ஞாயிறு, 01சனவரி 2012 சென் னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2ஆம் தகுதிச்சுற்றுக்கு இந்தியா வின் ரோஹன் போ பண்ணா, பிரஜ்னேஷ், மோஹித் ஆகியோர் முன் னேறியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2ஆம் சுற்றில் வெற்றிபெறும் பட்சத்தில், அவர்கள் பிரதான சுற்றில் விளை யாட தகுதிபெற்றுவிடு வார்கள். சென்னை நுங் கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் சனிக் கிழமை நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் போபண்ணாவை எதிர்த்து விளையாடிய விஜய் சுந்தர், ரிட்டையர்டு ஹர்ட் முறையிலேயே பாதியிலேயே வெளியேறி னார். அப்போது போபண்ணா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றிருந்தார். இதனால் போ பண்ணா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். மோஹித் மயூர் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ராம்குமாரை வீழ்த்தினார். பிரஜ்னேஷ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ரஸ்டோகியை வீழ்த்தினார். இந்தியா வின் ஜீவன் நெடுஞ்செழியன், சிறீராம், நீரஜ் இளங்கோவன் உள்ளிட்டோர் தோல்வி யடைந் தனர்
ஞாயிறு, 01சனவரி 2012
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ், தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் எரிக் புரோடானை சந்திக்கிறார்.
தரவரிசையில் 84ஆம் இடத்தில் உள்ளார் சோம்தேவ். எரிக் புரோடான் 97ஆம் இடத்தில் உள்ளார். முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டாவது சுற்றில், நடப்புச் சாம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்க வேண்டியதிருக்கும். இதனால் சோம்தேவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
17ஆம் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
டிரா: இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் யாருடன் யார் விளையாடுவது என்பதைத் தீர்மானிக்கும் (டிரா) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.