16.10.2019 முதுகு ரொம்ப வலிக்குதா? இன்று பலர் முதுகு தண்டுவடத்தில் பிரச்சனையை சந்திக்கின்றனர். முதுகெலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். முதுகெலும்பு ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இல்லாவிட்டால், வாழ்க்கையே நரகமாகிவிடும். ஆம், முதுகெலும்பு வலிமையிழந்து போனால், முதுகு வலி, வட்டு பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்து, நாளடைவில் நடக்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.
எனவே ஆரம்பத்திலேயே முதுகெலும்பின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அதற்கு முதுகெலும்பின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் சில முதுகு தண்டுவடத்தின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்கக்கூடியவை. ஆகவே இன்று முதல் உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மற்றும் வலிமையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட ஆரம்பியுங்கள். விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க... முக்கியமாக முதுகெலும்பின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் வழி ஆரோக்கியமற்ற ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது தான். சரி, இப்போது முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் எவையென்று காண்போமா! பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தாவர வகை புரோட்டீன்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட தாவர வகை புரோட்டீன்கள் நல்லது. இந்த வகை புரோட்டீன்களானது இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டீனை விட மாறுபட்டவைகளாகும். எனவே முடிந்த வரை தாவர வகை புரோட்டீன்களை அதிகம் எடுக்க முயற்சி செய்யுங்கள். இறைச்சிகளில் இருந்து பெறப்படும் புரோட்டீன்கள் உடலினுள் அழற்சி/உட்காயங்களை உண்டாக்கும். எனவே சியா விதைகள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள். இவற்றில் இருந்து புரோட்டீன் சத்து மட்டுமின்றி, இதர அத்தியாவசிய சத்துக்களான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவையும் உடலுக்கு கிடைக்கும். ஒருவேளை இறைச்சி வகை புரோட்டீனை எடுக்க நினைத்தால், தோல் நீக்கப்பட்ட இறைச்சியைத் தேர்ந்தெடுங்கள். அதுவும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்கு பதிலாக சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள். நல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்! காய்கறிகள் பொதுவாகவே காய்கறிகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட காய்கறிகளில் உள்ள பண்புகள், முதுகெலும்பு பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவும். கேல் கீரை, ப்ராக்கோலி மற்றும் பசலைக்கீரை போன்றவை அழற்சியை எதிர்த்துப் போராடும். இந்த ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள், தண்டுவடத்தை வலிமைப்படுத்த உதவுபவை. எனவே காய்கறிகளை சாப்பிட எப்போதும் 'நோ' சொல்லாதீர்கள். சால்மன் கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுபவராயின், சால்மன் மீனை அதிகம் வாங்கி சாப்பிடுங்கள். சால்மன் மீனில் புரோட்டீன் அதிகம் இருப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமாக நிறைந்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எலும்புகள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். மேலும் இது உடலினுள் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராடும். எனவே உங்கள் வாய்க்கு விருந்தளிக்க நினைத்தால் சால்மன் மீனை சாப்பிடுங்கள். உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்! பால் பொருட்கள் எலும்புகளின் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் கால்சியம் மிகவும் முக்கியமான சத்து. கால்சியம் சத்தை சப்ளிமெண்டுகளின் உதவியின்றி எளிதில் உணவுகளின் மூலம் பெறலாம். அதுவும் பால் பொருட்கள் ஒன்றே போதும். பால் பொருட்களுள் கால்சியம் அதிகம் நிறைந்த பொருட்கள் என்றால், அது சீஸ், பால் மற்றும் யோகர்ட் தான். இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தாலே, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும். ஆனால் பால் பொருட்களை அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். ஏனெனில் அவற்றில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பல மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக சமையலில் பயன்படுத்தும் மஞ்சள், திசுக்கள் சேதமடைவதைத் தடுத்து சரிசெய்யும். மேலும் பட்டை, துளசி, இஞ்சி, ரோஸ்மேரி போன்றவை உடலினுள் உள்ள அழற்சி அல்லது காயங்களை எதிர்த்துப் போராடும். ஆகவே சமையலில் தவறாமல் மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, அவற்றைக் கொண்டு டீ தயாரித்துக் குடியுங்கள். ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இத தினமும் நைட் தடவுங்க.. பழங்கள் காய்கறிகளைப் போன்றே பழங்களும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் பழங்களில் சர்க்கரை உள்ளதால், அளவுக்கு அதிகமாக பழங்களை சாப்பிடக்கூடாது. பழங்களுள் பெர்ரிப் பழங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் தண்டுவடத்தின் வலிமையை அதிகரித்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே பெர்ரிப் பழங்களை அன்றாடம் சுவையுங்கள். அவகேடோ உங்களுக்கு அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் பிடிக்குமோ, இல்லையோ, இது முதுகெலும்பிற்கு மிகவும் நல்லது. இதில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதோடு, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. இவைகள் தான் அவகேடோவால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட காரணங்களாகும். அவகேடோ பழத்தில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருந்தாலும், இப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் அவகேடோ பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால், ஸ்மூத்தியாக தயாரித்து உட்கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் முதுகு வலியில் இருந்து விரைவில் விடுபடலாம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா? அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க.. குறிப்பு தண்டுவட பிரச்சனைகளை சந்திக்கும் போது, முதலில் அனைவரது நினைவிலும் வருவது உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் தான். ஆனால் உணவுகளின் மூலமும் தண்டுவட பிரச்சனைகளைப் போக்கலாம். அதற்கு நாம் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அன்றாட செயல்களை செய்வதற்கு முதுகெலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். ஆகவே எப்போதும் உங்கள் டயட்டில் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான உணவுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் முதுகெலும்பின் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.