நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், செவ்வாய் கிரகத்தில் தரையில் விழுந்து கிடந்த ஏலியன்ஸ் விண்கலத்தின் புகைப்படம் சிக்கியுள்ளது.
இது ஏலியன்ஸ் விண்கலம் என தாங்கள் நம்புவதாக UFO Hunterகள் தெரிவித்துள்ளனர்.
1.3 மைல் நீளமான விண்கலம் ஏலியன்ஸ் நாகரிகத்தின் ஆதாரமாக இருந்துள்ளதாகவும், அது பாறைக் கிரகத்தில் தரையிறங்கியது எனவும் தெரிவித்துள்ளனர்.
இது நிச்சயம் ஏதோ ஒரு விதமான விண்கலம் எனவும் விண்கலனானது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அந்த பொருளானது நிலத்தின் ஒருபகுதியின் பாறை தான் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.