக இதுவரை 4 முறை மோதியுள்ள சாய்னா அதில் 3இல் வெற்றி பெற்றிருக்கிறார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி, கலப்பு இரட்டையரில் ஜூவாலா கட்டா-திஜூ, ஆண்கள் ஒற்றையரில் அஜய் ஜெயராம், காஷியாப் உள்ளிட்டோரும் களம் காணுகிறார்கள். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதிச் சுற்று போட்டியாகவும் இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

குத்துச் சண்டை: சிவ தாபா, சுமித் சங்வானுக்கு தங்கம்

 

புதுடில்லி, ஏப். 13- கஜகஸ்தானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக் கான ஆசிய குத்துச் சண்டை தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர்கள் சிவ தாபா, சுமிதி சங்வான் ஆகியோர் தங்கம் வென் றுள்ளனர். வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் 18 வயது வீரரான சிவ தாபா 56 கிலோ எடைப்பிரிவில் சிரியாவின் சலமனாவை 18-11 என்ற புள்ளிகள் கணக் கில் வென்றார். 19 வயது சுமித் 81 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தானின் டஸ்காகோனை 14-9 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இப்போட்டி யில் இந்த வீரர்கள் இருவரும் மிகவும் ஆவேசமாக விளையாடினர். இவர்கள் இருவரும் ஒலிம்பிக் பிரதான சுற்றில் விளையாட ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர இந்தி யாவின் விஜேந்தர் சிங் 75 கிலோ எடைப் பிரிவில் ஒலிம் பிக் போட்டியில் விளையாட தகுதி பெற் றுள்ளார்.

 

கொக்கி: இந்திய மகளிர் தோல்வி

 

புதுடில்லி, ஏப். 13- நான்கு நாடுகள் பங்கேற்கும் காக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந் திடம் தோல்வியடைந்தது. ஆக்லாந்தில் வியாழக் கிழமை நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆவேசமாக விளையாடினர். 3ஆவது நிமிடத்தில் அந்த அணி முதல் கோலை அடித்தது. தொடர்ந்து 24ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனைகள் 2ஆவது கோலை அடித்தனர். ஆக்லாந்தில் நிலவும் கடும் குளிரும் இந்திய வீராங்கனைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. பதில் கோல் அடிக்க கடுமையாகப் போராடிய இந்திய வீராங்கனைகள் 40 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தனர். அனுராதா தேவி இந்த கோலை அடித்தார். இந்திய அணி வெள்ளிக்கிழமை நடை பெறும் அடுத்த ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.