குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, ஆனி(இரட்டை) 27 ம் திகதி திங்கட் கிழமை .

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அபூர்வ இரகசியங்கள்!

07.08.2020....தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள

அறிவியல் உண்மைகளையும் சித்தர்

பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்

தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

 

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க

மெத்தனுக்

கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை

நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

------------------------------

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்

[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில்

பற்றும்.

அடுத்து எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்..

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை

https://www.facebook.com/groups/305917699863621

வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும்

ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து

கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

இதனால் இவர்களுக்குத் தேவையான

ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும்,

வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம்

சூரியகலையில் ஓடும். இதில் எட்டு

அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.

மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம்

வெளியே செல்லும். இதனால் உடலில்

குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல்

புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம்

அனைவரின் நன்மைக்கே, இதை நாமும்

பின்பற்றி பயன் பெருவோம்.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க

கூடாது ஏன் ?

மனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது

https://www.facebook.com/groups/305917699863621

முன்னோர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர்.

இந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை.

எனவே தான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசசுதலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர்.

நாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம்

புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

அப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது" பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது.

இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்துவருகிறது.

ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச்செல்லும், ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும்.

நாம் வடக்கே தலை வைத்துபடுத்தால், நம் உடலின் வடக்கு திசையும், பூமியின் வடக்கு திசையும் இணையும்போது ஓட்டுவது இல்லை.

எனவே இரவு முழுவதும் நம் காந்தத்

தன்மையில் விலகும் செயல் நடக்கிறது,

எனவே நிம்மதியாகத் தூங்கமுடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.

நாம், வடக்கு திசையில் தலை வைத்து

படுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட

திசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் நம் உயிர்ச் சக்தி தேவையின்றி விரையம் ஆகும். காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியாது. அவ்வாறு எழுந்தாலும், அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக இருக்காது.

அதே போல, நம் மேற்கு திசையில்

தலைவைத்து படுத்தால் காலையில் நாம் எழுந்து கண்விழிக்கும் போது, சூரியனின் ஒளிகதிர்கள் நமது கண்களில் பட்டு கூசும்.

கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில்

இருக்கும்பொழுது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காவும்,

தொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும். ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல்பகுதி தெற்காகவும், தொப்புளுக்கு கீழ் பகுதி வடக்காவும் இருக்கும்.

இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல்நோக்கி இருக்க முடியும்.பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.

அதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காவும், கிழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத்திசை, அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி

https://www.facebook.com/groups/305917699863621

திரும்பும். அதனால்தான் தலை திரும்புகிறது. எனவே வடக்கே தலைவைத்துப்படுக்ககூடாது.

எனவே, மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நாம் கிழக்கு திசை பக்கம் தலை

வைத்து படுத்தால்,நாம் பூமியின் காந்த

ஓட்டத்தின் குறுக்காக இருப்பதால் நமது உடல் ஒரு டைனமோ போல் திகழ்ந்து உயிர்ச் சக்தியாக்கம் பெறும். இதனால், உற்சாகம் கிடைக்கும். எனவே, கீழக்கு திசையில் தலை வைத்து படுப்பதுவே மிகவும் சிறந்தது ஆகும்.

(பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது, அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது,பூமி

யில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச்

செல்கிறது.அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது. இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது. இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு-தெற்காக

நிற்க்கும். இதை, இயற்பியல் மின்காந்த புலம்,காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன.

காந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம், காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும். தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல் .

இதே தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது உடலில் இரத்ததில் முகிய பாகம் இரும்பு சத்தாகும்.மேலும் பகலில் உட்காரும்போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும். தூங்கும் போது தெற்கே தலை வைத்து

கொண்டால், நமது வடதுருவமும்,பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும். ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால்,பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது.ஒன்றையொன்று தாக்கி, தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய

இயற்கையான நிலை மாறுபடும்.

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.

வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து

தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.

அதே போல் மனிதனின் தலை நேர்

மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது. நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு

பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல்

முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.)

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

அறிவியல் – புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது

இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும்

குன்றிவிடும்.

(உ.ம் – சூடான தோசைக் கல்லில் நீர்

தெளித்தல்).

இதனால் இரத்தம் மற்றும் வெப்பம்

சம்மந்தமான வியாதிகள் வந்துவிடும்.

சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறது

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூங்கும்போது கவனிக்க வேண்டிய

விஷயங்கள் என்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்....

தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட

சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி

பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல

வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசியம். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

https://www.facebook.com/groups/305917699863621

எந்த திசையில் தலைவைத்துப் படுக்க

வேண்டும் என்பது பற்றியும் விதி இரு

க்கிறது. "கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா

யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது" என்பது மருத்துவர்கள் சொல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால்

வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.

தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு

மெத்தைதான் "இலவம் பஞ் சில் துயில்" என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்.

படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க

வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக்

கொண்டு தூங்க வேண்டும்.

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய

இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள்

உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது

காந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும்

வலம் வருகின்றது. காந்த வளையத்தின்

திசைக்கேற்றவாறு உடல் அசையம் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின்இயல் ஒப்புக்கொள்கின்றது.

படுக்கையை விட்டு எழுதும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?

தூக்கத்தின் பிடியை விட்டு, உதயத்துக்கு

முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தினசரி

அலுவல்களில் ஈடுபட வேண்டும். இந்த

வேளையில் தூங்கினால் உடல் நிலை குன்றும் என்றும், சோர்வும் தரித்திரமும் உருவாகும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. அதனால் பிரம்ம முகூர்த்தித்தில் விழித்து வலது பக்கம்

திரும்பி எழ வேண்டும். விழித்த உடன்

படுக்கையிலிருந்து குதித்தெழுந்து ஓடுவது தவறு.

விழித்த உடன் இருகைகளையும் மலர விரித்து அதைப்பார்த்து லட்சுமி, சரஸ்வதி, கௌரி என்ற தேவிமாரை தரிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.

"காராக்ரேவாசதே லட்சுமி,

கரமத்யே சரஸ்வதி

கரமூலே ஸ்திதா கௌரி

பிரபாதே கரதர்சனம்"

தூக்கம் நீடித்திருக்கும் போது மனிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் மிகக்குறைவான சக்தியே பயன்படுத்துகின்றது. திடீரென குதித்தெழுந்து செல்லும் போது இருதயம் மிகக்கடினமாகச் செயல்படவேண்டிய நிலை உருவாகின்றது. இது இதயத்துடிப்பை அதிகரித்து நிலைதடுமாறச் செய்கின்றது. அதனால், படுக்கையை விட்டு எழும்பியிருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக்

கொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்பித்துள்ளனர். இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது.

https://www.facebook.com/groups/305917699863621