குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சிறுவர்கள் உளநலம் பேணலும் அதன் அவசியமும்

01.01.2021...15.துலை.தி.ஆ 2052 உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது சிறுவர்கள் தினம். சிறுவர்கள் பிறரை பார்த்து கற்றுக் கொள்பவர்கள் அவர்கள் மிகவும் இளகிய மனம் கொண்டவர் களா தலால் இலகுவிலே அவர்கள் மனம் பாதிப்பிற்கு உள்ளாகும். சிறுவர்களுக்கு சரி, பிழை, நல்லது, கெட்டது என எதையும் பிரித்தறியும் மனோபக்குவம் குறைந்தவர்களாக காணப்படுவதுடன் தமக்கு விரும்பியதை உடனே செய்து முடிப்பவர்களாகவும் மற்றவர்களும் தமக்கு விரும்பியதை உடனே செய்து தர வேண்டும் என எதிர்பார்க்கும் மனப்பாங்கு கொண்டவர்களாவர்.

இவ்வாறான மென்மையான மனம் படைத்த சிறுவர்களுக்கும் உள ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் சிறுவர்களின்; மனதில் அழுத்தத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விடயத்தில் முதல் விடயமாக காணப்படுவது முதல் ஒரு குழந்தை இருக்கும் போதே இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க தாய் தயாராவது ஆகும். தனக்கு இருக்கும் முக்கியத்துவம் பறிபோவதை எந்த குழந்தையும் விரும்புவதில்லை அதே நேரத்தில் புதிய குழந்தையை கவனிக்கும் விடயத்தில் காட்டும் அக்கறையை முதல் குழந்தையை கவனிக்கும் விடயத்தில் பெற்றோர்களும், ஏனையவர்களும் காட்டுவதில்லை. இதனை கவனிக்கும் முதல் குழந்தை இதுவரை எனக்கு முழுமையாக கிடைத்து வந்த அன்பை பறித்துக் கொண்டது புதிதாக வந்த      குழந்தை என நினைத்து அக் குழந்தையின் மீது வெறுப்பையும், பொறாமையையும் வளர்த்துக் கொள்கிறது. இளவயதிலே சகோதரன் மீதான வெறுப்புணர்ச்சி காரணமாக  மனஅழுத்த நிலைமைக்குள் சிறுவர்களை தள்ளப்படுகின்றனர். குழந்தைகள் சமமாக நடாத்தப்படுமிடத்து இவ் மனஅழுத்தமானது சிறுபராயத்தில் ஏற்படமாட்டாது.

சிறுவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் நேரடி மறைமுக காரணங்கள் பல உண்டு. தமக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்;வொரு விதமாக வெளிப்படுத்தும். சில சிறுவர்கள் முகத்தை கோபத்துடன் வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பர். சில சிறுவர்கள் தங்கள்  மனஅழுத்தத்தை கோபமாக, வெறுப்பாக, ஆத்திரமாக வெளிக்காட்டுவர். சில சிறுவர்கள் எப்பொழுதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் வௌ;வேறு காரணங்கள் உண்டு என குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.அந்தவகையில்:-

• சிறுவர்களை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தல்.

• குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள்.

• நட்பில் உண்டாகும் மனவருத்தம்.

• பெற்றோர் மற்றும் உறவினர்களின் உறவில் சிறுவர்களுக்கு ஏற்படும் விரிசல்கள்.

• அடிக்கடி ஏற்படும் உடல்நோய், தொற்று நோய்கள்.

• மிக நெருக்கமானவர்களின் பிரிவு.

• செல்லப்பிராணிகளின் இறப்பு.

• இளவதில் பெற்றோரை பிரிதல.;

• பாடசாலையில், வெளியிடங்களில் ஏற்படும் தொடர் தோல்வி.

• பிற சிறுவர்களின் முரட்டுத்தனம், பிடிவாதம்.

இது போன்ற காரணகங்களினால் சிறுவர்கள் மனஅழுத்திற்கு உள்ளாகி காணப்படுவார்கள்.; சில சிறுவர்களுக்கு இது பரம்பரையாக வரலாம். சில சிறுவர்கள் சிறு பிரச்சினையினாலேயே வெகுவிரைவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.

மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள் இருந்த போதிலும் அர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் விரும்பும் நண்பர்கள் உறவினர்கள் மூலமாகவோ பேசுவது  நன்மையை ஏற்படுத்தும் இவ்வாறு பேசுவதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய விடயம் எது என்பதை அறிய முடியும்.

சிறுவர்களிடம் அவர்களது மனதை பாதித்த காரணி எது என கேட்டறியும் போது மிகவும் கவனமாக கேட்க வேண்டும் அவர்களை பயமுறுத்தி கேட்க கூடாது. அத்துடன் அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த மொழி நடையிலேயே பேசுவதற்கு அனுமதிப்பதுடன் அவர்கள் தமது கருத்தை தெரிவிக்கும் வரை இடையில் குறுக்கிடாது கேட்க வேண்டும். அத்துடன் சிறுவர்கள் தமது பிரச்சினையை சொல்லும் போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தை வழங்க வேண்டும்.

உதாரணமாக நான் உன்னை ஒருவாரமாக கவனித்து வருகின்றேன் நீ கவலையாக உள்ளாய் என்று கூறின், பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார் தனது நலனில் அக்கறை காட்டுகிறார் என்பதை சிறுவர்கள் புரிந்து கொள்வார்கள் இந்த எண்ணம் அவர்களை மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.

இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதைப் போக்குவதற்கான செயலில் ஈடுபட வேண்டும்.

சிறுவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வழி முறைகள்

• மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செய்யப்படுவதை அவர்களுக்கு உணர்த்துங்கள். இதன் மூலம் அவர்களது சரியான ஒத்துழைப்பைப் பெற முடியும்.

• சிறுவர்கள்; அடிக்கடி தம்மைக் குறை கூறிக் கொண்டால் அவ்வாறு நினைக்க வேண்டிய       அவசியமில்லை எனக் கூறிக் கொள்ள வேண்டும்.

• தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்கிக் கொடுக்க வேண்டும்.

• சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, உதவி, அன்பும் கிடைப்பதை உணர்ந்து கொள்ளும்  போதே அவர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள்.

• சிறுவர்களுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது? எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது, என்பதை தெளிவாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

• சில சாதாரண உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் அவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுப்பதன் மூலமும் மன அழுத்தத்தை போக்க முடியும்.

• சிறுவர்களுக்கு; பிடித்த விடயங்களை அவர்கள் செய்யும் போது சரியாக செய்கிறார்களா என அவதானித்து பாராட்டு வழங்குங்கள்.

• மனஅழுத்தத்திற்கு ஆளான சிறுவர்களை மற்றும் பாடசாலை தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்தக் சிறுவர்களுக்கு மிகவும் அவசிமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

• மருத்துவ உதவியை சரியான நேரத்தில், சரியான மருத்துவரிடம் அழைத்து சென்று காட்டுங்கள் அல்லாவிடில் குழந்தையில் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் இதனை கருத்தில் கொண்டு செயற்படுங்கள்;

இவ்வாறான பல்வேறு வழிமுறைகள் மூலம் குழந்தை உளநலத்தை பாதுகாக்கமுடியும்.

சிறுவர்களின் மனநலம் சிறப்பாக வருவதும் அது பாதிப்படைவதும் போவதும் உங்கள் கைகளிலேயே உள்ளது. பெற்றோர் எவ்வளவு தூரம் தமது பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு தமது செயல்களை ஆற்றுவதுடன் அவர்களின் உளநலத்தை மேம்படுத்தும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபடும்போது, அவர்கள் நேர்முகமான உளநலம் கொண்டவர்களாவதுடன்,  சிறந்த உள ஆரோக்கியம் மிக்க சந்ததிகள் உருவாக வழிவகுக்கும்.

Dr.K.Kajavinthan

Senior Lecturer in Psychology

Deparment of Philosophy and Psychology

University of jaffna.

Srilanka

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

எங்களை விட சிறந்த மனிதராக நீங்கள் வளரட்டும். இந்த நாளில் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

சிறுவர்கள் உலகம் அழகானது ஒரு முறை அவர்களாக மாறி அங்கு சென்றுபாருங்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.