குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இந்தியாவில், அதிக, நன்கொடை பெறும், மாநில கட்சி, தி.மு.க.,, ஆய்வில் ,தகவல்

03.12.2017- இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் அதிக நன்கொடை பெறும் கட்சி தி.மு.க. என ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளில் 47 மாநில கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் வசூலித்த நன்கொடை, வரவு, செலவு உள்ளிட்ட கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து வருகின்றன.

 

இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு (ஏ.டி.ஆர்.) 2015-16-ம் ஆண்டுகளில் கிடைத்த நன்கொடையாக கிடைத்த மொத்த வருமானம்,செலவினங்கள், வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளிலிருந்து வரும் வட்டி உள்ளிட்ட நிதி ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்ததை பெற்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

மொத்தமுள்ள 47 மாநில கட்சிகளில் 32 கட்சிகள் தங்களது வருமானம்,செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளன. கடந்த2015-16-ம் நிதிஆண்டில் ரூ.221.48 கோடி வருமான கணக்கை இந்த 32 மாநில கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.

32 கட்சிகளில் முதல் மூன்று இடங்களில் உள்ள கட்சிகள் விவரம்:

தி.மு.க. ரூ77.63 கோடி

2015-16-ம் ஆண்டுகளில் தி.மு.க. ஆண்டு வருமானம் ரூ77.63 கோடி என சமர்பித்துள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது. இதன் மூலம் இந்திய மாநில கட்சிகளில் மிகவும் பணக்கார கட்சி தி.மு.க. என தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க ரூ54.938 கோடி

தி.மு.க.விற்கு அடுத்தபடியாக ஆளும் அ.தி.மு.க. ஆண்டு வருமானம் ரூ54.938 கோடிஎனவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம்: ரூ15.978 கோடி

மூன்றாவது மாநில கட்சியாக ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆண்டுக்கு ரூ15.978 கோடி வருவாய் கிடைக்கிறது என்றும்அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேற்கண்ட 32 கட்சிகளில் எஞ்சியுள்ள 15 மாநில கட்சிகள் தங்களது வருமான வரி கணக்கை தேர்தல் ஆணையத்திடம் இன்னும் சமர்பிக்கவில்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதி ஆதாரங்கள் எவை?

அரசியல் கட்சிகளால் பெறப்படும் நன்கொடையில் 71.28% அறியப்பட முடியாத ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவையாகும், தவிர அனாமதேய நிதி ஆதாரங்களில் இருந்து தேசிய கட்சிகள் பெறும் நன்கொடையை விட மாநிலக் கட்சிகளின் நன்கொடை அளவு அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.