ஆட்சிக்காலத்தில் ஆசீவகர்களிற்கான உறைவிடம் ஒன்றை அனுராதபுரத்தில் அமைத்திருந்தான் என மகாவம்சம் கூறுகின்றது (Source- Mahavamsa , W.Geiger , Pali text society , London , 1908. X. 101-102.}.
அப்போது பெளத்தமதம் ஈழத்திற்கு வருவதற்கு முற்பட்ட காலமாகையால் பண்டுகாபயன் என்பவர் பாண்டிய வம்ச ஒரு தமிழ் மன்னனே என்பது
பண்டைய ஈழத்தின் கி. மு 7 ஆம் நூற்றாண்டிற்குரிய சேந்தன் மாறன் பாண்டிய வம்சமாக அடையாளம் காணப்பட்டிருப்பதன் வழி சேந்தன் மாறன் என்ற ஈழப்பாண்டியனை பெளத்தமத இலக்கியங்கள் நாகர்களுக்கு இடையேயான யுத்தம் என பகர்வதனால் ஈழப்பாண்டியனான இந்த சேந்தன் மாறன் தொடக்கம் பண்டுகாபயன் ஈறாக தேவநம்பிய திசன் (கி. மு. 307–கி. மு. 267) வரையான காலகட்டத்தில் ஈழத்தினுடைய வழிபாட்டுத் தொன்மமாக ஆசீவக ஐயனார் வழிபாடு இருந்தது என்பதே பெளத்தமத வருகைக்கு முற்பட்ட ஈழத்தின் சமயமாக அடையாளம் கண்டுகொள்ளப் பட்டிருக்கின்றது. அதன் பின்னான காலகட்டத்திலும் கூட பண்டுகாபய மன்னனின் பேரனான தேவநம்பிய திசனும் அவனது வழிவந்தோரும் தொடர்ந்து கி.பி 450 இற்கு பின்னான பிராகிருத மொழியை தாய்மொழியாக கொண்ட மெளரிய தாதுசேனன் ஆட்சிக்காலம் வரை அநுராதபுரத்தின் அரசர்களாக தொடர்ந்து வந்திருக்கின்றனர்.இதன் மூலமாக பண்டைய ஈழப்பாண்டியனான சேந்தன் மாறன் தொடங்கி மெளரிய தாதுசேனனுக்கு முற்பட்ட காலத்தில் நாகநாட்டின் அரசர்களாக அவர்களுடைய இராசதானி அநுராதபுரத்தின் அரசர்களாக இருந்தவர்கள் தமிழர்களே என்பதும் இவர்களும் ஈழப்பாண்டிய மரபைக் கொண்டவர்களே என்பதும் தெளிவாகிறது.
இப்போது தேவநம்பிய திசன் (கி. மு. 307–கி. மு. 267) அவரது பெயர் திசன் என்பதே. `தேவநம்பிய` என்பது பின்னர் வந்து சேர்ந்த பட்டமாகும். இங்கு திசன் என்பது ஒரு தமிழ்ப்பெயராகும்.`திசன்` என்ற பெயரின் வேர்ச்சொல் திசை என்பதாகும். எனவே திசன் என்ற பெயரின் பொருள் தலைவனாகும். திசை என்ற சொல்லை அடியாகக்கொண்டு திசன் தவிர `திசயன்`, `திசிலன்` போன்ற பழந்தமிழ்ப் பெயர்களும் உண்டு. `திசையன் விளை` என்ற ஊரே திருநெல்வேலி மாவட்டத்திலுண்டு. இன்று கீழடி அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டங்களில் எழுதப்பட்டிருந்த பெயர்களில் `திசன்` என்ற பெயரும் முதன்மையானது. எனவே திசன் என்பது ஒரு தமிழ்ப் பெயரே என்பது ஐயத்திற்கு இடமின்றிச் சான்றுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்த நாக அரசர்கள் தலைமுறையில் வந்த சிறீ நாகன் என்ற நாக அரசனின் தந்தை பெயரும் `வீர திசன்` (CE 4th cent) என்பதாகும்.
இவ்வாறு தேவநம்பிய தழுவிய பிற்பாடு பெளத்தமதத்திற்கு உட்பட்ட
வட்டகாமினி (கி.மு. 103, கி.மு. 89 ) காலத்தின் போது உத்தர சேத்தியம் எனப்படும் அபயகிரியை அமைத்தான். இது 325 அடி விட்டத்தை கொண்டது. கிரி என்ற ஆசீவக(சமண) முனிவரின் தவச்சாலையை இடித்து கட்டப்பட்டது. இதன் காரணமாக அது அபயகிரி என பெயர் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தூபி அமைக்கும் முறைமை
பௌத்த வழிபாட்டுச் சின்னங்களில் இடம்பெறும் மிக முக்கியமான ஒரு கூறாகவும் தேரவாத பௌத்த பிரிவின் ஒரு குறியீடாகவும் விளங்குகிறது. கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நிலையில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை எல்லாம் ஆரம்பத்தில் கும்மட்ட வடிவில் மிகச் சிறிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டன. ஆனால் காலப்பேக்கில் மிகவும் பிரமாண்டமான தோற்றப்பாட்டினை பெற்றுக்கொண்டு ஈழத்தினுடைய தனித்துவத்தை பேணி நின்றன. இந்நிலையில் ஸ்தூபியினுடைய அமைப்பு முறையானது வட இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது என்ற பரணவிதானவின் வாதம் இன்று வலு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தென்னிந்தியாவில் கிருசுணா நதிப் பள்ளத்தாக்கில் மலர்ச்சியடைந்த அமராவதி கலையம்சங்களே இலங்கையின் சு(ஸ்)தூபி அமைப்பில் பெரும் செல்வாக்கினை ஏற்படுத்திருந்ததனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.பொதுவாக தென்னனாசியவில் ஸ்துபிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராய்ந்த கலை வல்லுநர்கள் அதனை பௌத்த மதத்தின் தோற்றத்திற்கு முற்பட்ட கால எல்லைக்கு எடுத்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது. புராதன புதைகுழி முறையிலிருந்தே இத்தகைய ஸ்தூபிகள் உருவாக்கம் பெற்று பிற்காலத்தில் வணக்கத்துக்குரிய கூறுகளாக பரிணமம் பெற்றன என்பது பரணவிதானவின் கருத்தகும். சாதாரண மக்களது வாழ்வில் புதைகுழிகள் அல்லது நடுகல் வழக்கம் இருந்து வந்ததை வரலாற்றுக்கு முற்பட்ப கால தொல்லியல் ஆய்வுகள் நன்கு நிறுவும்.
தென்னாசியவைப் பொருத்தமட்டில் பெருங்கற்கால பண்பாட்டுக்கு முன்னர் புதைகுழிகளும் நடுகல் வழக்கமும் இருப்பினும் பெருங்கற்காலத்தை தொடர்ந்து அவற்றின் அம்சங்கள்மக்கள் அறிமுகம்( பிரபல்யம் )அடைந்து வந்திருக்க வேண்டும். இந் நிலையில் புத்தருடைய காலத்திலும் அதற்கு முன்னரும் புதைகுழியின் மேல் நடுகல் முறை அவருடைய புனிதத் தன்மை காரணமாக வணக்கத்துக்குரிய ஞாபகச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். புத்தர் இறந்தவுடன் அவருடைய காறை எலும்பு, தந்ததாது, கேசதாது போன்றவற்றை வைத்து பதிட்டம் செய்து சு(ஸ்)தூபிகளை உருவாக்கும் முறை தோன்றியது. கந்தரோடை விகாரங்களும் இவை போன்ற புதைகுழி அமைப்புக்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாகநாட்டின் இராசதானியாக அநுராதபுரம் விளங்கிய அதே காலப்பகுதியில் வடபாகத்தில் கந்தரோடையும் இராசதானியாக இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் பெளத்தமதம் ஈழத்திற்கு வந்தபோதும் அதன் பின்னான பல நூற்றாண்டுகளும் தமிழர்களுடைய ஆட்சியே விளங்கியது என்பது உறுதியாகிறது. கி.பி 450 இற்கு பிற்பாடு ஈழத்திற்கு அந்நியமான தமிழைத் தாய்மொழியாக கொண்டிராத பிராகிருத மொழி பேசிய வடுகர்களான மெளரிய தாதுசேனன் ஆட்சியின் தொடக்கம் இராசேந்திர சோழனால் இவ் வடுகர் வழிவந்த மகிந்தன் கைப்பற்றப்படும் வரைக்குமான காலம் நாகநாட்டின் இருண்ட காலமாக விளங்கியது. இதே போன்ற நிலமை அதே வடுகக்கூட்டமான களப்பிரர்களால் தமிழ் மூவேந்தர் தேசத்திற்கும் கி.பி 450 - கி.பி 550 வரை ஏற்பட்டது.
பிற்பாடு அநுராதபுரம் சோழர்களாலும் பாண்டியர்களாலும்,காலிங்க மாகோனாலும்,யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளாலும் மீட்கப்பட்டன. அதன் பின்னான ஆங்கிலேயர் காலத்திலும் தனித்து தமிழர்களுடைய நிலமாகவே தொடர்ந்து விளங்கியமை றொபட் நொக்சு போன்றவர்களுடைய கூற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது. மேலும்
தற்போதும் இந்த மாவட்டத்தில் தமிழ் மொழி பேசப்படும் 110க்கு மேற்பட்ட கிராமங்களும் 63 முசுலிம் பாடசாலைகளும் 2 தமிழ்ப் பாடசாலைளும் இன்றும் உள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகும்.
பேராசிரியர் உக்குபண்டா கருணானந்த அவர்கள் வலிசிங்க ஹரிச்சந்தர் பற்றி எழுதிய நூல் ஒன்றில் 1871 தொடக்கம் 1911 வரை அநுராதபுரத்தின் சனத்தொகையை இன, மத ரீதியாக காட்டியுள்ளார். அதன்படி, இக்கால பரப்பில் (1871 – 1911 வரை) தமிழர்கள் முதலாவதாகவும், சிங்களவர்கள் இரண்டாவதாகவும் முஸ்லிம்கள் சிறிய வித்தியாசத்துடன் 3ஆவதாகவும் காணப்படுகின்றனர். தமிழரைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாராட்சித் தமிழர் தமது வியாபார நோக்கத்திலேயே இங்கு வந்திருந்தனர். காலகெதியில் இவர்களே இந்நகரின் சொத்து சுகம் உள்ளவர்களாக மாறினர். பழைய நகர் என இப்போது அழைக்கப்படும் அநுராதபுரத்துப் பழைய நகர்ப்பிரதேசம் ஒரு காலத்தில் குட்டி வடமாராட்சி என பெருமை பெற்றிருந்தது.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநுராதபுரம் முகாந்தரமாக சின்னத்தம்பி பிச்சைத் தம்பி என்பவரே இருந்துள்ளார். அநுராதபுரம் நகரசபையின் முதலாவது தலைவராக 1933ஆம் ஆண்டு தொடக்கம் 1944ஆம் ஆண்டு வரை சட்டத்தரணி எசு. நடராயா அவர்களும் அதன்பின்னர் ஆர்.வி. கந்தசாமி அவர்களும் 1946 தொடக்கம், 1952 வரை ஆறு ஆண்டுகளும் மொத்தமாக 19 வருடங்களுக்கு மேல் நகரசபைத் தலைவர்களாக கடமையாற்றி உள்ளார்கள். குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சியின் போது வளங்குன்றி வரண்டு கிடந்த வன்னிப்பிரதேசம் புனருத்தாபனம் பெற முன்னுரிமை பெற்றது. அதன் பயனாக தூர்ந்த குளங்களும் நீர் அணைகளும் மீளப்புப் பெற்றன. காடுகள் அழிக்கப்பட்டன. பயனுறு களனிகளுடன் மக்கள் குடியமர்வுகளும் தோற்றுவிக்கப்பட்டன.
அதேவேளை இம்மண்ணில் மறைந்திருந்த தொல்கலை, கலாசார சின்னங்கள் அகழ்ந்து ஆராய் வேண்டி தேவையும் ஏற்பட்டது. இப்பணிக்கு திரு. பெல் எனும் ஆங்கிலத் துறை மகனார் தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரியாக அநுராதபுரம் வந்து, அநுராதபுர நகரையும் அதன் சூழலையும் தன் ஆய்வுகளுக்கு உட்படுத்திக் கொண்டார்.1871 அளவில் 1870ஆம் ஆண்டு காலப்பகுதியில் திசு(ஸ்) ச(ஸ) வெவ குளம், பொன்னாரங் குளம், குமிச்சங்குளம், ஆமன வெவ, நாச்சாதுவ, கலாவெவ போன்ற இடங்களில் நிரந்தரக் குடியிருப்புகளை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலை உண்டானமைக்குக் காரணம், குளங்களை ஆங்கிலேயர் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவையின் பொருட்டாகும்.அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி யே ஆர் யெயவர்தனா ஆட்சிக்கு வந்தபோது தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த அநுராதபுரம் பழைய நகரம் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு புதிய நகரம் தனிச்சிங்களமாக உருவாக்கப்பட்டது.அதனோடு கூடிய பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக தமிழர்கள் வாழமுடியாத பிரதேசமாக மாற்றியமைக்கப்பட்டது.இவ்வாறு வரலாற்று ஆரம்பகாலம் தொடக்கம் நாகநாட்டின் இராசதானியாக விளங்கிய அநுராதபுரத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதனூடாக அந்நிய வடுக மெளரிய, நாயக்க வந்தேறிகளினது கபட நாடகங்களையும் இந்த மண்ணுக்குரிய பூர்வீக மக்களை அடிமைகளாக திரிக்கும் வரலாற்று திரிபுகளையும் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவற்றை தகர்த்தெறிய வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.