குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, ஆனி(இரட்டை) 26 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வடசொல் = தமிழ் அகரவரிசை - 06 நல்ல தமிழ் அறிவோம் நடைமுறையில் அவற்றை பேச்சிலும் எழுத்திலும்

பயன்படுதுவோம்  தமிழ் மொழியை அழியவிடாது காப்போம்.16.04.2020

சகசம் = இயற்கை, ஒற்றுமை

சகடம், சகடு = வண்டி

சகலம் = எல்லாம்

சகலர் = மும்மலக்கட்டினர்

சகவாசம் = கூடவிருத்தல், உடனுறைதல், பழக்கம், சேர்க்கை, நட்பு

சகன் = தோழன், கூட்டாளி

சகாயம் = உதவி, துணை, நயம், நன்மை, மலிவு, பயன்

சகித்தல் = பொறுத்தல்

சகுனம் = குறி

சகோதரன் = உடன்பிறந்தான், தமையன், தம்பி

சகோதரி = உடன்பிறந்தாள், தமக்கை, தங்கை

சக்கரம் = நிலாமுகிப்புள்

சக்காதரன் = திருமால்

சக்கரவர்த்தி = தனியரசாள்வோன், மன்னர்மன்னன், அரசர்க்கரசன்

சக்தி = ஆற்றல், வல்லமை, வலி

சங்கடம் = நெருக்கம், துன்பம், கேடு, வருத்தம்

சங்கதி = செய்தி

சங்கமம் = ஆறுகடலோடுகூடுமிடம்,கூடுகை,இயங்குதிணைப்பொருள்,அசைவன

சங்கற்பம் = நினைப்பளவு

சங்காரம் = அழித்தல்

சங்கிராந்தி = திங்கட்பிறப்பு, ஒன்றினின்று பிரிதொன்றின்கட் செல்லல்

சங்கீதம் = இசை

சங்கேதம் = குறியீடு, நினைவு

சங்கை = எண், ஐயம், அச்சம்

சந்கோசம் = கூச்சம், வெட்கம், உட்புகுதல்

சச்சிதானந்தம் = உண்மையறிவின்மை

சஞ்சலம் = கலக்கம், கவலை, துன்பம், அசைவு

சஞ்சிதம் = ஈட்டியது, எஞ்சியது

சடுதி, சடிதி (இந்துஸ்) = விரைவு

சஷ்டியப்தபூர்த்தி = அறுபதாம் ஆண்டு நிறைவு

சட்சு = கண்

சண்டித்தனம் = முரட்டுத்தனம்

சதா = எப்பொழுதும்

சதானந்தம் = இடடையறாவின்பம்

சதுரம் = அறிவுடைமை, திறமை, நாற்பக்கம்

சத்தம் = ஓசை, ஒலி, சொல், ஏழு

சத்தியம் = உண்மை, ஆணை, மெய்

சத்திரம் = உணவுச்சாலை, ஊட்டுப்புரை, சாவடி, குடை

சத்துரு = பகைவன்

சத்துவம் = விறல், மெய்ப்படுதல்

சந்ததம் = எப்பொழுதும்

சந்ததி = வழிவழி, பிள்ளை, எச்சம், கால்வழி

சந்தர்ப்பம் = சமயம், அற்றம், நேரம்

சந்தியாவந்தனம் = காலை மாலை வழிபாடு

சந்திரன் = திங்கள், தண்கதிர், நிலவு, மதி, அம்புலி, பிறை

சந்து = முடுக்கு, இயங்கும் உயிர்,தூது, பிளப்பு, பொருத்து, இரண்டு, மூட்டு

சந்துஷ்டி = மகிழ்ச்சி

சந்தோஷம்= மகிழ்ச்சி, உவகை, களிப்பு

சந்நிதி, சந்நிதானம் = திருமுன்

சந்நியாசம் = துறவு, துறவறம்

சந்நியாசி = துறவி

சபதம் = வஞ்சினம், ஆணை

சபம், ஜெபம் = உருவேற்றல்

சபா, சபை = அவை, மன்றம், கழகம், அரங்கம்

சமஸ்கிருதம் = நன்றாகச்செய்யப்பட்டது, வடமொழி

சமத்தன், சமர்த்தன் = வல்லவன், திறமையாளன்

சமத்துவம் = ஒத்த உரிமை, ஒன்று படல்

சமயம் = பொழுது, நேரம், காலம்

சமயோசிதம் = காலப்பொருத்தம், தக்கநேரம்

சமரசம் = போது, வேறுபாடின்மை

சமாசம் = கழகம், கூட்டம்

சமாசாரம் = செய்தி

சமாதானம் = அமைதி, இணக்கம், தணிவு, உடன்பாடு, தக்க விடை

சமாதி = அமைதி, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு

சமாநம் = உவமை, ஒப்பு, இணை

சமிக்ஞை = குறிகாட்டல்

சமீபம் = அருகு, அண்மை, மருங்கு

சமூகம் = நேர், திருமுன்

சமுதாயம், சமூகம் = கூட்டம்

சமுத்திரம் = கடல்

சமேதம் = கூட இருத்தல்

சம்ஸாரம் = குடும்பம்

சமஸ்கிருதம் = வடமொழி

சம்பத்து = செல்வம்

சம்பந்தம் = உறவு, பற்று, இயைபு, சார்பு, தொடர்பு, பொருத்தம்

சம்பவம் = நிகழ்ச்சி, செயல்,

சம்பாஷணை = உரையாடல்

சம்பாதித்தல் = ஈட்டல், தேடல், தொகுத்தல்

சம்பிரதாயம் = தொன்று தொட்ட வழக்கு, முன்னோர் நடை, பண்டைமுறை

சம்பூரணம் = நிறைவு

சம்மதம் = உடன்பாடு, ஒப்பு

சயநம் = படுக்கை, உறக்கம்

சயம், ஜெயம் = வெற்றி

சயிலம் = மலை

சரசம் = இனிய பண்பு, இனிய விளையாட்டு

சரசுவதி = கலைமகள், நாமகள்

சரணம் = அடைக்கலம், வணக்கம், கால், திருவடி

சரணாகதி = புகலடைதல், அடைக்கலம் புகுதல்

சரணாரவிந்தம் = திருவடித்தாமைரை

சரம் = மாலை, அம்பு

சரவணம் = நாணல், பொய்கை

சரிதம், சரித்திரம் = வரலாறு

சரீரம் = உடல், யாக்கை, மெய்

சர்ப்பம் = பாம்பு

சருமம் = தோல்

சருவம் = எல்லாம்

சரோசம் = தாமரை

சர்வகலாசாலை = பல்கலைக்கழகம்

சர்வமானியம் = இறையிலி

சர்வேஸ்வரன் = எப்பொருட்கும் இறைவன்

சலசம் = தாமரை

சலசந்தி = கடலிணைக்கால்

சலசாட்சி = தாமரைக்கண்ணி

சலம், ஜலம் = நீர்

சலதோஷம் = நீர்க்கோவை

சலநம் = அசைவு

சல்லாபம் = உரையாடல்

சவம் = பிணம்

சனம், ஜனம் = மக்கள், நரல்

சனனம், சன்மம் = பிறப்பு

சனி = காரி

சன்மார்க்கம் = நன்னெறி

சன்மானம் = பரிசு

சன்னல் = பலகணி


சாகரம் = கடல்

சாக்கிரதை = விழிப்பு, உன்னிப்பு, எச்சரிக்கை

சாக்கிரம் = நனவு

சாகை = தங்குமிடம், வீடு

சாசனம் = முறி

சாசுவதம் = அழியாமை, அசையா நிலை, உறுதி, வீடுபேறு

சாடி = தாழி

சாட்சி = சான்று, கரி

சாஷ்டாங்கம் = எட்டுறுப்பு

சாதகம் = பயிற்சி, பிறந்தநாடகுறிப்பு, உதவி, காரியங்கைகூடல்

சாதம் = சோறு

சாதனம் = கருவி, இடம், பயிற்சி, உறுதிமுறி, அடையாளம், முயற்சி கைகூடல்

சாதாரணம் = பொது

சாதி = இனம், குலம், வகுப்பு

சாதித்தல் = நிலைநிறுத்தல்

சாதியாசாரம் = குலஒழுக்கம்

சாது = துறவி

சாதுரியம் = திறமை, வன்மை

சாத்திரம் = கலை, நூல்

சாத்மிகம், சாத்துவிகம் = அமைதித்தன்மை

சாந்தம் = அமைதி, பொறுமை

சாந்திரம் = நெருக்கம், திங்கட்டொடர்புடையது

சாபம் = தீமொழி, வசவு, வில்

சாமர்த்தியம் = வல்லமை, திறமை, கூறுபாடு

சாமான் = பொருள்கள், தட்டுமுட்டுகள்

சாமி, சுவாமி = கடவுள், தலைவன், அடிகள்

சாமீப்பியம் = சிவனருகிருப்பு

சாயை = நிழல்

சாயுச்சியம் = சிவப்பேறடைவு

சாரதி = வலவன்

சாராம்சம் = சிறந்த பகுதி

சாரீரம் = இனிய குரல், இன்னிசை, உடற்றொடர்பு

சாரூபம் = சிவனுருவம்

சாலோகம் = சிவவுலகு

சாவகாசம் = ஒழிவு, ஓய்வு, வசதி, விரைவின்மை

சாவதானம் = ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு


சிகரம் = தலை, மலை, உச்சி, முகடு, குவடு

சிகிச்சை – மருத்துவம், பரிகாரம்

சிகை = குடுமி, கூந்தல்

சிங்கம், சிம்ஹம் = அரிமா, ஏறு

சிங்காசனம் = அரியணை

சிங்காரம் = ஒப்பனை, திருத்தம், அழகு

சிங்குவை = வாய்

சிசு = குழந்தை, மகவு

சிசுருஷை = பணிவிடை

சிட்சை, சிஷை = கற்பித்தல், கல்வி பயிற்றல், ஒறுத்தல்

சிருட்டி, சிருஷ்டி = படைப்பு

சித்தம் = உள்ளம், நினைவு, கருத்து

சித்தி = பேறு, ஆக்கம்

சித்திரம் = ஓவியம், படம்

சித்திரவதை = வன்கொலை

சிநேகம், சிநேகிதம் = நட்பு, கேண்மை

சிரஞ்சீவி = நீடுவாழ்வோன்

சிரத்தை = அன்பு, முதன்மை, உளத்திட்பம், விருப்பு

சிரமம் = துன்பம், தொல்லை

சிரவணம் = கேள்வி

சிரார்த்தம் = இறந்தநாட்கடன்

சிருட்டி = படைத்தல்

ஸ்த்ரீதனம், சிறிதனம் – மகளுக்குக்கொடுக்கும் கொடை, மகட்கொடை

ஸ்ரீமத் = திருவாளர்

ஸ்ரீலஸ்ரீ = மறைத்திருவாளர்

சிரேஷ்டம் = சிறப்பு

சிரேஷ்டன் = தலைவன், மூத்தோன்

சிலாகித்தல் = புகழ்தல்

சிலாக்கியம் = மேன்மை, நன்மை

சிலேட்டுமம் = சளி, கோழை

சிவிகை = பல்லக்கு

சிற்பம் = கற்றச்சு

சின்னம் = அடையாளம்

சின்னாபின்னம் = உருக்குலைவு


சீக்கிரம் = விரைவு, ஒல்லை, கடிது

சீடன் = மாணாக்கன்

சீணதசை = அழிவுக்காலம், மழுக்கம்

சீதபேதி = வயிற்றளைச்சல்

சீதம், சீதளம் = குளிர்ச்சி

சீதோஷ்ணம் = தட்பவெப்பம்

சீமந்தம் = சூல்காப்பிடுஞ்சடங்கு

சீமந்த புத்திரன் = தலைமகன்

சீமந்தினி = பெண்மகள்

சீரணம் = செரித்தல், பழுது

சீர்ணோத்தாரணம் = பழுதுபார்த்தல்

சீலம் = ஒழுக்கம்

சீவசெந்து = உயிர்ப்பொருள்

சீவகாருண்ணியம் – உயிர்களிடத்தன்பு, அருள் ஒழுக்கம்

சீவனம் = பிழைப்பு

சீவியம் = வாழ்நாள், பிழைப்பு, வாழ்க்கை


சுகந்தம் = நறுமணம்

சுகம் = நலம், இன்பம்

சுகாதாரம் = நலவழி

சுகிர்தம் = நன்மை

சுக்கிரவாரம் = வெள்ளிக்கிழமை

சுக்கிலபஷம் = வளர்பிறை

சுக்கிலம் = வெண்ணீறு, வெண்மை

சுதந்திரம் = உரிமை

சுதேசம் = தாய்நாடு

சுத்தம் = தூய்மை, துப்புரவு

சுந்தரம் = அழகு

சுபாவம் = தன்மை, இயற்கை, இயல்பு

சுயபாஷை – தாய்மொழி

சுபிஷம் – செழிப்பு

சுயம்வரம் = தான் விரும்பும் மணம்

சுயார்ச்சிதம் = தான் தேடிய பொருள்

சுயேச்சை = தன் விருப்பம்

சுரஸம் = முறித்த சாறு

சுரம் = காய்ச்சல், வெப்புநோய்

சுருதி = குரல்

சுலபம் = எளிது

சுவதந்திரம் = உரிமை

சுவர்க்கம் = துறக்கம், பேரின்பவீடு

சுவாசகாசம் = இளைப்பிருமல்

சுவாசம் = மூச்சு, உயிர்ப்பு

சுவாதிஷ்டானம் = கொப்பூழ்

சுவீகாரம் = தனதாக்குதல்

சுவேதம் = வெண்மை

சுழுத்தி = உறக்கம்


சூக்குமம் = நுண்மை, அணு

சூசிகை = ஊசி, யானை, துதிக்கை

சூதகம் = தீட்டு

சூரணம் = தூள்

சூரியன் = ஞாயிறு, பகலவன், கதிரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன்,

வெயிலோன், வெய்யோன்

சூலம் = வேல்

சூன்யம் = பாழ், இன்மை, இல்பொருள்


சேஷம் = எச்சில், மிச்சம்

சேஷ்டன் = தமையன், மூத்தோன்

சேஷ்டை = குறும்பு, தமக்கை, அக்காள்

சேத்திரம் = திருக்கோயில், திருப்பதி

சேமம் = நலம், காவல், புதையல்

சேவகன் = காவற்காரன், போர் மறவன்

சேவித்தல் = தொழுதல், வணங்கல்

சேனாதிபதி = படைத்தலைவன், சேனைத்தலைவன்


சைந்யம் = படை

சைலம் = மலை


சொஸ்தம் = நலம், குணம்

சொப்பனம் = கனவு


சோதரன் = உடன்பிறந்தான்

சோதனை = ஆராய்ச்சி, ஆய்வு, தேர்வு

சோதி, ஜோதி = ஒளிவிளக்கம்

சோதிடர், சோசியர் = கோள்நூலார், காலக்கணிதர், குறிப்பாளர்

சோத்திரம் = செவி

சோபித்தல் = ஒளிர்தல், விளங்கல்

சோமன் = திங்கள், மதி

சோமவாரம் = திங்கட்கிழமை

சோலி(தெலு) = வேலை, தொழில்


சௌக்கியம் = நலம், மகிழ்ச்சி

சௌஜன்யம் = நல்லிணக்கம்

சௌந்தரம் = அழகு

சௌபாக்கியவதி = செல்வி, திருமகள்


ஞாதி – சுற்றம்

ஞானம் = அறிவு, கல்வி, மெய்யுணர்வு, அருளறிவு

ஞாபகம் = நினைவு****************************************************

சிறீ சிறீசுகந்தராயா

05/04/2016