குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கையுடனான சுவிற்சர்லாந்தின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய அந்நாட்டின்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் -09.01.2024.... தி.ஆ 2054 தமிழீழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.

 

இவைதொடர்பில் சுவிற்சர்லாந்து அரசு விரிவான முறையில் ஆராய்ந்து செயற்படாமல் இலங்கை   அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது. சுவிஸ் அரசின் இந்த நிலைப்பாடானது சுவிசு வாழ் தமிழர்களுக்கு ஐயப்பாட்டையே தோற்றுவித்து வருகின்றது.

இவ்வாறான சூழமைவில் டிசம்பர் 21, 2023 அன்று MOLINA FABIAN தலைமையிலான ஐந்து சுவிசு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சுவிசு அரசாங்கத்திடம் ஏழு வெளிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

எழுப்பப்பட்ட கேள்விகள்:

1. நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும் போர்க்குற்றங்கள் மீதான நீதிவிசாரணையையும் அதன் தொடர்ச்சியான அரசியல் தீர்வையும் நடைமுறைப்படுத்த சுவிசு அரசாங்கம் எவ்வாறு ஆதரவு வழங்குகின்றது?

2. நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டத் தவறிய இலங்கை  அரசினால் உருவாக்கப்பட்ட "உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை" பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்களும்,

3.ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் விமர்சித்திருக்கின்ற சூழலில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் எவ்வாறு ஆதரவளிக்கிறது?

4. புலம்பெயர் அமைப்பு மற்றும் பௌத்த பிக்குகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட “இமயமலைப் பிரகடனத்தை” பெரும் பகுதியான தமிழ் கட்சிகள், பாதிக்கப்பட்ட தரப்புகள்,  சமூக அமைப்புகள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகள் போன்றவற்றால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் சுவிற்சர்லாந்து  எந்தவகையில் ஆதரிக்கிறது? இது குறித்து சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் குமுகத்திடம் எந்தவொரு கருத்தாய்வும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?

5. சர்வதேச ரீதியில் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக சுவிற்சர்லாந்து அரசு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது?

6.  இலங்கையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் சித்திரவதைக்கு உற்படுத்தப்படுவதுடன் கொலை செய்யப்படுவதாகவும் தற்போதும் அறிக்கைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந் நிலையில் சுவிசில் இருந்து இலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் போது அவர்களின் பாதுகாப்பிற்கு சுவிட்சர்லாந்து எவ்வாறான உறுதிமொழி அளிக்கிறது?

7. 2023 இல் இலங்கைக்கு  எத்தனை பேர் நாடுகடத்தப்பட்டார்கள்?

இவர்களின் இக்கேள்விகளுக்கான பதில்களை விரைவில் சுவிசு அரசு வெளியிடவுள்ளது. இத்தருணத்தில் எம் இனம் சார்பில் கேள்விகள் எழுப்பிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குறித்த பாராளுமன்ற உறுபினர்களுக்கு சுவிசு வாழ் தமிழர்கள் சார்பாகவும்  உலகத் தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர் இயக்கமாகிய நாங்கள் இம் முயற்சியை வரவேற்பதுடன் உளப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடையங்களிலும் நிலையான மற்றும் பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு உலகத் தமிழர் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களுடனான  நேரடியான தொடர்பாடல்களைப் பேணுவதனூடாக தமிழர் இனப் பிரச்சனை தீர்வு தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள சுவிசு அரசை வலியுறுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.

சுவிற்சர்லாந்து அரசிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய கூடுதல் செய்திகள்:

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.