ஐரோப்பிய நாடுகளிலேயே இளம் பெண்கள் மிக அதிகமாக கருக்கலைப்புச் செய்வது இங்கிலாந்தில்தான் என்று தெரிவிக்கும் ஆய்வு, ஐரோப்பாவின் கருக்கலைப்புத் தலைநகராக இங்கிலாந்து முடிசூடிக் கொண்டுள்ளது என்றுக் கூறியுள்ளது.
ஐரோப்பாவின் சமூக ஆய்வுக் குழு ஒன்று கருக்கலைப்புத் தொடர்பான இந்த ஆய்வை 2007ஆம் ஆண்டில் மேற்கொண்டது. அந்த ஆய்வில், இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டில் மட்டும் 20 வயதிற்கும் குறைவான 48,150 பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளனர்.
2006ஆம் ஆண்டுவரை இந்தப் �பெருமை�யைப் பெற்றுவந்த பிரான்ஸில் அதே ஆண்டில் 31,779 இளம் பெண்கள் கருக்கலைப்புச் செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கருக்கலைப்பில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் நாடுகளில் மொத்தம் 2,19,336 பெண்கள் கருக்கலைப்புச் செய்துள்ளனர். பிரான்ஸில் 2,09,699 பேர் கருக்கலைப்பு செய்துக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆய்வைச் சுட்டிக்காட்டி டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளான ரொமானியாவில் 1,50,000 பெண்களும், இத்தாலியில் 1,27,000 பெண்களும், ஸ்பெயினில் 1,12,000 பெண்களும் கருக்கலைப்புச் செய்துள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.