29.04.2023 உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் இணையம் வழியாக 29-ந்தேதி நடக்கிறது. சென்னை உலக திருக்குறள் இணையக்கல்வி கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ந்தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறுகிறது. Also Read - பேனா நினைவுச்சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம்- சீமான் Powered By ஆய்வரங்கத்துக்கு கார்வர்டு பல்கலைக்கழக தமிழியல் இருக்கைக்குழு அமைப்பாளர் விசய் சானகிராமன் தலைமை தாங்குகிறார். திருஞானசம்பந்தம் தொடங்கிவைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வரவேற்றுப்பேசுகிறார்.
செஞ்சி மசுதான் ஆய்வரங்கத்தில் அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கனடா, சேர்மனி(முன்சன்), சுவிற்சர்லாந்து மலேசியா உள்ளிட்ட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.குமரிநாடு.கொம் இணைப்பு 29.04.2023....புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் அவர்களின் 133 ஆம் பிறந்தநாளில் உலகநாடுகளில் வாழும் தமிழ்மொழி ஆர்வலர்கள்,தமிழ்அறிஞர்கள் குவியவழி இணைந்து உலகதர மொழியாக தமிழை இட்டுச்செல்ல என்ன செய்யவேண்டும் ,என்ன செய்யக்கூடாது என்று தத்தமது கருத்துகளைப்பேசினர். சுவிற்சர்லாந்திலிருந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் பொ.முருகவேள் அவர்களும் இணைந்து 3 நிமிடங்கள் தமது கருத்தை உரைத்தார்.
https://www.dailythanthi.com/News/State/world-tamil-day-workshop-will-be-held-online-on-29th-951873?fbclid=IwAR08ZGvlYxbQBiPNbbV52gCjCFpD8YTwdfeT-QnJZK331aXIgXgVs0mvZg4