உலகத்தின் மூத்த மொழி *தமிழ்!*
உலகத்தின் மூத்த மாந்தன் *தமிழன்*
உலகத்தில் அதிக நிலப்பரப்பை ஆண்டவன் *தமிழன்!*
உலகின் முதல் கப்பல் துறையை நிறுவி, கடலில் படை நடத்தியவன் *தமிழன்!*
இமயம் முதல் குமரி வரை, கங்கை தொடக்கம் கடாரம் வரை எட்டுத்திக்கிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்டவன் *தமிழன்!*
இப்படி பரந்து விரிந்து கிடக்கிற இந்த பூமிப்பந்தில் சுமார் *50,000 ஆண்டுகள்* மூத்த வரலாற்றுப் பெருமைக் கொண்ட *தமிழ் தேசிய இனம்*, நமது *தமிழர் இனம்*.
ஆனால் இன்று நாம்
தனது சொந்த *இன மொழி வரலாறு* அறியாதவரகளாக பலர் பழிக்கும் வண்ணம் அடையாளம் இழந்தவர்களாக வாழ்ந்து வருகிறோம்.
அத்துடன் நமது வரலாறு *திட்டமிட்டு* அன்னியர்களால் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு
முகவரியற்றவர்களான சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு விட்டது .
நமது இனத்தின் *சிறப்பு, கொடை, அறம், பண்பாடு* மற்றும் நம் முன்னோர்களின் *ஆட்சி முறை, ஒழுக்கம், தியாகம், திறன், வீரம், வெற்றி* இவையெல்லாம் பயிற்றுவித்து, தன் சொந்த வரலாற்றை அறிந்து *தமிழ் மொழி*, *தமிழர் இன அடையாளத்துடன்* வாழ, இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு வரலாற்றை போதிக்கிற அரும்பெரும் பணியில் *மலேசிய நாம் தமிழர் இயக்கம்* இறங்கியுள்ளது.
எதிர்வரும் *08.10.2017*-ம் நாள் காலை 8.30க்கு மணிக்கு வகாப் இடைநிலை பள்ளியில் மாதாந்திர *தமிழர் வரலாறு* வகுப்பை நாட்டின் முதன்மை *தமிழ் ஆய்வு பேரறிஞர் ஐயா தமிழ்த்திரு இர. திருச்செல்வனார்* அவர்கள் வழிநடத்தவது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்டு மறைக்கப்பட்ட நம் வரலாற்றை கட்ட கட்டமாக உலகுக்கு பரப்புவோம்.
*வரலாற்றை மறந்த எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது!*
*வரலாற்றை அறிந்த எந்த இனமும் வீழ்ந்ததாக வரலாறு கிடையாது!*
தொடர்புக்கு 0172444816 0143099379, 0166652411
தகவல்: திரு. பாலமுருகன் வீராசாமி