குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைன்: விஞ்ஞானத்தில் வென்ற விஞ்ஞானி திருமண வாழ்க்கையில் தோற்றது ஏன்?

18 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 18 ஏப்ரல் 2023.......உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா?

ஐன்சு(ஸ்)டைன்பட மூலாதாரம்,AFPஉலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும்.

1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்சு(ஸ்)டைன் 1955 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். சு(ஸ்)டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்சு(ஸ்)டைன்.

இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்சு(ஸ்)டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது.

2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்சன் எழுதிய, ஐன்சு(ஸ்)டைன்: அவரது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் (Einstein: His Life and the Universe) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐன்சு(ஸ்)டைன்

உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானியாக பரிணமித்த ஐன்சு(ஸ்)டைன், தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த பல முயற்சிகளை செய்ய வேண்டியிருந்தது, ஆனால்  நல்வாய்ப்பின்மையாக(துரதிருஷ்டவசமாக )அவர் அதில் தோல்வியையே கண்டார் என்று வால்டர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'ஐன்சு(ஸ்)டைன்' என்பது, அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக புழக்கத்தில் இருக்கிறது. "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற புகழாரத்தையும் பெற்றவர் ஐன்சு(ஸ்)டைன்.

ஐன்சு(ஸ்)டைனின் தோல்விக்கு காரணம் என்ன?

ஐன்சு(ஸ்)டைன் தனது திருமண வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக வால்டர் கூறுகிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் திருவினையாகவில்லை, குடும்ப வாழ்க்கை போர்க்களமாகவே இருந்தது.

உண்மையில், காதல் குறித்த ஐன்சு(ஸ்)டைனின் மனப்பான்மைதான் அவரது தோல்விக்கும் காரணம். விஞ்ஞானியான மிலேவா மாரிக் உடன் காதல் மணம் புரிந்தார் ஐன்சு(ஸ்)டைன். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர், கடுமையான அம்சங்களைக் கொண்ட கோரிக்கை பட்டியலை கொடுத்து, அதை கடைபிடிக்கவேண்டும் என்று மனைவியிடம் சொன்னார்.

ஐன்சு(ஸ்)டைன்

பட மூலாதாரம்,HULTON

குழந்தைகளுக்காகவாவது இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஐன்சு(ஸ்)டைன் நம்பினார்.

ஐன்சு(ஸ்)டைனின் பட்டியல்

வால்டர் இசாக்சனின் புத்தகத்தின் அடிப்படையில் பிரிட்டன் நாளேட்டில் (பத்திரிகை  தமிழச்சொல்லல்ல) டெய்லி மெயில் இந்த பட்டியலை வெளியிட்டது. மாரிக் ஒரு காதலியாக இருக்கவேண்டாம், ஒரு வேலைக்காரியாக இருக்கலாம் என்ற கோரிக்கைகளின் பட்டியல் இது.

அந்த புத்தகத்தின்படி, 1914ஆம் ஆண்டு இந்த கோரிக்கை பட்டியலை எழுதும் கட்டாயத்திற்கு ஐன்சு(ஸ்)டைன் உள்ளானார். தனது முதல் மனைவியான மாரிக்குடனான திருமண வாழ்க்கை சீர்கெட்டுப் போவதை அவர் உணர்ந்தார்.

கணிதம் மற்றும் இயற்பியல் பயின்ற சில ஐரோப்பிய பெண்களில் மிலேவா மாரிக்கும் ஒருவர். குழந்தைகளின் நலனை முன்னிட்டு கணவன்-மனைவி ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஐன்சு(ஸ்)டைன் மனைவியிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்காக அவர் மனைவியிடம் கொடுத்த பட்டியல் அதிர்ச்சியூட்டியது. மிலேவா மாரிக் கணவரிடம் வேலைக்காரியாக நடந்துக் கொள்ளவேண்டும் என்று ஐன்சு(ஸ்)டைன் சொன்னார். ஆனால் மனைவியை தான் நேசிக்கவேண்டும் என்றோ, அக்கறை செலுத்த வேண்டும் என்றோ எதிர்பார்க்கக்கூடாது என்று சொன்னார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானி.

அறிவார்ந்தவர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐன்சு(ஸ்)டைன், தனது மனைவியும் விஞ்ஞானியுமான மாரிக், கணவருக்காக மூன்று வேளையும் உணவு தயாரிக்க வேண்டும், வீட்டையும் தனது தனிப்பட்ட அறையையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும், தனது உடைகளை துவைத்து, ஒழுங்காக பராமரிக்கவேண்டும் என்று சொன்னார்.

ஐன்சு(ஸ்)டைனின் இரண்டாவது மனைவி இல்சுா(ஸா)

பட மூலாதாரம்,TOPICAL PRESS AGENCY

படக்குறிப்பு,

தனது படுக்கையறையையும், படிக்கும் அறையையும் மனைவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஐன்சு(ஸ்)டைன் விரும்பினார், ஆனால் தன்னுடைய மேசையை மனைவி பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்.

ஐன்சு(ஸ்)டைனின் கோரிக்கைகள் இத்துடன் முடிவடையவில்லை. இதற்கு பதிலாக மனைவி தன்னிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார் ஐன்சு(ஸ்)டைன்.

தன்னிடம் மனைவி எதிர்பார்க்கக்கூடாதவை

மிலேவாவுடன் அமர்ந்து பேசவோ, அவரை வெளியில் அழைத்துச் செல்லவோ முடியாது என்றும், அதுபோன்ற எதிர்பார்ப்புகள் அவருக்கு இருக்கக்கூடாது என்றார் ஐன்சு(ஸ்)டைன். அதுமட்டுமல்ல, தனக்கு பிடிக்கவில்லை என்றால் மனைவி பேசக்கூடாது என்றும் ஐன்சு(ஸ்)டைன் கூறினார்.

படுக்கையறை அல்லது படிக்கும் அறையில் இருந்து வெளியே போ என்று சொன்ன அடுத்த கணமே மனைவி அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்பதையும் மனைவிக்கு கொடுத்த பட்டியலில் ஐன்சு(ஸ்)டைன் குறிப்பிட்டிருந்தார்.

ஐன்சு(ஸ்)டைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐன்சு(ஸ்)டைனின் கோரிக்கைகளை அவரது மனைவி ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டதாகவே தோன்றுகிறது, ஆனால் என்ன நடக்கும் என்று அவர் அச்சப்பட்டாரோ அதுவே நிகழ்ந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, பெர்லினில் இருந்த ஐன்சு(ஸ்)டைனைவிட்டு வெளியேறிய மாரிக், ஜ்யூரிக் சென்று அங்கு தனது மகன்களுடன் வசிக்கத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1919இல் அவர் விவாகரத்துக்காக விண்ணப்பித்து, திருமண பந்தத்தில் இருந்து விலகினார் மாரிக்.

ஐன்சு(ஸ்)டைனுக்கு பல பெண் தோழிகள் இருந்தனர். மேலும் 1912 ஆம் ஆண்டு முதல் இல்சா(ஸா) என்ற பெண்ணுடன் ஐன்சு(ஸ்)டைனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது, அந்த சமயத்தில் மாரிக்குடன் அவர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிக்கை விவாகரத்து செய்த பிறகு 1919 இல் ஐன்சு(ஸ்)டைன் இல்சா(ஸா)வை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகு, தனது செயலாளரின் மகள் நியூமன் உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் ஐன்சு(ஸ்)டைன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.