அப்படியான எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிடவில்லை.
அவரது குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம்தான்,
8500 பெண்கள் நித்தியானந்தா என்ற ராயசேகரின் ஆச்சிரமத்தில்!!
அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராயசேகருக்கு யாதகம் கணிக்கப்பட்ட போது கணியர், ராயசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராய சன்னியாசியாகத் திகழ்வார் என்று தெரிவித்துள்ளார்.
தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா தினத்தன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக இவர் அடைந்ததாக அறிவித்தார்.
பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அதன்பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிசி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாகப்பூர் ராமகிருச்ண மடத்தில் சேர்ந்து கல்வி கற்றார்
அங்கு சேர்ந்த சிறிது காலத்திலேயே, மற்றவர்களை முந்திக் கொண்டு தனக்கு முன்னுரிமை தந்து, ‘தத்கல்’ முறையில் தீட்சை தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
அப்படி ஒரு வழக்கம் இங்கு இல்லை’ என்று பதில் கிடைக்கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார்.