27.11.2017-இந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றலா பகுதியான பாலி என்ற நகரத்தில் அமைந்து இருக்கிறது. தற்போது இந்த எரிமலை அபாய கட்டத்தை அடைந்து இருக்கிறது.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேறும் படி அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த எரிமலை குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்களையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டு இருக்கிறது. அழகான ஆபத்து இந்தோனேசியா நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நகரம் பாலி. ஒருவருடத்தில் சராசரியாக ஐந்து மில்லியன் மக்கள் அந்த நகரத்தை சுற்றி பார்க்க வருகிறார்கள். உள்ளூர்காரர்களையும், சுற்றுலா பயணிகளையும் சேர்த்து பல காலமாக மிரட்டி வருகிறது அங்கு இருக்கும் 'அகுங் எரிமலை'. 3000 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை தற்போது மிகவும் அபாயமான கட்டத்தை எட்டி இருக்கிறது. மோசமான எரிமலை இந்த எரிமலை இப்போது மட்டும் இல்லாமல் கடந்த 50 வருடமாகவே மிகவும் ஆபத்தான எரிமலையாகத்தான் இருந்து வருகிறது. உலகின் மோசமான எரிமலைகளை பட்டியலிட்டால் இந்த எரிமலைக்கு முதல் ஐந்துக்குள் இடம் கிடைத்துவிடும். 1963ல் அமைதியா இருந்த இந்த எரிமலை திடீர் என்று ஒருநாள் வெடித்தது. மொத்தமாக பாலியில் இருக்கும் பல பகுதிகளை நெருப்பு வெள்ளத்தால் மூழ்கடித்தது. இதில் 1000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர். அதன்பின் மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பியது. திரும்பி வந்தது இந்த நிலையில் இந்த வருட தொடக்கத்தில் இருந்தே அங்கு இந்த எரிமலை கொஞ்சம் பயமுறுத்தும் படியாகத்தான் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்பதை போல இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த எரிமலை அபாய கட்டத்தை தாண்டி இருக்கிறது. அதன்படி அபாய எண் 3ல் இருந்து 4 காக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் அர்த்தம் எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கும் என்பதாகும். ஆனால் இப்போதே அந்த எரிமலை இரவுகளில் தீ சாரல்களை வெளியிட்டு வருகிறது. பாலி மொத்தம் முடங்கியது இந்த நிலையில் பாலியில் இருக்கும் பல பகுதிகளை சேர்ந்த மக்களை அந்நாட்டு அரசு வெளியேற கூறியிருக்கிறது. அந்த எரிமலை வழியாக வரும் அனைத்து விமானங்களும் வழிமாற்றப்பட்டு இருக்கிறது. முக்கியமாக பாலி விமான நிலையம் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.