குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை

15.01.2019 காப்புக் கவசத்துக்குள் முளைவிட்டுள்ள பருத்தி விதை.வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா?சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகள் முளைத்துள்ளன என்று சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது. நிலவில் உயிரின வளர்ச்சி முதன் முறையாகக் காணப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் நீண்டகால நோக்கில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

சாங்' இ 4 நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியபின் மேற்கொள்ளப் பட்டிருக்கும் முதலாவது ஆராய்ச்சி முயற்சியாகும் இது. பூமியை நோக்கியே இருக்கும் நிலவின் பக்கத்தில் அல்லாமல், மறுபுறத்தில் இருளாக இருக்கும் பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

சனவரி 3 ஆம் தேதி தரையிறங்கிய இந்த விண்கலத்தில், அந்தப் பகுதியில் உள்ள நிலவின் மண்ணை ஆய்வு செய்வதற்கான கருவிகள் உள்ளன.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் முன்பு தாவரங்கள் வளர்க்கப் பட்டிருக்கின்றன. ஆனால் நிலவில் ஒருபோதும் இது நடந்தது கிடையாது.

நிலவில் தாவரங்களை வளர்க்கும் திறன் இருப்பது, நீண்டகால விண்வெளித் திட்டங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு உதவும். இரண்டரை ஆண்டு காலம் பிடிக்கும், செவ்வாய் கிரகப் பயணம் போன்ற, விண்வெளித் திட்டத்துடன் இணைந்ததாக இது இருக்கும்.

விண்வெளி வீரர்கள் உணவுத் தேவைக்காக பூமிக்கு திரும்பி வருவதற்கான தேவை இல்லாமல், விண்வெளியிலேயே தங்களுக்கான உணவை அறுவடை செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

எடிட் செய்யப்படாத படங்கள் நிலவின் தரை சிவந்து இருப்பதைப் போலக் காட்டுகின்றன.

தொகுப்பு செய்யப்படாத படங்கள் நிலவின் தரை சிவந்து இருப்பதைப் போலக் காட்டுகின்றன.

நிலவில் தரையிறங்கியுள்ள சீனாவின் விண்கலத்தில் பருத்தி, உருளைக்கிழங்கு விதைகள், ஈசுட் மற்றும் பழ ஈக்களின் முட்டைகள் ஆகியவை கொண்ட மண்ணும் வைக்கப்பட்டுள்ளது.

விண்கலத்தில் சீலிட்ட கண்டெய்னரில் தாவரங்கள் வைக்கப் பட்டுள்ளன. இந்தப் பயிர்கள் ஒரு சிறிய உயிரி மண்டலத்தை - ஒரு செயற்கையான, தற்சார்பு சூழலை உருவாக்குவதாக இருக்கும்.

பருத்தி விதைகள் முளைவிட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

முளைப்பு விட்டுள்ள விதையின் படத்துடன் ஒரு செய்தியை, ஆளும் கம்யூனிசுட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்சு டெய்லி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ``நிலவில் மனிதகுலத்தின் முதலாவது உயிரின பரிசோதனை நிறைவு பெறுகிறது'' என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த முன்னேற்றம் ``நல்ல செய்தி'' என்று ஆசுதிரேலிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் விண்வெளி வீரர் பிரெட் வாட்சன் பி.பி.சி.-யிடம் தெரிவித்தார்.

``நிலவில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தங்களுக்கான பயிர்களை எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் வளர்ப்பதில், சமாளிக்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்பதை இது காட்டுகிறது'' என்று அவர் கூறினார்.

``விண்வெளிப் பயணங்களில் நின்று செல்லும் இடமாக நிலவை பயன்படுத்துவதில், குறிப்பாக செவ்வாய் கிரகதத்துக்கான பயணங்களில் இவ்வாறு பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒப்பீட்டளவில் இது பூமிக்கு நெருக்கமாக உள்ளது'' என்று வாட்சன் தெரிவித்தார். ``எதிர்காலத்தில் விண்வெளியில் மனிதர்கள் உயிர்வாழ்வது பற்றிய சிந்தனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்'' என்று தென் சீன மார்னிங் போசுட் - க்கு இந்த ஆராய்ச்சியின் முதன்மை வடிவமைப்பாளரான பேராசிரியர் யி யெங்சின் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கிய பிறகு சாங்'இ4 விண்கலத்தில் உள்ள விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

நிலவில் தரையிறங்கிய பிறகு சாங்'இ4 விண்கலத்தில் உள்ள விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

``புவியீர்ப்பு விசை குறைந்த சூழ்நிலையில் இந்தத் தாவரங்கள் வளர்வது பற்றி அறிவதன் மூலம், விண்வெளி தளத்தை எதிர்காலத்தில் அமைப்பதற்கு அடித்தளம் உருவாக்குவதில் திட்டமிட முடியும்'' என்று அவர் கூறியுள்ளார்.

பருத்தியை ஆடை தேவைக்கும், உருளைக் கிழங்குகளை விண்வெளி வீரர்களின் உணவு தேவைக்கும், கடுகு எண்ணெய் விதைகள் எண்ணெய் தேவைக்கும் பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பூமியில் இருந்து நிலவுக்குச் செல்வதற்கான 20 நாள் பயணத்தில் ``உயிரியல் தொழில்நுட்பம்'' மூலம் இந்த விதைகள் செயலற்ற நிலையில் வைக்கப் பட்டிருந்தன என்று சீனாவின் யின்கீவா செய்தி ஏயென்சி தெரிவித்துள்ளது.

விதைகளுக்குத் தண்ணீர் விடுவதற்கு தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து உத்தரவு அனுப்பிய பிறகு தான் அவை முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் இதுவரை 170 படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பப் பட்டுள்ளதாக யின்கீவா தெரிவித்துள்ளது.

சீனா நிலவு ஆராய்ச்சித் திட்ட (CLEP) பிரிவு, இந்த ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட பல படங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. விண்கலம் தரையிறங்கியுள்ள இடத்தின் பனோரமா காட்சிகளும், விண்கலம் தரையிறங்கிய விடியோவும் அதில் உள்ளன.

நிலவை மாசுபடுத்துமா?

பால் ரின்கன், அறிவியல் ஆசிரியர், பிபிசி நியூசு இணைய தளம்

சாங்'இ4 விண்கலத்தின் குறு உயிரி மண்டல ஆராய்ச்சியானது, - உயிர்வாழும் இனங்கள் சக்தியைத் தயாரித்துக் கொள்ளக் கூடிய வகையில் - ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசம் பற்றிய ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. முழு ஆராய்ச்சிகளும் 18 சென்டிமீட்டர் உயரம் கொண்ட, 3 கிலோ எடை உள்ள சிறு கொள்கலனுக்குள் நடைபெறும். இதை 28 சீன பல்கலைக்கழகங்கள் வடிவமைப்பு செய்துள்ளன.

உள்ளே இருக்கும் உயிரினங்கள் வளர்வதற்கு உதவும் வகையில் காற்று, தண்ணீர், ஊட்டச்சத்து ஆகியவை வழங்கப்படும். நிலவில் தட்பவெப்ப நிலை மைனசு 173 டிகிரி செல்சியசு மற்றும் மைனஸ் 100 டிகிரிக்கு இடையில் அல்லது அதைவிட அதிக குளிராக இருக்கும் போது, இவை வளர்வதற்கு உகந்த வெப்ப நிலையை பராமரிப்பது தான் ஒரு சவாலாக இருக்கிறது என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துகளையும் விஞ்ஞானிகள் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சிகள் நிலவில் ``மாசு ஏற்படுத்தும்'' வகையில் இருக்குமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இது பெரிய கவலைக்குரியது அல்ல என்று பொதுவாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்பல்லோ விண்வெளி வீரர்கள் நிலவில் விட்டுச் சென்றுள்ள மனிதக் கழிவுகள் சுமார் 100 மூட்டைகள் ஏற்கெனவே நிலவில் இருப்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.