குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு.. சமாதான முயற்சியில் முதல்வர் எடப்பாடியார்!

28.11.2017-உயர்மட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில் அதிமுகவினர் சலசலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகளுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழுவில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 7 பேரைக் கொண்ட அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவால் அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாலாட்சி நெடுஞ்செழியன் இடத்தில் எம்பி வைத்திலிங்கத்தையும் சேர்க்க அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.