30.04.2022....இந்து மதம் அம்பேத்கர் காங்கிரசு காந்தி பார்ப்பனர்கள் இந்திய வரலாறு
இந்து என்னும் சொல்!
முதன் முதலாக இந்து என்கிற வார்த்தை கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்து நதியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்க அச்செமனிட் பாரசீகர்கள் இந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினர். இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் இது சிந்து எனவும் அறியப்பட்டிருந்தது. வரலாற்றாசியர் சஞ்சய் சுப்பிரமணியத்தின் கூற்றுப்படி இந்தச் சொல் ஒருபோதும் தக்காணப் பகுதிகளுக்கு அப்பாலுள்ள நிலங்களைக் குறிக்கவில்லை. யூரேசிய புல்வெளிப் பகுதிகளிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டனர். இம்மக்களால் கி.மு. 1500 முதல் கி.மு. 500 வரையிலான காலங்களில் வேத இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. மத்திய இந்தியாவிலிருந்து விந்திய மலையைத் தாண்டி ஆரியர்கள் செல்வதைப் பண்டைய நூலான மனுசுமிருதி தடை செய்தது.கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டரின் இராணுவம் “சிந்து“ என்று அறியப்பட்டிருந்த இப்பகுதி முழுமையையும் “இண்டசு“ எனப் பெயரிட்டு அழைத்தது. “இந்தியா“ என்கிற புதிய பெயர் இதிலிருந்தே பெறப்பட்டது. அரபு நாடுகள் இதே பகுதியை “அல் கிந்து என மாறுபட அழைத்தன. இந்த வார்த்தையிலிருந்தே “கிந்து என்கிற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்தது. வரலாற்றாசிரியரான ரிச்சர்ட் ஈடன் கி.பி. 1350 ஆம் ஆண்டு வரை இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதிக்குரிய தெளிவற்ற புவியியல் பெயராக இவ்வார்த்தை இருந்ததாகக் கூறுகிறார்.
ரொமிலா தாப்பர் அவர்களின் கருத்துப்படி பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்புவரை இப்பெயர் மதத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள் மற்றும் வணிகர்கள் இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் சொந்த மதத்தைக் குறிப்பிட இப்பெயரை ஆரம்பத்தில் பயன்படுத்தினர்.
வரலாற்று ரீதியாக பல்வேறு மாறுபட்ட பயன்பாடுகளைக் கொண்டதாக இந்த வார்த்தை இருந்தது. கிந்து என்கிற வார்த்தை பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர்வரை அதன் பயன்பாட்டில் எந்தவொரு வரையறையையும் அளவு கோல்களையும் கொண்டிருக்கவில்லை எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட, நிர்வாகம் மற்றும் அரசியல் தொடர்பான பேச்சுக்களிலும், அரசாங்கத்தின் கீழ் சின்னஞ்சிறு நடவடிக்கைகளிலும் மட்டுமே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு இந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொள்வது ஆரம்பமானது.
கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையை, கடவுள் மற்றும் பக்தியை, அதன் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும்போது, சமூகம் மற்றும் அரசியலிலிருந்து மனிதன் தனிமைப் படுத்தப்படலாம். ஆனால், இந்த நம்பிக்கை அமைப்பு ஒரு மதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பெருந்தொகையான மக்களின் பழக்க வழக்கங்கள் ஓர் ஒழுங்கு முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, அவை உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், இந்த நடைமுறையானது, கட்டுப்பாடுகள் மற்றும் சடங்குகளின் வடிவத்தில் தூரம் மற்றும் நேரத்தைக் கடைபிடிப்பதாகவும் இருக்க வேண்டும். ஒரு புனிதமான நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் இது உறுதி செய்யப்பட்டு, மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மதமானது அமைப்புகளின் அதிகாரத்திலிருந்து பிரிக்க முடியாத ஒஉன்றாகும். இது நம்பிக்கையை ஒழுங்குபடுத்துவதுடன் கேள்விகளற்ற சட்டப் பூர்வமானதொரு நியாயத்தன்மையையும் வழங்குகிறது. மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் சீரான முறையில் ஒழுங்குபடுத்தி, நடைமுறைப்படுத்திட மதத்திற்கு நிலையானதொரு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
ஒரு மதம் குறித்துப் பேசுவதென்பது, ஓர் அரசியல் அமைப்பினுள் போதுமான தனித்துவங்களுடனும் பண்புகளுடனும், ஒரு திட்டவட்டமான மக்கள் தொகையோடு தொடர்புபடுத்திப் பேசுவதைக் குறிக்கிறது. “மதம்”, “பிரிவு”, ”வழிபாடு” போன்றவைகளுக்கு இடையிலான வேறுபாடுகளின் மூலம்; சமூகங்கள் பிரிக்கப்படுகின்றன. இதுவே, இந்த வகைப்பாடுகளின் நிர்வாகம் மற்றும் அரசியலின் சிறப்பியல்புகளாக அமைகின்றன. ஏனெனில் ஒன்று அல்லது மற்றொன்று குடிமையியல் சட்டத்தில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. தனித்துவமான நம்பிக்கைகளும்; பழக்க வழக்கங்கள்; அடிப்படையிலான அரசியல் அமைப்பையோ, முறையான அங்கீகாரம் பெற்ற வரையறைகளையோ, சரியாக நிறுவாவிட்டால், விஞ்ஞானவியல் அல்லது டிங்கோயிசம்1 போன்றவற்றால் எந்தப் பயனும் இல்லை. லிங்காயத்துகள் தனித்துவமான மத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் ‘லிங்கயாத்து’ என்பது ஒரு தனி மதம் என்று கூறி போரடி வருகின்றனர். தனி மதம் என்கிற தகுதியைப் பெறுவதற்காக லிங்காயத்துகள் எதிர்கொள்ளும் சவால்களை தற்போதைய இந்தியாவில் நாம் கண்டு வருகிறோம்.
பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மதத்தின் மீதான தற்போதைய அக்கறையானது ஐரோப்பியர் வரவால் இங்கே உருவானது. “மதம், “தேசம்” மற்றும் “இனம்“ ஆகியவை அக்காலத்தில் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஐரோப்பியர் அல்லாத மக்களின் கொலம்பிய கண்டுபிடிப்பானது அவர்களின் பழக்க வழக்கங்களை வெளியிடுகிறது. கிறித்தவ இறையியலாளர்கள் பல மதங்களின் சாத்தியங்கள் மற்றும் உண்மையான மதம் என்பது என்ன என்பதில் அக்கறை கொண்டனர். கிறித்தவம் மட்டுமே மதம் அல்லது உண்மையான மதமென நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது. இந்த முயற்சிகள் மதமென்பதை வரையறுக்க பயன்பட்டது. இதனால், பல்;வேறு நடைமுறைகளில் வேறுபடும் குழுக்கள் இறையியல் தாண்டிய முக்கியத்துவத்தைப் பெற்றன. அரசு மதத்தை ஏற்றுக் கொண்டபோது அரசின் விவாதங்கள் ஒரு நிர்வாக விசயமாக மாறியது. விளக்கமான பிரிவுகள் நாட்டின் சட்டங்களுக்கு முக்கியமானது. உதாரணமாக, பிரெஞ்சு பேரரசில் கிறிஸ்தவர்கள் மற்றும் அடிமைகள் குறித்த இனவெறி சட்டமானது வரைமுறைப்படுத்தப்பட்டது. யூதர்களிடையேயான திருமணம் மற்றும் சொத்து உறவுகள் போன்றவையும் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதனால், குழுக்கள் மற்றும் அரசு அங்கீகரிகாரத்தின்படி அவற்றை வரிசைப்படுத்தி, அதற்கேற்ப அவற்றை நிர்வகிப்பதற்கான தேவை எழுந்தது. அதற்காகப்; பல்வேறு மதங்கள் குறித்து அறிந்து கொள்ள முயற்சி செய்தனர்.
முகலாயர்கள் காலத்தில் இங்கே வந்த ஐரோப்பிய மிஷனரிகள் கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம், புறசாதியினரின்; நம்பிக்கைகளும்; நடைமுறைகளும்; உட்பட உலகில் நான்கு மதங்கள் உள்ளன என நம்பினர். இம் மதங்களுக்கிடையே பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், கிறிசுதவம், இசுலாம் மற்றும் யூத மதக் கடவுள்களை வணங்காதவர்கள் அனைவரும் பிசாசு வழிபாடு கொண்டவர்களாகவும் புறசாதியாராகவும் கருதப்பட்டனர். அவர்களை ர்நயவாநற எனவும் அழைத்தனர். ஸ்சுபானிச் மிசனரிகள் பலதெய்வம் மற்றும் சிலை வழிபாடு குறித்த மாறுபட்ட நடைமுறைகளைப் படிக்க ஆரம்பித்தனர். அத்தோடு, அவர்கள் ஏற்கனவே நம்பிய புறசாதி என்கிறதொரு மதத்தையும் உருவாக்கியது, அது விரைவில் "யென்டூ" ஆனது.
ஆரம்பகால பிரிட்டிஷ் கிழக்காசியவாதிகள் இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டனர். கி.பி. 1770 களின் முற்பகுதியில் வங்காளத்தின் கவர்னர் யெனரல் வாரன் காசுடிங்சு, ஒரு குழுவை நியமித்தார்.
பார்ப்பனர்களாலான அந்தக் குழுவானது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான ஒரு சட்டத் தொகுப்பை வடமொழியிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்தது. மேலும் அவர்கள் அதனைப் பிறருக்கு ஏற்புடைய வகையில் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. குடிமையியல் விசயங்களில் முசுலிம்கள் அல்லாத மக்களை இந்தச் சட்டத் தொகுப்பு மூலம் நிர்வகித்திடும்; ஒரு யோசனையாகவும் அது அமைந்தது. 1776 ல், பிரிட்டிச் கீழைத்தேயர்களான நதானியேல் பி கால்கெட் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பினை முடித்து, அதுவொரு சட்டத் தொகுப்பாக்கப்பட்டது. இது யென்டூ சட்டங்கள் அல்லது பண்டிதர்களின் கட்டளைகள் என அழைக்கப்பட்டது.
இப்பல்வேறு பயன்கள்; ஒரு மதத்தையோ அல்லது அத்தோடு தொடர்புடைய மக்களையோ குறிப்பிடவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய பயணிகள்; முகலாயர்களின் ஆட்சி காலத்தையும், ஆரம்ப கால காலனித்துவ நிர்வாகம் குறித்தும்; பதிவு செய்துள்ளனர். அவர்கள் உயர்சாதி மக்களின் சமய நம்பிக்கைகளையே குறிப்பாகப் பார்ப்பனர்கள் பற்றியே அறிந்திருந்தனர். ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் இடைத்தரகர்களாகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருந்தனர். காரணம் பார்ப்பனர்கள் பிற சாதி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அவர்கள் தவறாகக் கருதினர்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர், இத்துணைக் கண்டத்தில் இந்தியா முழுமைக்குமான ஒரு மதமில்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விசயமாகும். இதற்கு அடிப்படையாகப் பல காரணங்கள் இருந்தன. சாதிய வேறுபாடுகள், பாலியல், சமூகம் சார்ந்த பண்பாடுகள் போன்றவை சிலவற்றைச் சிலவற்றிலிருந்து ஒதுக்கித் தள்ளியது. சிலருக்கென அது ஒதுக்கவும் பட்டது. பல்வேறு சாதிகள் அவற்றிற்கிடையேயான பிரிவுகள், பழங்குடியின மக்கள் ஆகியோர் இத் துணைக் கண்டத்தின் ஒரு மதக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. இன்றும் கூட இதற்கான சான்றுகள் இல்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர் சாண்ட்ரியா பி ஃப்ரீடாக் 1980 ல் எழுதிய கட்டுரையில், “எப்போதும் இந்தியர்கள் தங்களை அவர்களின் சாதியால் அடையாளப்படுத்திக் கொள்பவர்களாகவே இருந்தார்கள்” என்று குறிப்பிடுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் இந்திய துணைக் கண்டத்தில் சாதி என்பது மாறாமலேயே தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
சாதியானது இத் துணைக்கண்டம் முழுவதும் மக்களைக் குழுக் குழுவாகப் பிரித்திருந்ததோடு அது நிறுவன மயப்படுத்தப்பட்டதொரு கொள்கையாகவும் இருந்தது. காலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்தில், பெரும்பான்மையினரான ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மிலேச்சர்களாகவும் தர்மகீனர்கள் அல்லது தர்மம் இல்லாத மக்களாகவும் பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினரால் நடத்தப்பட்டனர். ஆக, சாதியின் அடிப்படையில் எல்லா மக்களுக்குமுரிய ஒரு மதம் இங்கிருந்திருக்கும் எனக்; கருத முடியாது.
இதைப் பொருட்படுத்தாமல், பிரிட்டிச் அறிஞர்கள் இந்த மக்களின் மதத்தைக் குறிப்பிட இந்து என்ற சொல்லை இந்தியாவில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். உண்மையில், அவர்கள் கலாச்சார பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் மட்டுமே இச்சொல்லால் குறிப்பிடுகின்றனர். கீழைத் தேயவியலாளரும் உலோகவியலாளருமான எச்.எச். வில்சன்; சுரங்க வேலைகளுக்காகக் கல்கத்ததாவில் நியமிக்கப்பட்டார். அவர் 1819 ல் வங்காள மொழியில் ஒரு சமஸ்கிருத அகராதியை வெளியிட்டார். அந்த அகராதி “இந்து” என்ற சொல்லை ஒரு மதம் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. 1827 ஆம் ஆண்டில், வில்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துக்களின் நாடகங்களை வெளியிட்டார். அதில், இங்கே "இந்து" என்பது இஸ்லாமியரல்லாத மக்களையும் இத்துணைக் கண்டத்தில் அமைந்துள்ள கலாச்சாரங்களளையும் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், இத்துணைக் கண்டத்தின் “பிரிவுகள்” குறித்த இரண்டு சொற்பொழிவுகளை ஆற்றினார். இவை 1840 ல் இந்துக்களது மத பிரிவுகளின் சுருக்கம் எனும் பெயரில் வெளியிடப்பட்டது. அதில் அவர் தனித்துவமானதும் தொடர்புடையதுமான பிரிவுகள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து விவரிக்கிறார். இந்தப் பிரிவுகள், நம்பிக்கைகள் கூட பெரும்பாலும் வைணவர்கள், சைவர்கள் மற்றும் பசுபதர்கள் போன்ற ஆதிக்க - சாதி குழுக்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் “இந்து" என்ற வார்த்தையின் பயன்பாடானது முக்கியமாக உயர் சாதியினரின் நம்பிக்கைகள் பற்றிய விளக்கமாகக் காணப்பட்டதைக் காண முடியும்.
1850 களிலிருந்து நிர்வாகப் பயன்பாடுகளுக்காக ஒரு மதத்தைக் குறிக்க “இந்து என்கிற வார்த்தைப் பயன்பாடு ஆரம்பமானது. குறிப்பாக 1850 ல் உருவாக்கப்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் சட்டத்தின் மூலம் இது ஆரம்பமானது. அதுவரையிலும் இந்து என்னும் வார்த்தையானது பரவலான விளக்கங்களைக் கொண்ட ஒரு சொல்லாகக் காலனித்துவ இனவியலாளர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், “இந்து" என்று குறிப்பிடப்பட்ட மக்கள் இந்து என்கிற வார்த்தை தங்களுக்கான வார்த்தை எனக் கருதியிருக்கவில்லை. தாங்கள் ஒரு குறிப்பிட்ட அதாவது இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் கருதியிருக்கவில்லை. இந்த வார்த்தையின் குறைவான பயன்பாடானது பூர்வீக மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான விளைவுகளையும் ஏற்படுத்துவதாக அமையவில்லை. உயர்சாதி தகவலாளியின் நம்பிக்கைகளே பிரித்ததானியர்களுக்கு ‘இந்து’ என்ற சொல் உருவாக்கத்திற்குக் காரணமாயிற்று. இப்போது அவர்கள் ஒரே மதத்தைத் தங்களால் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, சுரண்டப்பட்ட, விலக்கப்பட்ட மக்களோடு பகிர்ந்து கொள்வதை எதிர்கொண்டனர். அப்போது அவர்கள் இந்த வார்த்தையைப்; பயன்படுத்துவதை எதிர்த்து மாற்று பெயர்களைத் தேடத் தொடங்கினர். இதன் மூலம் உயர் சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் சொந்தப் பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்தவும், தங்களை ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்வதோடு, அவர்களைத் தாழ்ந்தவர்களாக வைத்திருக்கவும் முடியும்; என்று கருதினர்.
சாதிய தடைகளை மாற்றும்; சட்டமானது, சட்டத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மற்றும் இசுலாம், கிறித்தவத்திற்கு மாறிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. நீதித்துறை சார்ந்த இந்த நடைமுறைகள் உயர் சாதியினருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. நவீன சட்டத்தின் மூலமாகப் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த பொதுசன மத, சாதிய ஒடுக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவிலான மத மாற்றத்தின் மூலம்; விடுதலை பெற்றதாக இந்தச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது, “இந்து” என்கிற இந்தச் சொல்லைச் சட்டம் பயன்படுத்துவதை ஆதிக்கச் சாதிகள் எதிர்த்தன. நன்கு அறியப்பட்ட விச்ணுபுவ பிரம்மச்சாரி எனும் போதகர், “இந்து" என்ற சொல் மிலேச்சர்களைக் குறிக்கிறது எனக் கண்டனம் செய்தார்.
அறிஞர் வீணா நரேகல் பிரம்மச்சாரியா “தனது வெறுப்பு உமிழும் பேச்சின் மூலம் மிகப் பெரிய மக்கள் கூட்டத்தைக் கவர்பவர் என்று கூறுகிறார். அவர் 1864 ல் வேடோக்த தர்மபிரகாஷா அல்லது வேதங்களுக்குப் பொருத்தமான தர்மம் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அவர் “வேதோக் தர்மா" என்ற வார்த்தையை "இந்து - தர்மம்" என்பதற்கு மாற்றாகக் கருதினார். அக்காலத்தில் பல ஆதிக்க - சாதி தலைவர்களும் ஐரோப்பிய காலனித்துவ சக்திகளுக்கு ஆதரவாக வேதங்களில் பொருத்தமானவற்றைத் தேடி முன்னிறுத்தி வந்தனர். வேதங்கள்; குறித்த சில விசயங்களை இந்தியாவிடமிருந்து ஐரோப்பிய மனங்கள் பெற்றுக் கொண்டன. உண்மையான வேத மொழி இத்துணைக் கண்டத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தப்பிப் பிழைத்திருந்தது என்பது மிகவும் ஆர்வமூட்டுவனவாகும்.. குறிப்பாக “ஆரியர்கள்" பற்றியது. இத்துணைக் கண்டத்திற்கு வெளியே யூரேசிய ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து அவர்கள் இடம்பெயர்ந்து வந்தது குறித்து ஐரோப்பிய அறிஞர்கள் ஆச்சரியப்பட்டனர். மேலும் அவர்கள் தங்களுக்கு நெருக்கமான மொழியைப் பேசியதும் அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.
ரிக் வேத கால “ஆரிய" கலாச்சாரம் நீண்ட காலத்திற்கு முன்பே இன்றைய பாகிஸ்தான் பகுதியில் முடிவுக்கு வந்து விட்டது. ரிக் வேதம் மற்றும் யஜூர் வேதங்கள் அதனை இயற்றியவர்களின் தாங்கள் விட்டு வந்த நிலத்திற்காக ஏங்குகின்றன. அந்த நிலம் இந்தத் துணைக்கண்டம் அல்ல. தங்களது தாயகத்திலிருந்து அதாவது, யூரேசிய சுடெப்பி பகுதியான தென்கிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகரும் வரைபடத்தை வேத சடங்கு முறையான “அக்னிகாயனா" குறிப்பிடுகிறது. தங்கள் சாதிய “அதிகாரத்தைத்;" தக்க வைத்துக் கொள்ளவும், தொலைவிலுள்ள தங்களது நிலத்திற்கான ஏக்கத்தைப் போக்கிக் கொள்ளவும், அந்நிய நிலமான இத்துணைக்கண்டத்தில் தங்களது அரசியல் அதிகாரத்தைப் பறவும் இந்த நூல்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
பிரிட்டிசாரைத் திருப்திபடுத்த இந்தப் புதிய மதத்தை (இந்து மதம்) ஏற்றுக்; கொள்ள உயர் சாதி தலைவர்கள் முயற்சித்தனர் என்பது சுவாரசியமான விசயமாகும். பிரம்மச்சாரி, அரவிந்தர், தயானந்த சரஸ்வதி, மற்றும் விவேகானந்தர் ஆகியோர்களுக்கு முன்னோடியாக இருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிற உயர் சாதி தலைவர்களுடன்; சதியை எதிர்த்ததோடு அவர் நிபந்தனைக்குட்பட்ட விதவை மணத்திற்காகவும் வாதிட்டார். காலனித்துவம் ஏற்கெனவே சதியை ஒரு குற்ற நடைமுறையாக அறிவித்திருந்தது. அவர் சைவ உணவைச் சாப்பிடும்படியும் வலியுறுத்தினார். அது மக்களது நம்பிக்கைகளுடன் கற்பனை செய்ய முடியாதபடி முரண்பட்டதாக இருந்தது. வேத அல்லது ஆரிய மூதாதையர்கள் கூட இறைச்சி உணவை விரும்பிச் சாப்பிட்டவர்களே. பிரம்மச்சாரி வேதங்கள் கூறும் வேத இயற்பியல், வேத வேதியியல் மற்றும் வேத காலப் பயணத்தின் ஆதரவாளராகவும் இருந்தார். விவேகானந்தர், சார்லசு டார்வின் தனது பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைக் கண்டு பிடிக்கும் முன்னரே ஆரியர்கள் அதனைக் கண்டுபிடித்திருந்தனர் என்கிற கருத்தை முன் வைத்தார். அரவிந்தர் தயானந்தாவின் சிந்தனையை அதாவது “அக்காலத்திலேயே வேதங்களில் விஞ்ஞானம் பற்றிய உண்மைகள், மதம் பற்றிய உண்மைகள் அடங்கியுள்ளன. வேதங்கள் போல அருமையானது எதுவும் இல்லை என்று எழுதினார். மேலும் அவர், “நான் எனது சொந்த நம்பிக்கையைக் கூடக் கூறுகிறேன். வேதத்தில் உள்ளது போல நவீன விஞ்ஞான உண்மைகள் உலகில் வேறு எதிலும் இல்லை என்றும் கூறினார்.
வேதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு காலனித்துவ எயமானர்களின் அதிகாரத்தில் பங்கு கொள்ள உயர்சாதியினரால் வேதங்கள் பயன்படுத்தப்பட்டன. 1893 ல் பிரிட்டிச் காலனியின் பாராளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் மோகன்தாசு காந்தி உயர் சாதி இந்தியர்கள் ‘ஆரியர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். “ஆங்கிலேயர்களும்;; இந்தியர்களும்;; இந்தோ ஆரியம் என்னும் பொதுவான ஒரே மூலத்திலிருந்து வந்தனர்” என்றும் காந்தி எழுதினார். மேலும் அவர், பொதுவான இந்த இனத் தோற்றமானது இயற்கையாகவே ஆங்கியேர்களையும் இந்தியர்களையும் ஒன்றிணைத்து முந்தையர் கையில் இந்தியர்களின் எதிர்காலத்தை ஒப்படைத்துள்ளது என்றும் கூறினார்.
இதற்கிடையில், தயானந்த சரசுவதி தனக்குச் சொந்தமான பழமையான மதத்தைச் சுயமாகக் கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார். அது ‘ஆர்ய தர்மம்’ என்று அழைக்கப்பட்டது. அவர் அது வேதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென விரும்பினார். அதுவரையிலான பார்ப்பனிய அடிப்படையைக் கொண்டு அதனை உருவாக்கினார். பெனாரசின் மரபு வழியிலான பார்ப்பனர்கள் தயானந்தாவை ஓர் அச்சுறுத்தலாகப் பார்த்தார்கள். அவர்கள் வேறொரு இயக்கத்தைத் தொடங்கினர். அது சனாதன தர்மம் அல்லது நிலையான ஒழங்கு முறைகள் என அழைக்கப்பட்டது. கிறிஸ்தவம் மற்றும் முசுலிம் அல்லாத மக்களுக்கான புதிய தேசிய மதமாக இது உருவாக்கப்பட்டது. காந்தி தன்னை ஒரு “சனாதான இந்து” என்று அடையாளப்படுத்திக் கொண்டார்.
“சனாதன தர்மம் என்பது சில இந்து தேசியவாதிகளின் தேர்வாக இருந்தது. அத்தோடு “இந்து" என்பது ஒரு பாரசீக சொல் என்பதால் அதுவொரு மிலெச்சா சொல். இந்தப் புதிய சொல் அதனுடன் எந்தவொரு தொடர்புமில்லாமலும்;, அவர்களது திட்டத்தைப் பாதிக்காமலும்; இருப்பதிலும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தோலயிசுட்டான வில்கெல்ம் கல்பாசின் கருத்துப்படி, ‘தர்மா என்பது முதன்மையானதாவும் அடிப்படையானதாகவும் வர்ண தர்மத்தைக் கொண்டுள்ளது. இது சாதிகளின் படிமுறை மற்றும் வாழ்க்கையின் கட்டங்களை அடிப்படையானதாகக் கொண்டுள்ளது. மேலும் “இந்த தர்மமானது ‘ஆரியர்கள் மற்றும் ‘ஆரியர்கள் அல்லாதவர்கள் என வேறுபடுத்தி, ஒவ்வொரு சாதிகளையும் ஒன்றுக்கொன்று வேறுபடுத்துகிறது.
மேற்கத்திய சிந்தனையை எதிர்கொள்ளவும், மிசனறிகளுடனான போட்டி காரணமாகவும் உயர்சாதியினர் தர்மம் என்பதை ஒழுக்கம் என நன்னெறி சார்ந்த புதுவிளக்கத்தை அளித்தனர். அதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். அதனால்தான் கல்பாசு என்பவர் கிறித்தவத்திற்கு எதிரான சுயநிலை நாட்டலே ‘சனாதன தர்மம்” என்றார்.
இத்துணைக்கண்டத்தில் ஆதிக்கச் சாதிகளைவிட ஒடுக்கப்பட்ட சாதிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இவர்கள் காலனித்துவவாதிகளை எதிர்கொண்டது முற்றிலும் வேறாக இருந்தது. காலனித்துவம் அவர்களுக்கு விடுதலை வழங்கியதை அவர்கள் கண்டடைந்தனர். மத மாற்றம், பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள்,சனநாயகப்பூர்வமான தேர்தல் செயல்முறைகள், கல்வி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை காலனியாட்சி வழங்கியது. இதன் விளைவாக அவர்கள் முதல் முறையாக அனைவரையும் போன்ற சம உரிமைகளை - சுதந்திரங்களை, நடக்கக் கூடாதெனக் கூறிய அதே தெருக்களில் நடப்பதற்கான உரிமைகளை, எல்லோரையும் போல கிராமப்புறக் கிணற்றிலிருந்து குடிநீர் பெறும் உரிமையை, உழைப்புக்கான ஊதியம் கேட்கும் உரிமையை அடைந்தனர்.
சிறுபான்மை உயர் சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தங்கள் மக்களாகக் கருதவில்லை. அவர்களைத்; தீண்டத்தகாதவர்கள் என விலக்கினர். அவர்கள் சாதி படிசமுறையை அங்கீகரித்து பாரம்பரியமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலைகளை அவர்கள் செய்ய வேண்டுமென விரும்பினர். ஒடுக்கப்பட்ட சாதி பெரும்பான்மையினர் காலனியம் உருவாக்கிய வாய்ப்புகளில் தங்கள் வாய்ப்புகளைக் கைப்பற்ற நடந்த முயற்சிகளை இந்திய வரலாற்றாசிரியர்கள் மிகக் குறைவாகவே எழுதியுள்ளனர். காலனித்துவ ஆட்சி சட்டத்தின்கீழ், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒடுக்கப்பட்ட சாதிகளின்; அரசியல் விழிப்புணர்வு திட்டங்கள், கல்வி இயக்கங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்களின் மூலம் முனனெடுத்துச் செல்ல முடிந்தது
பிரிட்டிஷ் இந்திய இராணுவம் சாதியத் தொழில்களுக்கு வெளியே ஒடுக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாகப் பறையர் போன்ற சமூகங்களுக்கான வேலை வாய்ப்பைச் சென்னை இராயதானியில் திறந்து விட்டது. வங்காளத்தின் நாமசூத்திரர்கள் மற்றும் மகாராச்ட்டர மகர்கள் போன்ற சமூகங்களுக்கு இது சமூக ஏற்றத்தை வழங்கியது. பி.ஆர்.அம்பேத்கரின் தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரும் பிரிட்டிச் படையில் பணியாற்றியவர்களே. இவர்கள் இருவரும் மகர் இனத்தைச் சார்ந்தவர்கள்.
சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் சட்டமானது மத மாற்றத்தைப் பரவலாக இத்துணைக் கண்டம் முழுவதும் பரவிட வழி செய்தது. உயர் சாதியினர் இந்த மத மாற்றமானது தங்களது ஆதிக்கத்திற்கு எதிரான அச்சுறுத்தும் உத்தி எனக் கணித்தனர். இன்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலும்; மத மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் உள்ளன.
1840 க்கும்; 1850 களுக்கிடையே, மெட்ராசு பிரசிடென்சியில் உயர் சாதியினர், மத மாற்ற அலைகளைத் தடுப்பதற்காக இரண்டு கூலிப்படை அமைப்புகளை உருவாக்கினர். அவை, விபூதி சங்கம், அல்லது துாய(புனித) - சாம்பல் கழகம், மற்றும் சாது வேத சித்தாந்த சபா, அல்லது வேத இறையியலைப் பரப்புவதற்கான சபை. இன்றுவரை கிறிசுதவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் மெட்ராசு பிரசிடென்சி சாட்சியமாக உள்ளது. உயர் சாதி அமைப்புகள் மத மாற்றங்களுக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறை மூலம் பதிலளித்து வந்தன. குறிப்பாக, இப்பகுதிகளில் நாடார் சமூகம் பொதுசன மத மாற்றத்தை மேற்கொண்டபோது அவர்களுக்கு எதிராகக் கடுமையான வன்முறைகள் ஏவப்பட்டன. இதுபோன்ற நிகழ்வுகள் பிரிட்டிசாரைச் சாதிய எற்றத்தாழ்வுகளைத் தடை செய்யும் சட்டத்தை இயற்றிட கட்டயாப்படுத்தின.
காலனித்துவ ஆட்சியானது நவீன கல்விக்கான வாய்ப்புகளைத் திறந்து விட்டது. அதுவரை இத் துணைக்கண்டத்தில் கல்வியானது பார்ப்பன வேதங்கள், சடங்குகள் போன்றவற்றையே மையமாகக் கொண்டிருந்தன. ஆனால், அவை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மறுக்கப்பட்டிருந்தன. பார்ப்பனர்கள் அல்லாதவர்களின் கருத்துக்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தன. காலனிய கல்வியானது அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கல்வியாக இருந்தது. ஆங்கில மொழி, நவீன நீதித்துறை செயல்பாடுகள், வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் போன்றவை வேதங்களை அடிப்படையாகக் கொண்ட உயர் சாதியினரின் பழைய மதிப்பு முறைகளை அகற்றி புதிய முறைகளை அறிமுகம் செய்தது. மேலும், தர்மசாசுதிரங்கள், சமஸ்கிருதம் மற்றும் சாதி ஒழுங்கு போன்றவைகளையும் தகர்த்தது.
காலனியாட்சி மற்றும் மிஷனரி கல்வி முறை கண்டெடுத்த மிக முக்கியமான ஆளுமை யோதிராவ் புலே ஆவார். இவர், 1827 ல் மகாராச்டிராவில் ஒடுக்கப்பட்ட மாலி என்கிற சாதியில் பிறந்தார். இவர்களது பாரம்பரிய தொழிலாகத் தோட்த் தொழில் அமைந்திருந்தது. புலே புனேவிலுள்ள ஸ்(சு)காட்டிச் மிசன் உயர்நிலைப் பள்ளியிலிருந்து ஆங்கிலக் கல்வியைப் பெற்றார். சாதிய அமைப்பின் சிதைவு காலனியவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர விபத்து என்று அவர் கருதினார். ஆங்கிலக் கல்வியானது எங்களைப் பாட்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டது. மகாராஷ்ட்டிர பார்ப்பனர்களே எங்கள் நிலங்களிலிருந்து வெளியே செல்லுங்கள். எந்த முட்டாள் உங்கள் ஆலோசனைகளைக் கேட்பான்” என புலே எழுதினார். கடவுளுக்கு நன்றி! பாட்களின் ஆதிக்கத்தை எதிர்க்க வீரமான ஆங்கிலம் எங்களுக்கு உதவியது.
புலேவின் முற்போக்கான விவாதங்கள் “ஆரிய” சொற்பொழிவு ஆதரவாளர்களுக்கு எதிராகத் திரும்பியது. இவர்களில் ‘பாலகங்காதர திலகர்’ குறிப்பிடத்தக்கவர். உயர் சாதி ‘ஆரியர்கள்’ இந்தியாவின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை விட மிகுந்த ஒடுக்குமுறையாளர்களே என்பதை உறுதியுடன் கூறினார். அவர் ஆரிய இடம்பெயர்வு கோட்பாட்டை, இந்தியாவின் பழங்குடி மக்களை வென்ற ஒரு வெளிப்புற சக்தியாக விளக்கினார். ஆரியர்கள் இனரீதியாக உயர்ந்த, நாகரிக சக்தி அல்ல. காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையாளர்கள் என்று பேசினார் புலே. ஆரியர்கள் இந்தியாவைத் தாக்கிக் கைப்பற்றி வேதங்களின் கருத்துக்களைத் திணித்ததன் ஓர் அடையாளமாகப் புலே ராமரைக் கருதினார். அவர் தனது மனைவி சாவித்ரிபாயுடன் இணைந்து இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித்துகள், சூத்திரர்கள், பெண்கள் ஆகியோர் கல்வி கற்றிட வலியுறுத்தினார்;. தனது அறிவின் மூலம் சாதி மற்றும் பழமைவாத வடிவங்களுக்கு எதிராக நிறுவனம் சார்ந்த நடைமுறைகளை மேற்கொண்டார். இத் துணைக்கண்டத்தில் உண்மையான சமூகப் புரட்சியின் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் அவர் தலைமை தாங்கினார்
புலேவின் சத்யசோதக் சமாச் என்கிற அமைப்பானது உயர் சாதியினரின் ஆர்யா சமாச் அமைப்பின் சமகாலத்திலும், பிரார்த்தனா சமாச் அமைப்புக்கு முன்னரும் தோன்றிய சீர்திருத்த அமைப்பாகும். இவ்வமைப்பானது ஒரு பொதுசன இயக்கமாக மாறி, பின்னாளில் இந்திய தேசியத்திற்கு காங்கிரசு செய்ததைச் செய்தது. புலே, 1875 ஆம் ஆண்டில் சத்யாசோதக் தின்பந்து என்கிற செய்தித்தாளை நிறுவினார்.
இல் திலகர் கேசரி என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார். யோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் பெண் கல்வி மற்றும் சமத்துவத்தின் ஆரம்பகால ஆதரவாளர்களாக இருந்தனர். அப்போது திலகர், “இந்துத்துவா"வின் அடிப்படையில் பெண்களுக்கான பொது இடத்தை மறுப்பது அவசியம் என அறிவித்தார். பதினொன்று வயது சிறுமியின் கணவருக்கு எதிராக வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. அதிக வயதான கணவர் பதினொன்று வயதேயான சிறுமியோடு உடலுறவு கொள்ள முற்பட்டபோது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அச்சிறுமி இறந்தார். கல்வியாளரான டோரதி எம் ஃபிகியூரா என்பவர், “திலகர் அந்த மனிதனைப் பாதுகாக்க முயன்றார். அத்தோடு பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதையும் எதிர்த்தார். சிறுமி சிதைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியதை, “இயற்கையின் ஆபத்தான குறும்புகள் எனக் கூறினார் திலகர் என எழுதுகிறார். அறிஞர் பரிமல இராவ் 2008 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் “ரக்மாபாய் மற்றும் ரமாபாய் ஆகியோர் மீது திலகர் “இந்து மதத்தின் வளர்ந்து வரும் கருத்துக்களில் அதாவது எல்லா நடைமுறைகளுக்கும் வருண தர்மம் என்று கூறப்படும் கோட்பாட்டுத் தர்மத்திற்காகவும் பெண்கள் கீழானதொரு சார்பு நிலைய ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் மிகப்பெரும் அச்சுறுத்தல் எனக் கண்டார். திலகரின் சிந்தனையின்படி “ஓர் இந்துப் பெண் என்பவள் கீழ்ப்படிந்த மகளாக, மருமகளாக இருக்க வேண்டும். இது சீர்திருத்தவாதிகளின் விடுதலையான, சுதந்திரமான பெண் என்ற கருத்துக்கு நேர் எதிர்மறையானது என இராவ், கூறுகிறார். எனவே காலனித்துவ ஆட்சியின் தேசியவாத கோட்பாடானது ஆணாதிக்கம் மற்றும் சாதிய நலன்களை குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான புலேவின் ஒவ்வொரு முயற்சியும், பார்ப்பனர்கள் தலைமையிலான இந்திய சாதிய ஒழுங்கு மற்றும் சமூக அமைப்பிற்குச் சவால் விடுவதாக இருந்தது. 1818 ஆம் ஆண்டு முதல், உயர்ந்து வரும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் எழுச்சிக்கு எதிராக, உயர் சாதியினர் தங்கள் சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றனர். இந்தப் புத்துயிர் அமைப்பில் முக்கியமானவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்தனர். பிரம்ம சமாச் மற்றும் பிரார்த்தனா சமாச், குறிப்பாக இந்து மகாசபை போன்ற அமைப்புகளோடு ஒப்பிடுகிறபோது பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகப் புலே மேற்கு இந்தியாவில் வெற்றி பெற்றார் எனலாம். மகாராச்டிராவில் பார்ப்பனரல்லாத இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற போன்சுலே வம்சத்தின் சாக, கேசவ்ராவ் யெட்டே மற்றும் தின்காராவ் யவல்கர் போன்ற பல தலைவர்கள் மீதும் தாக்கம் செலுத்தியவராகப் புலே இருந்தார்.
வரலாற்றாசிரியரான ரோசாலிண்ட் ஓ கன்லோன் 1985 ல், “கிட்டத்தட்ட முழுமையாக, கடந்த காலம் பற்றிய மீட்டுருவாக்கங்களை, சக்தி வாய்ந்த அடையாளங்களோடு விவித ஆடை அலங்காரங்களையும் வழங்குபவராகப் புலே இருந்தார். இதுவொரு அடிப்படை கருத்தியலை உருவாக்கிட பயன்பட்டது. இந்தச் சுயவுணர்வு, வரலாறு மற்றும் பரந்த கலாச்சார மரபுகளுடன் கூடிய பரந்த அளவிலான ஒருங்கிணைப்பு திறன்மிக்க பார்ப்பனர்கள் அல்லாத குழுக்களை உருவாக்கியது. இது பழமையான சமூகக் கலாச்சாரங்களுக்கு மாற்றான புதியதொரு அடையாளமாக மாறியதோடு, தனக்கானதொரு புதிய வழியில் தீவிரமான சமூகச் சீர்திருத்தத்தின் கருவியாகவும் அமைந்தது. இதற்கெல்லாம் காரணமாகப் புலேதான் அமைந்தார்” என எழுதுகிறார். ஒடுக்கப்பட்ட சாதிகளின் முக்கிய தலைவர்களாகக் கேரளாவிலிருந்து அய்யங்காளி, சகோதரன் அய்யப்பன் ஆகியோர் தோன்றினர். தேசியவாத இயக்கம் என்பது உயர்சாதிகளின் சதித்திட்டம் என்று அய்யப்பன் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அத்தோடு, “நான் ஒரு தேசியவாதியாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன். ஏனென்றால் தேசியவாதம் என்பது ஏமாற்று வேலை. அது மேல்தட்டு மக்களின் சாதிய மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்கான ஓர் உத்தி” என்றார்.
பார்ப்பனரல்லாத இயக்கமானது மெட்ராசு பிரசிடென்சியில செயல்பட்டு வந்த நீதி கட்சியின் வடிவமைப்பை எடுத்துக் கொண்டது. இவ்வியக்கம் திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகவும் இருந்தது. திராவிட இயக்கமானது இத்துணைக் கண்டத்தில் ஆரியர்களே இந்துக்கள் என்கிற கருத்தைப் பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிப்பதைக் கண்டது. பெரியார் என அழைக்கப்படுகிற ஈ.வெ..ராமசாமியின் கீழ் இவ்வியக்கமானது பார்ப்பனியத்திற்கு எதிராகவும் அவர்களது இந்து மதத்திற்கு எதிராகவும் போராடியது. இவ்வியக்கமானது, தமிழக அரசியலை அடுத்த நூற்றாண்டிற்குரியதாகவும் வடிவமைத்தது.
காலனித்துவ ஆட்சியின் ஆச்சரியப்படத்தக்க தனித்துவமான நடைமுறைகள் புத்தியீவிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பதோடு அவர்களின் வரலாறுகள் நவீன அரசியலின் புற அடையாளங்களைக் கொண்டதாகக் காணப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சாதிய அடக்குமுறை மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் பிரிவுகள் அரசியலின் மைய கேள்வியாக மாறியது. அப்போது உயர் சாதியினர் சிறுபான்மையினராக இருந்ததால் அவர்கள் எந்த எதிர்ப்புமில்லாத வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். அச்சூழலில் ஏதாவதோரு மதத்தின் அடிப்படையில் அவர்களை அடையாயாளப்படுத்த வேண்டும். ஒரே ஆன்மீக வாழ்க்கை முறையைக் கொண்ட பெரும் மக்கள் தொகையினரை ஒரே மதமாக குறிப்பிட வேண்டும். ஓர் இந்துவின் உண்மையான வாழ்க்கையானது காலனிய நிர்வாகத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஆரம்பமானது. அதன் பின்னரே இந்து என்பது உண்மையில் ஒரு மதம் என்கிற அளவில் கணக்கெடுப்பில் இடம்பெற ஆரம்பித்தது.
1872 முதல் எவ்விதப் பொருத்தமும் அற்ற ‘இந்து’ என்கிற பதத்தைப் பெரும் தொகையினராக இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த மக்களைக் குறிப்பிட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பிரிட்டிசு(ஸ்) அதிகாரிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மதம் என்பதன் கீழ், பௌத்தம், கிறித்தவம், இசுலாம், இந்து மற்றும் பிற என்கிற ஐந்து விருப்பங்கள் வழங்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் இத்துணைக் கண்டத்தின் நடைமுறையிலிருந்த மத வேறுபாடுகள் குறித்து அறிந்தவர்களாக இருந்தனர். அத்தோடு மதம் குறித்த இந்தியர்களின் மனநிலையால் குழப்பமும் அடைந்தனர். பெரும்பாலான இந்தியர்களிடம் தங்கள் மதத்தை நிரப்பும்படி கேட்டபோது, அவர்கள் தங்களின் சாதியையோ உள்ளூர் சமூகத்தையோ என்று பதிவிட்டனர்.
யார்யார் இந்து என்று அடையாளம் காணும் பொருட்டு மக்கள் தொகை கணக்கீட்டாளர்கள் சில அளவுகோல்களையும் சரிபார்ப்பு பட்டியல்களையும் உருவாக்கினர். ஆனால், அவை இந்திய மக்களிடம் காணப்பட்ட பன்முகத்தன்மைகளையும், பல்வேறு நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும்; பல்வேறு சுய அடையாளங்களையும் வெளிப்படுத்தின. இவ்வேறுபாடுகள் எப்படி ஒருங்கிணைந்த ஒரே மதமாக உருவாக்கப்பட்டன என்கிற அனுமானங்களையும், அதன் ஆரம்பத்தையும் நிரூபித்தன. கிழக்கில் வாழும் ‘இந்துக்கள் என அழைக்கப்படும் மக்கள் இறைச்சியை விட காய்கற்களை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தனர். ஆனால், வேறு இடங்களில் வாழ்ந்த அதே இந்துக்கள் கண்மூடித்தனமாக இறைச்சி உணவை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தனர். சிலர் ஒரேயொரு கடவுளை வணங்குபவர்களாகவும், இன்னும் சிலர் பல கடவுளர்களை வணங்குபவர்களாகவும் இருந்தனர். சிலர் பார்ப்பன பூசாரிகளை விரும்புகிறவர்களாக இருந்தனர். சிலர் தங்கள் சொந்தச் சாதி பூசாரிகளை விரும்புவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் எப்போதும் எந்தப் பூசாரிகளையும் வேண்டாதவர்களாக இருந்தனர். இந்துக்களில் சிலர் இறந்தவர்களை அடக்கம் செய்யும் நடைமுறைகளைக் கொண்டவர்களாகவும், சிலர் எரியூட்டும் நடைமுறைகளைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.
சில ‘இந்து தெய்வங்கள் பிற இந்து தெய்வங்களை விட தூய்மையற்றவர்களாக இருந்தனர். இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் அசாதாரணமான எண்ணிக்கையில் மதப் பிரிவுகள் காணப்படுவதை எண்ணி கலக்கமுற்றனர். அத்தோடு இது, மேலும் சாதி வகைகளை நகல் எடுப்பதாகவும் இருந்தது. இது பார்ப்பனிய கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்டதாக அமைந்திருந்தது. யார் இந்து என்கிற வரையறையின்படி அடையாளம் காணப்பட்ட இந்துக்களைவிட, இந்துக்கள் அல்லாத மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை இக்கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. தங்களது மதம் குறித்துப் பதிலளித்த மக்களின் எண்ணிக்கையானது பல்வேறு மதங்களுக்கான அவர்களது உரிமைகளைக் கோரியது. உதாரணமாக, மைசூர் மக்கள் தொகை கணக்கெடுப்பானது சைவம், மாதவாச்சாரிசு, லிங்காயத்துகள், சுவாமி நாராயணன், இராமானுயர்கள், வல்லபச்சார்யாக்கள், பிரிச்மார்கிசு(ஸ்) மற்றும் கபீர் பாந்திசு போன்ற மதங்களை வெளிப்படுத்தியது. அதுபோல், கூர்க் மக்கள் தொகை கணக்கெடுப்பானது, ஸ்ரீவைஷ்ணவா, சமணர்கள், பௌத்தர்கள், விஷ்ணுவைட், கூர்க்சு(ஸ்), பார்ப்பனர், சு(ஸ்)மார்த்தா மற்றும் சிவிட் என்று தங்களை அறிவித்துக் கொண்டதைக் காட்டியது. ஆனால் யாரும் தங்களை ‘இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
எனவே, உண்மையான இந்து யார் என்பதன் உண்மையான உள்ளடக்கதைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்கிற உணர்வானது பிரிட்டிச் அதிகாரிகளை வேதனைப்படுத்தியது. ஆனாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் இந்த வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஆகவே, 1872 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பானது ‘இந்து மதத்தை ஒரு மதப் பிரிவாகக் கருதுவதில் தோல்வி அடைந்ததாக அவர்கள் கருதினர். ‘இந்து மதத்தை அதன் தனித்துவமான பண்புகள், விதிமுறைகள், மற்றும் அதன் திட்டவட்டமான உறுப்பினர் அடிப்படையில் அதனை ஒரு மத வகையாகக் கைக்கொள்ள முடியவில்லை. இதனை அவர்கள் ஒரு தோல்வியாகவே கருதினர். 1872 ல் வங்கக் கணக்கெடுப்பின்போது, கென்றி பெவர்லி என்பவர், “இந்து எனும் சொல் சாதாரணமாக முகமதியர்கள் அல்லாதவர்கள் என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியதை ஏற்றுக் கொண்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்து அல்லாத பெரும்பான்மை மக்களைக் குறிப்பிட பயன்படும் ஒரு வசதியான பெயராக ‘இந்து என்கிற பெயரைக் கண்டடைந்தனர். அத்தோடு அப்பெயர் நல்லதொரு எதிர்மறை பெயராக இருப்பதாகவும் அதிகாரிகள் கருதினர்.
எதிர்மறை கருத்துக்கள் ஏதோ இல்லை என்று குறிப்பிடுவதைத் தவிர, வேறெதையும் அதிகமாகக் குறிப்பிடப் போவதில்லை. உதாரணமாக, நாம் ‘அவை அனைத்தும் பசுக்கள் அல்ல என்பதைக் குறிப்பிடுவதோடு “ஊழற என்னும் வரையறையானது அதாவது “ே-ஊழற” – என்பது புத்தகங்கள், விண்மீன் திரள்கள், மாடு சாணம், இசைக்குழு ஆகியவற்றையும்; குறிக்கலாம். எதிர்மறையான இந்தக் கருத்தானது, கிறிசுதவர்கள், யூதர்கள் அல்லது முசுலிம்கள் அல்லாத மக்களை ‘இந்து’ எனக் குறிப்பிட உதவியது. இன்றும் இந்து என்பதற்கான பொதுவான பண்பினைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. இந்து என்கிற கருத்தாக்கத்தைப் பரப்புவதிலும் அதன் முன்னேற்றத்திலும்; இந்த எதிர்மறை கருத்தின் விசித்திரமான சக்தியை இன்று நாம் பார்க்கிறோம். வாழ்க்கையின் எந்தவொரு களமும் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்படக் கூடாது. காரணம் அதை எதனோடும் இணைக்க முடியும்.
அடுத்தடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புகள் இந்தச் சூழ்நிலையில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. 2005 ல் மைக்கேல் கான் என்னும் சமூகவியலாளர் “1881 ல் பஞ்சாபின் கணக்கெடுப்பு ஆணையர், டென்சில் இப்லெசுடன் அவர்கள், ‘இந்து என்னும் சொல்லைப் பொருள் எதுவுமில்லாத ஒரு ‘திருட்டு எனப் பதிவு செய்துள்ளதைத் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
சமவெளி இந்துக்கள் அருகாமையிலுள்ள இசுலாமியர்களின் புனிதர்களை வணங்கி வந்தனர். மலைகளில் வாழ்ந்த இந்துக்கள் பழங்குடிகளின்; பிசாசுகளையும் தெய்வங்களையும் வணங்கினர். விவசாயிகளின் கடவுளர்கள் புனிதமானது, புனிதமற்றது என இரு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டனர். இந்தியாவில் பெரும்பாலான இந்துக்களின் தெய்வங்கள் கண்டிப்பானவையாகவும், ஒரு பிராந்தியத்தில் அல்லது ஒரு பகுதியில் மட்டுமே வணங்கப்படுகிறவர்களாகவும் இருந்தனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள், முசுலிம், கிறிசுதவர்கள், பௌத்தர்கள் அல்லாதவர்கள் என்கிற வகையை அழுத்தமாகப் பதிவு செய்தனர். இது இந்து என்னும் ஒரு தனி மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆனால் அது பரவலான மதங்களையும் மக்களையும் உள்ளடக்குவதாகவும், மற்ற மதங்களுக்குள் அடக்கிவிட முடியாதபடி நெகிழ்ச்சித் தன்மைகள் மூலம் வேறுபட்டிருந்த பல்வேறு மக்களையும் இது தன்னுள் அடக்கிக் கொண்டது.
1890 களில், பல உயர் சாதி இந்தியர்கள், இந்தப் புதிய மதம் தங்களையும்; பிரிதிநிதித்துவப் படுத்துவதை உணர்ந்தனர். ஆர்ய சமாயமானது அதன் இதழ்களில் இந்த ‘மிலேச்சர் பதத்தை எதிர்த்து எழுதியது. அத்தோடு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்கிற ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொண்டது. ‘இந்து என்பது ஒரு தவறான குறிச்சொல். இதை வைத்துக் கொண்டு பல்வேறு மதங்களைக் கொண்ட குழுக்களை இந்துக்களாக அடையாளம் காண முடியாது என்பதை ஆரிய சமாயம் சரியாகப் புரிந்து கொண்டிருந்தது.
இந்துக்கள் பற்றிய ஆரிய சமாயத்தின் இந்த எண்ணமானது வெகு வேகமாக மாறியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களிலிருந்து தாங்கள் சிறுபான்மையினராக மாறும் வாய்ப்பபிருப்பதை உணர்ந்து கொண்ட ஆரிய சமாயம் காங்கிரசு மற்றும் பிற அமைப்புகளில் இருந்த உயர்சாதி தலைவர்களை அணி திரட்டியது. பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்ததால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள், நவீன நீதித்துறை நடவடிக்கைகள் போன்றவை மட்டும்; இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரசு போன்ற உயர் சாதியினர்களது அமைப்புக்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்திருக்காது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதிநிதிகளின் பங்களிப்பை அரசாங்கத்தில் விரிவுபடுத்திட பிரிட்டிஷ் நிர்வாகம் முயன்றது. இதற்கான அளவுகோலாக மக்கள் தொகை எண்ணிக்கையாக இருந்தது. ஆகவே, குறைந்த மக்கள் தொகை எண்ணிக்கையானது அரசாங்கத்தில் கல்வி உட்பட தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகள் மற்றும் உயர்ந்த நன்மைகளில்; பாதிப்பை ஏற்படுத்தும். அத்தோடு தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்தக் கொள்ள பெரும்பான்மை என்பது மிக அவசியம் என்பதையும் உணர்ந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உள்ள+ர் நிர்வாக அமைப்பானது காலனியாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அணி திரளத் தொடங்கிய பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட சாதிகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இத்துணைக்கண்டத்தில் குறைந்தபட்சம் சமவுரிமையை நிர்வாக அமைப்புகளில் பெற்றனர். இந்தப் புள்ளி விவரங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட - சாதி பெரும்பான்மையைப் திசை திருப்பி, சம உரிமையின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் தலைகீழ் அதிகாரத்தைத் தடுக்கலாம் என உயர்சாதியினர்; கருதினர். மேலும், காலனித்துவ நிர்வாக நடைமுறை விதிகளுக்குள் உயர் சாதிகளான தங்களைத் தக்க வைத்துக் கொள்வதோடு ஒடுக்கப்பட்ட சாதிகளையும் தங்களுக்குக் கீழ் தக்க வைத்துக் கொள்ளலாம் எனக் கருதினர்.
1901 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்து, சில முசுலீம் அமைப்புகள் முசுலிம்களுக்கான தனி வாக்காளர் தொகுதிகளைக் கோரின. 1906 ல் மற்றொரு முசுலீம் அமைப்பானது அரசு வேலை வாய்ப்பில் ‘விகிதாசார பிரதிநிதித்துவ கோரிக்கையை முன் வைத்தது. அதாவது, நகராட்சி வாரியங்கள், நீதித்துறை பணிகள், பல்கலைக்கழகத்தின் செனட்டுகள் மற்றும் சிண்டிகேட் போன்ற பதவிகளில் விகிதாச்சார உரிமைகளைக் கோரியது. சுருக்கமாகக் கூறுவதானால், அரசாங்கத்தின் முழு அமைப்பிலும் முழுமையான பிரதிநிதித்துவத்தைக் கோரியது எனலாம். “1909 ஆம் ஆண்டில் மிண்டோ - மோர்லி சீர்திருத்தங்கள் முசுலிம்களுக்குத் தனி வாக்காளர்கள் தொகுதிகளை வழங்கின. அதனடிப்படையில் முசுலிம்களுக்கான தனி வாக்காளர் தொகுதியை வழங்குவது. அதில் அவர்களையே வாக்களிக்கச் செய்வது என்பது சிறுபான்மையினருக்கான தனி வகுப்புவாத வாக்காளர்கள் தொகுதி என்கிற எண்ணத்தை அனைத்து சாதிகளின் மனதிலும் ஏற்படுத்தி விடுவதோடு, ஆதிக்க சாதி இந்து சமூகத்தால் நடத்தப்படுகிற ஓர் அரசாங்கத்தில் அம்மக்கள் மூழ்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என அஞ்சியது” என எலீனர் சில்லோயிட் அவர்கள் டாக்டர் அம்பேத்கரும்; அவரது மகர் இயக்கமும் என்கிற நூலில் குறிப்பிடுகிறார். 1911 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாகக் காலனிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக இருந்த எட்வர்ட் ஆல்பர்ட் காய்ட் அவர்கள், யாரெல்லாம் இந்து என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிற பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட விரும்பி இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த பல்வேறு மாகாண தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார்.
ஒருவர் உண்மையான இந்துவா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்காக எடுக்கப்படும் வரையறைகளை வகுக்கும் முயற்சியாக இந்த ஆவணம் அமைந்தது. பார்ப்பனர்களின் மேலாதிக்கம், வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள் ‘இந்து கடவுள்களை வணங்காதவர்கள், பூசாரிகளாகப் பார்ப்பனர்களை அணுகாதவர்கள், உயர் சாதியினரால் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுகிறவர்கள், கோயில்களில் அனுமதிக்கப்படாதவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், பசுவை வழிபடாதவர்கள் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களைக் கணக்கெடுக்குமாறு மாகாண கண்காணிப்பாளர்களிடம் அவர் இச்சுற்றிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டார். 1911 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இம்முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தப் பரந்த நிலப்பரப்பில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்த மக்களிடம் காணப்பட்ட பண்பாடுகள் மற்றும் நடைமுறைகளோடு ஆதிக்கச் சாதிகள் குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு எந்தத் தொடர்பும் காணப்படவில்லை என்பதை இவ் ஆவணம் வெளிப்படுத்தியது. ஆதிக்க சாதிகள் குறிப்பாகப் பார்ப்பனர்கள் பரந்த இக்கண்டத்தில் வாழ்ந்த மக்களிடம் புவியியல் தூரங்களின் அடிப்படையில் குறைவான அல்லது அதிகமான நெறிமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் பகிர்ந்து கொண்டவர்களாகக் காணப்பட்டனர். அதாவது ‘இந்துக்கள்’ என்று கணக்கிடப்பட்ட மக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பது தெளிவானது.
1911 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்புகளின்படி “மத்திய மாகாணங்களிலும், பெராரிலும் இந்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட மக்களில் கால் பகுதி மக்கள் பார்ப்பனர்கள் மற்றும் வேதங்களின் அதிகாரத்தை, மேலாதிக்கத்தை மறுப்பவர்களாக இருந்தனர். கால் பகுதி மக்கள் பெரிய இந்து கடவுள்களை வழிபடுவதில்லை என்பதோடு, பார்ப்பன பூசாரிகளுக்குச் சேவையும் செய்யவில்லை. மூன்றில் ஒரு பங்கு மக்கள் கோவில்களுக்குச் செல்வது மறுக்கப்பட்டு வந்தது. மக்களில் கால் பகுதியினர் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுகின்றனர். அத்தோடு பெரும்பான்மையான மக்கள் எப்போதும் இறந்தவர்களை அடக்கம் செய்பவர்களாக இருக்கிறார்கள். சிலர் இறந்தவர்களை எரிப்பதைக் கட்டாயமான ஒன்றாகக் கருதினார்கள். ஐந்தில் இரண்டு பேர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாகவும் இருந்தனர்” என்பது கண்டறியப்பட்டது.
இக் கண்டுபிடிப்புகள் பல்வேறு ஆதிக்க - சாதி தலைவர்களையும், பல்வேறு குழுக்களையும், காங்கிரசில் இருந்தவர்களையும் ஆர்ய சமாயம் மற்றும் சனாதன தர்மசபாவுக்குள் ஒன்றிணைத்தன.
1911 மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஆதிக்க சாதிகளை நிலைகுலைய வைத்தது. “தற்போது இந்து மதத்தைக் கிளர்ச்சியூட்டும் ஒரு கேள்வி இந்த (தீண்டத்தகாத) சாதிகள் இந்துக்களாகக் கணக்கிடப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதே. தாமசு கோல்டெர்னஸ் என்கிற ஒரு பிரிட்டிச் அரசு ஊழியர், 1912 ல் தான் எழுதிய ‘இந்தியர்களும் அவர்களது பிரச்சினைகளும் என்னும் புத்தகத்தில் “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பதிலானது உறுதியாக எதிர்மறையானதாக இருந்திருக்கும். இப்போதும் கூட நாட்டின் பழமைவாத உணர்வுகள் அவர்களை ஒதுக்கி வைப்பதாகவே உள்ன என்று கூறுகிறார்.
ஆர்ய சமாயத்தின்; தலைவர் லாலா லச்பத் ராய் 1915 லேயே சுற்றறிக்கையின் விளைவுகள் பற்றியும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் எழுதினார். அவர் “மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் சட்டத்தால் தாழ்த்தப்பட்ட சாதிகளை இந்து மதம் இழக்கும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்று எழுதினார். லய்பத் ராய் உண்மையான ‘இந்துக்கள் என்பவர்கள் உயர் சாதிகளே. உயர் சாதியினர் அல்லாதவர்களை உயர் சாதி ‘இந்துக்கள் தங்களைப் போன்ற இந்துக்களாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களைத் தொடக் கூட மாட்டார்கள்” என்று நேர்மையாக அறிவித்தார். ஒரு அதிகாலை வேளையில் காசியின் கல்விமான்களாகிய பண்டிதர்கள் ஆறு கோடி மக்களின் நம்பிக்கையை இழக்கும் வாய்ப்பு தங்களின் மரபு வழிகளில் உள்ளன என்பதை அறிந்து கொண்டனர். ஆனால், அரசும் அதன் ஆலோசகர்களும் அவர்கள் இந்துக்கள் அல்ல. மற்ற இந்துக்கள் அவர்களை இந்துக்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைத் தொடக் கூட மாட்டார்கள் என்று கூறினர்.
‘இந்துக்கள் என்கிற விளையாட்டின் மூலம் தாழ்த்தப்பட்ட சாதியினர்களின் பெரும் மக்கள் தொகையினர் இந்து என்கிற வரையறைக்கு வெளியே புத்திசாலித்தனமாக நிறுத்தப்பட்டார்கள். தங்களது ஆதிக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், தங்களுக்குக் கீழ் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்க வேண்டும் என்கிற இரண்டையும் மறைக்க உயர் சாதியினர் இந்து என்கிற சொல்லைப் பராமரித்து வந்தனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ‘நம்பிக்கையை இழத்தல் என்பது ஏற்படும் என்பது குறித்து லய்பத் ராய் வருத்தம் கொண்டார். இந்தச் சூழலில் நிபந்தனை மற்றும் அளவீடுகளின் மூலம் சகிப்புத்தன்மை, நம்பிக்கை போன்ற பொய்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் இந்து என்கிற உரிமை கோரப்பட்டது.
ஆதிக்க சாதிகளின் மூர்க்கத்தனமான போராட்டங்களால் கெய்ட்டின் அறிக்கையானது திரும்பப் பெறப்பட்டது. இச்சுற்றறிக்கைக்கு மதிப்பளித்து மோடர்ண் ரிவியூ என்கிற பத்திரிகையில் இதுவொரு புதிய ‘இந்து’ மதம் எனப் பொருள்படும்படி பதில் சொல்லப்பட்டது. இக்கட்டுரையின் ஆசிரியர் ‘இந்துக்கள் என்கிற இந்தப் புதிய மதத்திற்கான வரையறைகளை வரையறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த வரையறையில் குறிப்பாகப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் இருந்தனர். ‘தீண்டத்தகாதவர்கள்’ மீது இந்து என்ற பட்டத்தைத் திணிப்பதைப் ‘பார்ப்பனர்கள் உட்பட பிற உயர்சாதி இந்துக்கள் எவரும் எதிர்க்கவில்லை. பார்ப்பனிய பார்வையிலான இந்த அளவுகோல்களைக் கீழ்வருமாறு விளக்கினார்.
இந்துக்கள் அல்லாதவர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாதபடிக்கு இந்து சமூகத்தின் அடிப்படை பண்பாகப் புதிய இந்து மதத்தில் சிலர் உயர்சாதியாகவும், சிலர் ஒடுக்கப்பட்ட சாதிகளாகவும், சிலர் சுத்தமானவர்களாகவும், சிலர் சுத்தமற்றவர்களாகவும் …. இரண்டு முறை பிறக்காதவர்கள் அல்லது த்வியாக்கள் இல்லாதவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் பிரம்மாவின் கால்களிலிருந்து பிறந்தவர்கள் என்றும், மரபு வழியிலான ஒரு புராணிக இந்து கருதுகிறார். இதுவொரு முக்கிய பண்பாகும். தற்போதிருக்கும் மனித உடலின்; பாதங்கள் மிகவும் பயனுள்ளவையாகவும், ஆனால் வாழ்க்கைக்கு அவசியமில்லாதவையாகவும் இருக்கின்றன. ஒரு மனிதன் அவரது கால்களுக்குப் பிறகும் வாழ்கிறார் அல்லது கால்கள் வெட்டப்பட்ட பின்னரும் வாழ்கிறார். ஆனால் எதுவுமில்லை. ஆனால் மனித உடலின் ஒரு பகுதியாகக் கால்கள் அல்லது பாதங்கள் இல்லையென ஒரு முட்டாள் கூறுகிறான். இதுபோன்ற மதிப்பீடுகள் இல்லாத இந்துக்கள் திவிஜாக்களாக இருக்கிறார்கள்…
அதாவது, ‘இந்து சமூகத்தின் மிக முக்கிய உடல் உறுப்புகளாகவும் மதத்தின் உரிமையாளர்களாகவும் உயர்சாதிகள் உள்ளனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் சொந்தமானவர்களாகவும், புதிய மதத்தின் உரிமையை யாருக்கு வழங்க வேண்டும் என்கிற உரிமையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அத்தோடு ஒடுக்கப்பட்ட சாதியினர்; இந்த உரிமையைப் பெறுவதில் விருப்பம் அற்றவர்களாகவும் இருந்தனர்.
கெய்ட்டின் சுற்றறிக்கையைத் தொடர்ந்து, ஆர்ய சமாயத்தினர் ஒடுக்கப்பட்ட சாதியினரை இந்து மதத்திற்கு மாற்றிட ஆக்ரோசமாக முயன்றனர். தலித்துகள், முசுலிம்கள் மற்றும் கிறிசுதவர்கள் ஆகியோர்களைப் புத்துயிர் பெற்ற வேத மதத்தின் மூலம் சுத்திகரிப்பு அதாவது மதச்சடங்கு மூலம் சுத்திகரிக்க ஓர் இயக்கத்தை ஆரம்பித்தனர். உயர் சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் நிலையானது மதத்திற்குள் இத்தன்மையதாகத்தான் இருந்தது. அதுபோல சமமற்ற இணையான மதத்தவர்களை இணைப்பதற்கும் முன் சுத்திகரிப்பு சடங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
பாதிப்பிற்குரிய நிச்சயமற்ற இத்தன்மைகளைப் பிரிட்டிஷ் நிர்வாகமானது இருபதாண்டுகள் ஒதுக்கி வைத்தது. அத்தோடு தேவையான அளவு கவனிக்கவும் செய்தனர். கெய்ட்டின் அறிக்கையை அடக்கும் பொருட்டு உயர்சாதிகளின் ‘இந்து என்னும் வரையறையை வலிமையாக நிறுவினர். இறுதியாக பெரும்பான்மை மக்களின் மதமாகவும் இந்து மதத்தை விவரித்தனர். 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக இருந்த யே.டி. மார்டன் ‘இந்து மதம் என்பது ஒரு மதம் என்கிற அடிப்படையில் திருப்தியற்ற ஒரு வகையாகும். ஆனால் அது இருக்கும் என வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார். அடிப்படையில் ஒரு மதமாக அல்லது முதலிடத்தில் இந்துத்வம்; காணப்படவில்லை. இந்தச் சொல்லானது ஒரு நாட்டையும், இனம் மற்றும் ஒரு சமூக அமைப்பையும் குறிக்கிறது. ‘இந்து என்பது தெளிவற்றதும் வெறுமையான எதிர்மறை கருத்துகளைக் குறிப்பதாகவும் இருந்தது. இதுவே அதன் அரசியல் பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாகவும் அமைந்தது. பெயரளவில் ஒற்றுமையைக் குறிப்பதாகவும் இருந்தது. அதேவேளை உண்மையில் சாதி அடிப்படையிலான பாகுபாடும் காணப்பட்டதோடு ஆழ்ந்த சாதிய போட்டி மனப்பான்மைகள் நிறைந்ததாகவும் இருந்தது. அமெரிக்க அடிமைத்தனமானது கறுப்பர்களை மதம் சார்ந்த அடிமைகளாக் உரிமை கோரியது. ஆகவே, வெள்ளையர்களுடனான தினசரி வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கறுப்பர்கள் பிணைக்கப்பட்டிருந்தனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, அதற்கான முன்னேற்பாடுகளாக அதாவது மக்கள் அனைவரும் கணக்கெடுப்பின்போது ‘இந்து என்று பதிலளிக்கும்படி பல்வேறு பொருள்களின் அடிப்படையில்; தயார் செய்யப்பட்டனர். 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, “இந்து சபாவின் பிரச்சாரமானது பல மடங்கு விளைவுகளை ஏற்படுத்தியது. சில கச்சாரிசுகள் விருப்பத்துடன் இந்து மத்திற்குத் திரும்பினர். ஏனையவர்கள் கணக்கெடுப்பாளர்கள் மூலம் அந்த வகையை ஏற்றுக்கொள்ளும்படி மனமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், மக்களின் குழப்பம் மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி கணக்கெடுப்பாளர்கள் அவர்களை இந்து எனப் பதிவு செய்து கொண்டனர்” என அறிஞர் கென்னத் யோன்சு கூறுகிறார். 1941 மக்கள் தொகை கணக்கெடுப்பில்; இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்திருப்பது வருத்தமளிப்பதாக இருந்தது. இந்து மகா சபாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை அதன் வாசகர்களுக்கு, “இந்து மத ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒட்டுமொத்தமாக இந்தக் கருத்தாக்கத்தின் மூலம் நம்; அரசியல் நலன்களைப் பாதுகாத்திட வேண்டும். அது நடந்திடவும், பரசுபர நலன்களோடு இருக்கவும், நாங்கள் இந்துக்களாக எங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளோம்” என்று அறிவறுத்தியது.
ஆக்டேவியோ பாசு என்பவர் “இந்து மதமானது மெதுவாகவும் இடைவிடாமலும் மகத்தான வெளிநாட்டுக் கலாச்சாரங்களையும், தெய்வங்களையும், மொழிகளையும், நம்பிக்கைகளையும் ஒரு போலவே யீரணித்துக் கொண்டது எனக் குறிப்பிட்டார். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, உயர் சாதியினர் ‘இந்து மதம் என்கிற அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றே பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்தனர். அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மக்களை இந்துவாக மாற்றினர். அதேவேளை இந்து மதம் மாற்று ஒரு மத மாற்றமல்ல எனப் பாசாங்கு செய்யுங்கள்” எனவும் கூறி வந்தனர்.
உயர்சாதியினர் தங்களது தலைமைத்துவத்தின் கீழ் தங்களது அதிகாரத்தைப் பரிமாறிக் கொள்ளும் வண்ணம் காங்கிரசில் கூட்டணி நலன்கள் ஆர்வத்துடன் பேணப்பட்டன. அரசியலமைப்பு சனநாயகத்தில் அரசியல் கொள்கைகள், பொருளியல் கொள்கைகள் மற்றும் சமூக சமத்துவ கொள்கைகளால்; சமூக அடிப்படையிலான சாதிய வரிசை முறையானது பிழைத்திருக்காது என அவர்கள் கருதினர். எனவே, காலனித்துவ நிர்வாகத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளால்; உயர் சாதியினர் மிகப்பெரிய கண்டனத்தைச் சந்தித்து வந்தனர். காங்கிரசு கூட்டணியின் கீழ், உயர் சாதி தலைவர்கள் காலனித்துவ சீர்திருத்தங்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். ஆனால் அதேவேளை அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் வளர்ந்து வரும் போராட்டங்களையும் எதிர்கொண்டு வந்தனர்.
மத அறிஞரான யான் யாவோசு கருத்துப்படி, “பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ வாக்குவாதமானது மேற்கு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருந்தன…. ஒடுக்கப்பட்ட சாதிகளின் அணி திரட்டலானது இந்து மதக் கட்டமைப்பை, சட்டப்பூர்வமான இந்து மத கருத்தியலை மறைமுகமாக முன்னேற்றுவதற்குச் எதிராக இருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், புலேவின் அறிவுசார் தலைமை மற்றும் கோலாப்பூர் மகாராயா சாகிவின் ஆதரவுடன் சாதியத்திற்கு எதிரான இயக்கங்கள் சீராகவும் உறுதியாகவும் தங்களது பலத்தையும் சாதி எதிர்ப்பையும் மேற்கு இந்தியாவில் அதிகரித்து வந்தன. வளர்ந்து வரும் சாதிகளுக்கு எதிரான இயக்கமானது ஒரு வலுவான சாதி எதிர்ப்பு உரையாடலை நிகழ்த்தி வந்தது. எனவே, சமூக மேலாதிக்கம் மற்றும் அரசியல் செல்வாக்கைப் பெற முற்படும் பார்ப்பன அமைப்புகளிடமிருந்து ஆக்கிரோசமான எதிர்வினைகளைச் சந்தித்து வந்தது. ‘இந்துத்துவா என்ற வார்த்தையைப் பயன்படுத்திய முதல் நபர்களில் ஒருவரான திலகர் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுடன் இந்த மோதல் கடுமையாக நடைபெற்றது.
1920 களில், பார்ப்பனரல்லாத இயக்கமானது தேர்தல் வெற்றிக்கான வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கியது. எண்ணற்ற கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் வெளியீடுகள் மூலமாகத் தாழ்த்தப்பட்டோரின் மிகப்பெரிய அணிதிரட்டல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அத்தோடு அவர்கள் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களையும், சமூக நிவாரண மையங்களையும் நடத்தி வந்தனர். மேலும் திலகரால் நடத்தப்பட்ட கணபதி திருவிழாவுக்கு எதிராகத் தங்களது சொந்த சத்ரபதி திருவிழாவையும் நடத்தினர். அவர்கள், புனே நகராட்சி, நீதிமன்றங்கள் மற்றும் வீதிகளில் பார்ப்பன அமைப்புகள் செலுத்தி வந்த ஆதிக்கத்திற்கு எதிராக வெற்றிகரமாக மோதியதோடு, உயர்சாதியனரின் அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாகவும் விளங்கினர். சமூகவியலாளர் கெயில் ஓம்வெட் “இந்த மோதல்களின் விளைவாக ‘பார்ப்பனர் அல்லாதவர்கள் மற்றும் ‘தேசியவாதிகள்’ இடையே கலவரம் மூண்டதாகப் பதிவுகள் உள்ளன எனக் கூறுகிறார்.
அம்பேத்கர், தனது உத்வேகத்தின் மூல ஆதாரங்களில் முக்கியமான ஒருவராகப் புலேவைக் கருதினார். “நவீன இந்தியாவின் சிறந்த சூத்திரர்களை, இந்து மத உயர் சாதிகளை விட தாழ்த்தப்பட்ட சாதிகளாக, அடிமைகளாக உருவாக்கியவர்கள் யார்? அந்தச் நற்செய்திகளைப் பரப்பியவர்கள் யார்? வெளிநாட்டவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதை விட இந்தியாவுக்குச் சமூக சனநாயகம் என்பது மிகவும் முக்கியமானது” என அம்பேத்கர் விவரித்தார். 1920 இல்,சாகீவின் உதவியுடன், தனது 29 ஆவது வயதில், ‘மூக்நாயக் என்ற வாராந்திர பத்திரிகையை அம்பேத்கர்; தொடங்கினார். அம்பேத்கர் இடையிடையே இயக்கங்களுடனான தனது தொடர்பை வைத்துக்; கொண்டதோடு, சட்ட வல்லுநராகவும் 1920 களில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். 1926 ஆம் ஆண்டில், திலகியவாதிய பார்ப்பனரான கேசரி மற்றும் திலகரின் மகன் ஆகியோர் மூன்று பார்ப்பனர்கள் அல்லாத தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். அந்த அவதூறு வழக்கிலிருந்து பார்ப்பனர் அல்லாத தலைவர்களைப் பாதுகாத்ததோடு, அவதூறு வழக்குத் தொடர்ந்தவர்களைப் பிரிட்டிச் அரசாங்கத்தின் மூலம் சிறையில் அடைக்கவும் செய்தார்.
உயர்சாதிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்வினைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி இயக்கங்களின் முன்னேற்றம், சாதிக்கலப்பு போன்றவற்றால் தங்களது சமூகத்தின் மீதான பாரம்பரிய ஆதிக்கத்தை இழந்து விடுவோமோ என உயர்சாதிகள் பயந்தனர். யாவோசு “ஒடுக்கப்பட்ட சாதிகளின் அணி திரட்டலானது இந்து மத அமைப்புகளின் சித்தாந்தத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்தது” என எழுதுகிறார். இந்துத்துவ இயக்கமானது, இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகப் பல அரசியல் சூழ்ச்சிகளைச் செய்ததோடு, போலி சீர்திருத்த நிகழ்ச்சிகள் என்கிற ஒரு வழிகளையும்; கண்டு பிடித்தனர். சமூக கோட்பாட்டாளர் ஐயாசு அகமது “மகாராச்டிராவில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் புலே அல்லது அம்பேத்கரின் தலைமையில் தோன்றின. இதனால், உயர் சாதிகளின் பின்னடைவு தீவிரமடைந்தது. அதில் ஆர்.எசு.எசு முதலிடத்தில் இருந்தது என எழுதுகிறார். உயர் சாதிகளின் சமூக ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந்து என்கிற அடையாளத்தோடு பெரும் மக்கள் தொகையை ஒருங்கிணைப்பதற்காக முசுலிம்களை எதிரியாகக் கட்டமைக்க உயர் சாதியினர் திட்டமிடத் தொடங்கினர். இதை இந்தியாவால் தவிர்க்க முடியவில்லை.
1930 களில், புகழ் வாய்ந்த மோகன்தாஸ் காந்தியும் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் பார்ப்பனர் அல்லாத இயக்கங்களுடன் பிரிவினையைக் கையாண்டவாறே பிரிந்தும்; ஒன்றிணைந்தும் காங்கிரசு இயக்கத்தை நடத்தி வந்தன. பம்பாய் பிரசிடென்சியில் இந்த இணைப்பு இல்லை என்றால், காங்கிரசானது வெகுயன அரசியலுக்கான வழியைக் கண்டுபிடித்திருக்க முடியாது.
காந்தி குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் கிளர்ச்சியைக் கையாள்வதில் திறமை வாய்ந்தவர் என்பதை நிரூபித்தார். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் உயர் சாதிகளுக்குமிடையே ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டார். இதன் மூலம், சாதி எதிர்ப்பு இயக்கங்களைப் பெரும்பாலும் அவரால் சீரழிக்க முடிந்தது. சர்வதேச அளவிலான அவரது புகழானது இனம் மற்றும் சாதி குறித்த அவரது மேலாதிக்க சிந்தனைகளுக்கு உதவிகரமாக இருந்தது. அத்தோடு, ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவான அவரது தெளிவான சிந்தனைகளை மறைக்கவும் உதவியது. அக்காலகட்டத்தில் காந்திக்குச் சவால் விடுபவராக அம்பேத்கர் மட்டுமே இருந்தார்.
1924 இல், கேரளாவில் பொது சாலைகளிலும், கோவில் தெருக்களிலும்; ஒடுக்கப்பட்ட சாதிகள் செல்லும் உரிமைக்கான கிளர்ச்சிகள் ஆரம்பமாகின. பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஈழவர்கள் பொதுச் சாலைகள் மற்றும் கோவில் தெருக்களை ‘மாசுபடுத்துவதாகக் கருதினர். இதனால் வைக்கம் நகரிலுள்ள சிவன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளைத் தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்திட தடை செய்தனர். அக்கால கட்டத்தில், பார்ப்பன எதிர்ப்பு இயக்கமானது இத்துணைக் கண்டத்தின் தெற்கில் வலுவாக இருந்தது. அப்போது வைக்கமானது திருவிதாங்கூர் சமசுதானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதேவேளை திருவிதாங்கூருக்கு அருகிலுள்ள சென்னை இராயதானியானது நீதிக் கட்சிகளின் ஆட்சியில் இருந்தது. இப்போராட்டத்தின்; நியாயத்தன்மையைக்; காப்பாற்றுவதற்காக இந்த இயக்கத்தில் பங்கேற்பதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியிருக்கவில்லை. காந்தி இவ்வியக்கத்திற்குத் தன்னைத் தானே ஒரு தலைவராக இருத்திக் கொண்டார். அத்தோடு, உள்ளார் உயர் சாதி மக்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தத் தொடங்கினார். மேலும், ‘இந்துக்கள் அல்லாதவர்கள்’ இந்த இயக்கத்தில்; ஈடு;படக்கூடாது எனவும் வலியுறுத்தினார். யார்ய் யோசப் போன்ற தலைவர்கள் இவ்வியக்கத்திலிருந்து விலகும்படி கேட்டுக் கொண்டார். இதன் மூலம் காந்தி பல மதங்களின் கூட்டணியை உடைத்தெறிந்;தார்.
1927 இல் அம்பேத்கர், ஆயிரக்கணக்கான தலித்துகளுக்குத் தலைமை தாங்கி மகாராஷ்டிராவின் மஹத்திலுள்ள பொதுக் குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக அணிவகுத்துச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த உயர் சாதிய கும்பல்கள் இவ் ஊர்வலம் முடிந்த பின்னர் மிகப் பெரும் கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர். அத்தோடு மந்திரத்தையும், பசு மூத்திரத்தையும் பயன்படுத்தி பார்ப்பனர்கள் குளத்தைச் சுத்தம் செய்தனர். இதற்கிடையில், அதே வருடத்தில், காந்தி தனது ‘யங் இந்தியா’ என்னும் இதழில் “சத்தியத்திற்கான இடைவிடாத தேடல் மூலம் கண்டடையப்பட்ட வர்ணாசிரம சட்டமானது ஓர் அற்புதமான இடைவிடாத தேடலுக்கான கண்டு பிடிப்பாகும்” என்று எழுதினார். அதே ஆண்டின் பிற்பகுதியில் அந்த இடத்தை மீண்டும் பார்வையிட அம்பேத்கர் தீர்மானித்தபோது உயர் சாதியினர் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை உயர்நீதி மன்றமானது, பொதுக் குளத்திலிருந்து குடி நீர் எடுக்க விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது என்று ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
1930 மற்றும் 1932 காலகட்டமானது அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான மோதலின் உச்சகட்ட காலமாக இருந்தது. இந்தியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்காக மூன்று வட்டமேசை மாநாடுகள் பிரிட்டிச் அரசாங்கத்தால் நடத்தப்பட்டன. முதல் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி வாக்காளர்கள் உரிமையினைக் கண்டிப்பாக வழங்க வேண்டுமென அம்பேத்கர் கோரினார். ஏற்கெனவே காங்கிரசு அறிவித்திருந்தபடி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாட்டிலிருந்து வெளியேறியது. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான தனி வாக்காளர் தொகுதியானது இத்துணைக் கண்டத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பது வரலாறு. தாழ்த்தப்பட்டோரைத் தனி வாக்காளர்களாக அறிவிப்பதன் மூலம் அவர்கள் மட்டுமே வாக்களித்துத் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என அவர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால் காந்தி இக்கோரிக்கையைப் பிடிவாதமாக எதிர்த்தார். 1932 ஆம் ஆண்டு பிரிட்டிச் பிரதம மந்திரி ராம்சாய் மெக்டொனால்ட் அவர்களுக்குக் காந்தி “இந்து மதத்தை அழித்திட கையாளப்படும் விச ஊசியாகவே நான் இதை உணர்கிறேன்” எனக் கடிதம் எழுதினார். ‘இந்து மதம்’ மூலம் ஒடுக்கப்பட்ட சாதியினரின் மீதான உயர் சாதியினரின் ஆதிக்க ஆட்சியையே காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். அடிப்படையில் இது, இத்துணைக் கண்டத்தில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களையும், தினசரி நடைமுறை கடமைகளையும் ஆதரிக்கும் சனாதன தர்மத்தையே குறிக்கிறது.
அதே ஆண்டில் பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கையில் “இந்து மதத்தில் இருக்கும் தீண்டத்தகாதவர்கள் மீதான மத அளவுகோல்கள் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று காந்தி ஒப்புக் கொண்டார். மேலும், “குறிப்பிட்டுக் கூற முடியாத வண்ணம் இந்து மதத்தில் தங்களைத் தாங்களே பிணைத்திருக்கும்படியான ஏதோவொரு நுட்பமான தன்மையை இந்து மதம் கொண்டிருக்கிறது” என்றும் காந்தி கூறினார். இருப்பினும், ஆகசுட் 1932 இல் வல்லபாய் படேலுடனான உரையாடலில் காந்தி, தனி வாக்காளர்கள் பற்றிய தனது உண்மையான கவலைகளில் சிலவற்றைக் வெளிப்படுத்தினார். இந்தக் கோரிக்கையானது “ரத்தக்களரிக்கு வழி வகுக்கும்" என்றும், “தீண்டத்தகாத குண்டர்கள் முசுலிம் குண்டர்களுடன் இணைந்து ஒரு பொதுவான காரணத்தை உருவாக்கி சாதி இந்துக்களைக் கொல்வார்கள்" என்றும் காந்தி கூறினார்.
ஆங்கிலேய அரசு தலித்துகளைத் தனி வாக்காளர்களாக அறிவித்தது. இதனால் காந்தி தான் உண்ணா விரதமிருந்து சாகப் போவதாக அறிவித்தார். இதனால் அம்பேத்கர் கட்டாயமாகத் தனி வாக்காளர் தொகுதியைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மதன்மோகன் மாளவியா மற்றும் காந்தி ஆகியோர் உயர்சாதிகளின் பிரதிநிதிகளாகக் கையெழுத்திட்டனர். தனி வாக்காளர் தொகுதிகளுக்குப் பதிலாகக் கூட்டு வாக்காளர் தொகுதிகளில் தனி தொகுதிகளை வழங்கியது பூனா ஒப்பந்தம். முக்கிய அரசியல் கட்சிகள் இந்தத் தனித் தொகுதி இடங்களில் தங்கள் கைக்கூலிகளைக் களமிறக்கினர். இதன் மூலம் உயர்சாதி வாக்குகளைக் கட்டுப்படுத்தி இத்தகைய தொடர்ச்சியான நிகழ்வுக்கும் அவர்கள் வழி வகுத்தனர். அத்தோடு அவர்களே வெற்றி பெறுவதற்கும் இந்திய தேர்தல் அரசியலானது வழி வகுத்தது எனலாம்.
சாதி மீதான இரட்டிப்பான போலித்தனத்தையே காந்தி கொண்டிருந்தார். 1955 ல் ஒரு நேர்காணலில் அம்பேத்கர், “காந்தி ஆங்கில மொழி பத்திரிகைகளில்; சாதி முறைக்கு எதிராக எழுதுகிறார். அதேவேளை குஜராத்தி பத்திரிகைகளில் சாதிய ஆதிக்கத்திற்கு ஆதரவாக எழுதுகிறார்” என்று குற்றம் சாட்டினார். 1936 இல், பூனா ஒப்பந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு காந்தி தனது உறுதிப்பாட்டை நாடக ரீதியாக அமைத்துக் கொண்டார். மேலும் அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் துன்பத்தைத் தணிக்கும் பொருட்டு ‘ஐடியல் பாங்கி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையில், “அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களின் சாதித் தொழிலை அவர்களின் மிக உயர்ந்த கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் கோரினார்.
இரவு - மண் மற்றும் சிறுநீரின் மூலம் எனது சிறந்த பாங்கியின்; தரம் தெரியும். அணுக்கமாக இவற்றைக் கவனித்து, சம்பந்தப்பட்ட நபருக்குச் சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். அவரது தேர்வின் முடிவுகளைச் சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டும். இது அவரது தேவைகள் மற்றும் தொழில் பற்றிய அறிவு சார்ந்த ஒரு விஞ்ஞானத்தை அவருக்கு வழங்குகிறது. இதனால் அவர் கிராமங்கள் மற்றும் பெரிய நகரங்களில் கழிவுகளை அகற்றும் விசயங்களில் மிகப்பெரிய விற்பன்னராக இருப்பார். இந்த விஷயத்தில் அவரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் கோரப்பட வேண்டும். அவ்வாறு கோரப்பட்டு அந்த வழிகாட்டுதல்கள் சமுதாயத்திற்கு இலவசமாகவும் வழங்கப்படும். அவரது தொழிலில் தரத்தை அடைவதற்குத் தேவையான தொடர் கற்றலானது அவரது தொழிலுக்காக வகுக்கப்பட வேண்டும். அத்தகைய ஒரு சிறந்த பாங்கியானவர் அவரது தொழிலிலிருந்து தனது வாழ்வாதாரத்தைப் பெறுகிறார். அத்தோடு, அதையொரு புனிதமான கடமையாக மட்டுமே அவர் அணுகிட வேண்டும். இதனால் அவர் இதை விடுத்த வேறு நலன்கள் குறித்துக் கனவு காண மாட்டார்.
சுத்தம் செய்வதில் எவ்வாறு சிறந்து விளங்குவது என்கிற சமீபத்திய அறிவுறுத்தல் கல்வியை ‘பாங்கிகளுக்கு வழங்குமாறு உயர் சாதியினரிடம் காந்தி கேட்டுக் கொண்டார். இது அவர்களது சாதி வெளியேற்றத்தைத் தவிர்த்து விடுவதோடு துப்புறவு விஞ்ஞானிகளாக அவர்களை உருவாக்கும் என்றும் காந்தி நம்பினார். காந்தியின் பார்வையில் அனுமதிக்கப்பட்ட ஒரு முழுமையான ‘பாங்கி’ தொழில் அவர்களின் சாதிக்குள் இருந்தது என்பதுவே.
1940 - களில் உயர் சாதியினரால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்து மதம் அரசாங்க நடைமுறைகள் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை இந்து மதத்திற்குள் உள்ளடக்குவதில் வெற்றி பெற்றனர். பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களின் புதிய மத நிலை மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. உயர் சாதியினர், இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையிலான பிரிவை மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்பினர். இந்திய இந்து ஆதிக்கத்தில் ஒருபோதும் முசுலிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது எனத் தங்களது உரிமைகளுக்காக முசுலீம்கள் வாதிட்டனர். இதனால் பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து செல்வதில் மும்முரமாக இருந்தது.
மூலம்: திவ்யா திவேதி, சாய் மோகன் மற்றும் யே. இரகு
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: சுயா இராயேச்