குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அரசியல் பக்குவம் இல்லாத இரு தலைவர்களின் மூர்க்கம்!

17.08.2017-அடுத்த உலகப் போரானது நடந்தால், அது ஆசியக் கண்டத்திலேயே இருக்கும் என்று சில பத்தாண்டுகளாகக் கூறப்பட்டு வருவதை, கொரியப் போர் விவகாரம் மெய்ப்பித்து விடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி கூடிய ஐ.நா பாதுகாப்பு சபையானது, வடகொரியா மீது பொருளாரத் தடையை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளே இதற்குக் காரணம் எனத் தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தத் தடையால் வடகொரியாவின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முக்கியமாக நிலக்கரி, இரும்புத்தாது, காரியத் தாது மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும்.

வழக்கமாக வடகொரியாவை ஆதரிக்கும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த முறை அமெரிக்கா பக்கம் சாய்ந்து விட்டன.

டொனால்ட் ட்ரம்பின் இந்த ஆட்சிக் காலத்தில் மட்டுமல்ல, கிளிண்டன், புஷ், ஒபாமா ஆகியோரின் ஆட்சியிலும் வடகொரியாவுடன் அமெரிக்க அரசுக்குத் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இது ஒரு சிறிய கதை!வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 60 ஆண்டு காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

அமெரிக்காவின் ஆதரவில் வடகொரியா மீது தென்கொரியா நடத்திய சண்டை, 1953-இல் முடித்து வைக்கப்பட்டது. அதையடுத்து தென்கொரியாவில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

1991-இல் இரு கொரிய நாடுகளும் மேற்கொண்ட அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அங்கிருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.

ஆனால், 2006ஆம் ஆண்டில் முதல் முதலாக அணு ஆயுத சோதனை நடத்தியதற்காக வடகொரியா, 2009-இல் அமைதி உடன்படிக்கையை மீறியது.

கடந்த வாரம் வடகொரியா மீது ஐநா பாதுகாப்பு சபை விதித்த தடையானது, முதல் முறை அல்ல; ஏழாவது முறை ஆகும்.

கடந்த மாதம் நான்காம் திகதி, 28ஆம் திகதி என ஒரே மாதத்தில் இரண்டு முறை வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைகளுக்குப் பிறகே, அமெரிக்கா பாதுகாப்பு சபையில் தடைத் தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த இரு சோதனைகளுமே கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை என்பதால், கொரியத் தீபகற்பம் மட்டுமல்லாமல் அமெரிக்காவும் கதிகலங்கிப் போய் உள்ளது.

காரணம், வடகொரியாவின் சோதிக்கப்பட்ட ஏவுகணை வீச்செல்லையில் அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுப் பகுதி இருக்கிறது. இது, பசுபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் கடற்படை கேந்திரமாகவும் இருப்பது முக்கியமானது.

கடைசியாக வடகொரியா சோதித்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது, ஜப்பானின் வான்பரப்பு வழியாக குவாம் தீவைத் தாக்கும் திறன் கொண்டது எனக் கூறப்படுவதுதான் பிரச்சினையை பெரிதாக்கியிருக்கிறது.

வடகொரிய இராணுவத்தின் தலைமைத் தளபதி கிம் ராக் யியோம் கூறியதாக, அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “வடகொரியாவின் ஏவுகணைகள் யப்பானின் ஷிமென், ஹிரோசிமா, கொய்ச்சி ஆகிய இடங்களை ( அதாவது 1,065 செக்கன்களில் 3356.7 கிமீ தொலைவு) கடந்து குவாம் தீவுக்கு 35 கி.மீ முன்னதாக கடலில் விழக் கூடியவை” என்று குறிப்பிடவும், குவாம் தீவு மக்கள் கலவரமாகிப் போனார்கள்.

அமெரிக்காவின் ஆட்சிப் பகுதியான குவாம் தீவில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்; இவர்களின் வாழ்வாதாரம் அதிகமாக சுற்றுலாவையே சார்ந்துள்ளது.

அமெரிக்க அரசானது இந்தத் தீவை படை விமானத்தளத்தையும் நீர்மூழ்கிக் கப்பல் படையையும் கடலோரக் காவல்படையையும் கொண்ட ஒரு முக்கியமான இராணுவக் கேந்திரமாகவே பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசு உட்பட பிற வல்லரசுகள் கூறுவதைப் போல, வடகொரியாவிடம் அணு ஆயுத சக்தி அதிகரித்து வருகிறது என்பது உண்மையானால், ( அணு ஆயுதம் இருப்பதாக சதாம் ஹுசைன் ஆட்சியைக் கவிழ்த்து, கடைசிவரை அந்த நாட்டில் அப்படி எதையும் அமெரிக்கா கண்டதாகவே இல்லை), அது கொரிய தீபகற்பத்துக்கே அபாயமானதாக இருக்கும்.

வடகொரியாவின் இராணுவ பலமானது, அமெரிக்காவுக்கு கௌரவப் பிரச்சினையாக மட்டும் இருக்கலாம். ஆனால் அதன் ஆதரவுடன் இருக்கும் யப்பானும் தென்கொரியாவும் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம்.

தென்கொரியாவின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட சியோல் நகரில் இராணுவத் தற்காப்பு நிலையெனக் கூறுமளவுக்கு இல்லாத நிலையில், ஒருவேளை வடகொரியா தாக்குதல் நடத்தினால் மிக மோசமான அழிவு நிகழும் அபாயம் உள்ளது.

இதேபோல குவாம் மற்றும் தென்கொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புகள் தாக்கினால் அதைவிடப் பேரழிவு ஏற்படும் எனப் போரியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வடகொரிய சனாதிபதி கிம் யாங் உன் ஒரு புறமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு புறமுமாக இரு தரப்பிலிருந்தும் சூடான வாசகங்கள் உமிழப்படுகின்றன.

கடந்த திங்களன்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் ட்ரம்ப் இது குறித்து தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளையில் தென்கொரிய சனாதிபதி மூன் -ஞே- இன், “தென்கொரியாவின் ஒப்புதலின்றி இந்தப் பிராந்தியத்தில் எந்த இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.

என்னுடைய அரசாங்கம் முடிந்த அளவுக்குப் போரைத் தடுப்பதற்கான அனைத்து வழிகளிலும் ஈடுபடும்” என்று கூறியுள்ளமை, சற்றே ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த விவகாரம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியலறிவியல் துறையின் பேராசிரியர் இராமு மணிவண்ணன் பின்வருமாறு கூறினார்.

வடகொரிய அரசின் தலைமைக்குப் போதுமான வயதும் அனுபவமும் இல்லை. அமெரிக்காவில் அரசியல் பக்குவமில்லாத தலைமை இருக்கிறது.

இரு நாடுகளிலும் அரசியல் மேலாண்மை, தீர்மானிக்கக் கூடிய தலைமை இல்லை. வடகொரியாவை அமெரிக்கா தாக்கினால் அமெரிக்க கண்டத்தில் உள்ள அதன் நிலத்துக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை.

ஆனால் வடகொரியா தாக்கினால் அதற்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் போர்ப் பகுதி வடகொரியாவாக இருக்கிறது.

போர் எனும் இடத்துக்குப் போகக் கூடாது என்பதே உலக மக்களின் விருப்பமாக இருக்கிறது. இதிலும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது. பன்னாட்டுறவு மூலமாகத்தான் தீர்வு காண முடியும். இவ்வாறு கூறினார் மணிவண்ணன்.

இது இவ்விதமிருக்க, அமெரிக்காவின் குவாம் தீவைத் தாக்கும் வட கொரியாவின் திட்டத்தை அந்நாட்டின் சனாதிபதி கிம் யாங் உன் ஆய்வு செய்தார்.

அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக வட கொரியா சமீப காலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு நடத்தியது.

புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

இந்நிலையில், அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை மூலம் தாக்க வட கொரியா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை அறிந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வட கொரியா அமெரிக்காவைத் தாக்க நினைத்தால், உடனடியாக அந்நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தாக்குதல் திட்டத்தை சமீபத்தில் ஆய்வு செய்த வட கொரிய சனாதிபதி கிம் யாங் உன், அமெரிக்காவின் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாகக் கவனிக்கும் பொருட்டு தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இதனை வட கொரிய அரசின் ஊடகமும் உறுதி செய்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.