குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

3வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி மும்பை இந்தியன் அணி

11.10.2011-சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த 3வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. கடந்தாண்டு சாம்பியனான சென்னை அணி லீக் போட்டியிலேயே தகுதியை இழந்து வெளியேறியது.  இந்நிலையில் பல அணிகளை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் நேற்று சென்னை மைதானத்தில் பலபரீட்சை நடத்தின.

2 அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற மும்பை அணியினர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

மும்பை அணி துவக்கமே துக்கக்கரமாக ஆரம்பித்தது. துவக்க ஆட்டக்காரர் பிலிஸார்டு (3), கன்வர் (13) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த யாதவ் அதிரடியாக சிக்ஸர் பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். ஆனால் ரன் குவிப்பு அவசரத்தில் தேவையில்லாமல் ஓடி ரன்-அவுட்டானார்.

மும்பை அணியில் நீண்டநேரம் நிலைநின்று அணியின் ஸ்கோரை உயர்த்திய பிராங்க்ளின் 29 பந்துகளை சந்தித்து 41 ரன்களை குவித்து, களத்தில் இருந்து விடைபெற்றார். மும்பை அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தவர்களில், ரன் கணக்கு எதுவும் துவக்காமலேயே கேப்டன் ஹர்பஜன் அவுட்டனார்.

முடிவில் தனது அதிரடி மூலம் மிரட்டிய மலிங்கா 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களில் ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களின் முடிவில் 139 ரன்களுக்கு மும்பை அணி தனது ஆட்டத்தை முடித்து கொண்டது.

முதலில் பந்துவீச்சாளர்களுக்கு அவ்வளவாக ஓத்துழைக்காமல் இருந்த சேப்பாக்கம் ஆடுகளம், 2வது இன்னிங்ஸ்சில் மந்தமாகி, பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தது. இதனால் எளிய இலக்கை விரட்டியும், மும்பையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது.

முதல் 4 ஓவர்களில் 38 ரன்களை குவித்த பெங்களூர் அணி, பின் வெற்றி பாதையில் இருந்து மெதுவாக விலகியது. அதிரடி துவக்கம் தந்த தில்ஷன், மலிங்காவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 27 ரன்களில் சரணடைந்தார். அதிரடி கெய்ல் (5) ரன்களில் அவுட்டாகினார்.

அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்து கொண்டே சென்று, போட்டி மும்பை அணிக்கு சாதகமாக சென்றது. அகர்வால்(14), கோஹ்லி(11) அவுட்டாக பெங்களூரின் எதிர்பார்ப்பு தகர்ந்தது. இறுதி நம்பிக்கை வீரர்களான கைப் (3), திவாரி (17) விரைவில் வெளியேற 108 ரன்களுக்கு, பெங்களூர் அணி ஆட்டத்தை முடித்து கொண்டது.

3 விக்கெட்களை வீழ்த்திய ஹர்பஜன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடரில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா தொடர் நாயகன் விருதையும் பெற்றார். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, 12 கோடி ரூபாய் பரிசும், 2ம் இடம் பிடித்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 கோடி ரூபாயும் பெற்றது.

முதல் பட்டம்

முக்கிய வீரர்களான சச்சின் உள்ளிட்டோர் இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. மேலும் அதை விட முக்கியமாக ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன் உருவான பின்னர் ஒரு பட்டத்தையும் அது வெல்லாமல் இருந்து வந்தது. தற்போது அது முதல் முறையாக ஒரு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.