குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஐ நா குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. போசுனிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அதிரடியாக கூறியுள்ளது.

1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை போசுனிய செர்பிய இராணுவ தளபதியாக இருந்தவர் ராட்கோ மிலாடிச். தற்போது அவருக்கு 74 வயதாகிறது. இனப்படுகொலை 1992-95 காலப்பகுதியில் நடந்த பொசுனிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவும் போர்க்காலக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும்யெனரல் மிலாடிச் 11 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். சிறுவர்களையும் விடவில்லை 1995ம் ஆண்டில் சுரப்ரேனிசாவில் சிறுவர்கள் உட்பட 7000க்கும் அதிகமான முசுலிம் ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நடத்தியதாக மிலாடிச் மீது குற்றம் சாட்டப்பட்டது. சரயேவோ நகரை 44 மாதங்களாக முற்றுகையில் வைத்திருந்ததன் மூலம் 10,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு இதையடுத்து, 2011ல் ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டிருந்தார். 'த கேக்கில்' அமைக்கப்பட்ட 'முன்னாள் யூகோசுலாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி அல்போன்சு ஒரியே நேற்று தீர்ப்பு வழங்கினார். ராடிக் மிலாடிச் மீதான குற்றங்களில் பெரும்பாலானவை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். குற்றங்கள் நிரூபணம் 7 ஆயிரம் போசுனிய முசுலிம் ஆண்களும், சிறுவர்களும், சிரெப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு மிலாடிச் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சராயிவோ முற்றுகையின்போது, வேண்டுமென்றே பொது மக்கள் மீது எறிகணை மற்றும் சுனைப்பிங் வகை தாக்குதலை மிலாடிச் நடத்திய குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு குற்றச்சாட்டிலிருந்து மட்டும் இவர் விடுவிக்கப்பட்டார். 20 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு 530 நாட்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட, இந்த தீர்ப்பை எதிர்நோக்கி, பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் நெதர்லாந்துக்கு பெருமளவில் வந்திருந்தனர். தீர்ப்பை நீதிபதி வாசித்தபோது பழைய சம்பவங்களை அவர் நினைவுபடுத்தியபோது, பலரும் கண்ணீர் விட்டு கதறினர். தீர்ப்புக்கு பிறகு சிலர் இதில் திருப்தி எனவும், சிலர் திருப்தியில்லை என்றும் தண்டனையை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேல்முறையீடுக்கு திட்டம் இதனிடையே இந்த குற்றங்களை மிலாடிச் மறுத்துள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அவருடைய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அச்குசைன் இதனை நியாயத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றிருக்கிறார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.