நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததன்படி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.
முன்னதாக மைதானத்தில் சிறிலங்கா தேசியக் கொடி, யாழ். இந்துவின் கொடி, கொக்குவில் இந்துவின் கொடி என்பன ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராகக் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வட மாகாணச் செயலர் எஸ். சத்தியசீலன் கலந்துகொண்டுள்ளார்.