குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, வைகாசி(விடை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

நான் மார்க்கத்தால் இஸ்லாமியன் ; நிலத்தால் மொழியால் இனத்தால் நான் ஒரு மானத்தமிழன் .

23.05.2017-நான் மார்க்கத்தால் இசுலாமியன்  நிலத்தால் மொழியால்  இனத்தால் நான் ஒரு  மானத்தமிழன்

இன்று இலங்கையில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் இனவாத தாக்குதல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மூலவேர் எது என்று நாம் சிந்திக்க துவங்கினோமானால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான் என்பதை புரிந்து கொள்ளமுடியும். எம்.யீ.ஆர் மக்களை வழிப்படுத்தும் முறைகளை$யும் காண்க.

அதற்கு இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியலைபற்றியும் கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கவேண்டும் அப்போதுதான் நமது நாட்டு அரசியலில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியும்.

இன்று தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரை அங்கே ஒருகோடிக்குமேல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின்  சட்டசபைக்கு முஸ்லிம்கள் தரப்பாக யாரும் சட்டசபை உறுப்பினராகவோ அமைச்சராகவோ கோலோச்சிய வரலாறுகளை காணமுடியவில்லை, அதனால் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் அபிவிருத்தியிலும் உரிமையிலும் நாங்கள் பின்தள்ளப்படுகின்றோம் என்று போராடுவதற்கு பதிலாக  தாழ்த்தப்பட்டோர் என்ற ரீதியில் எல்லா இனமக்களையும் சேர்த்தே போராடுவதை நாம் அவதானிக்கலாம்.

இருந்தாலும் தாழ்த்தபட்ட சமூகம் என்ற ரீதியில் எல்லா இன மக்களும் சேர்ந்து இடஒதுக்கீடு வேண்டும் என்று ஒற்றுயாக போராடி வருகின்றார்கள்.அங்கே இஸ்லாமிய இந்து என்ற கலவரங்கள் பெரிதாக ஏற்படுவதில்லை.

ஒன்று இரண்டு இடங்களில் அப்படி ஏற்பட்டாலும் உடனே அதனை தடுத்துவிடுவார்கள்,அதே நேரம் பி.ஜே.பி போன்ற இனவாதிகள் அங்கே தீய கருத்துக்களை பரப்பி வந்தாலும் அதனை அந்த பெரும்பாண்மை மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை, அங்கு  ஒட்டு மொத்தமாக தமிழர்கள் என்ற ரீதியில் வாழ்வதால் மூட்டி விட்டு கூத்துப்பார்க்கும் விடயம் தமிழ் நாட்டில் தோல்வியே கண்டுவருவதை நாம் அவதானிக்கலாம்.

இதற்கு காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்துபார்த்தால் இதற்குரிய விடையை கண்டுகொள்ளலாம். தமிழ் நாட்டை பொறுத்தவரை அங்கே முஸ்லிம்கள் தனிக்கட்சி வைத்திருந்தாலும் அதனை இணங்கிய அரசியல் மூலமாகவே செயல்படுத்திவருகின்றனர், தி.மு.க என்றும், அ.தி.மு.க என்றும் வேறு கட்சிகள் என்றும் மட்டுமே எல்லா மக்களும் பிரிந்து நின்று வாக்களிப்பார்கள் அதனால் கட்சி ரீதியாகத்தான் மக்களை பிரித்து பார்ப்பார்ளே தவிர, இனரீதியாக பிரித்துப் பார்க்கமாட்டார்கள் இதனால் தேர்தல் காலங்களில் இனரீதியான துவேசப் பேச்சிக்களை அந்த தமிழ் நாட்டில் காணமுடிவதில்லை. அதனால் இன ஒற்றுமைக்கு அங்கே  பங்கம் ஏற்படுவதில்லை.

ஒரு கட்சிக்காரனான கந்தசாமிக்கு இன்னொரு கட்சிக்காரனான இஸ்மாயில் அடித்துவிட்டான் என்று சொன்னால் அவர்கள் அதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றால் அ.தி.மு.காரன் அடித்துவிட்டான் அல்லது தி.மு.க காரன் அடித்துவிட்டான் என்றுதான் பேசிக்கொள்வார்ளே தவிர, முஸ்லிம் அடித்துவிட்டான் அல்லது தமிழன் அடித்துவிட்டான் என்று அவர்கள் பேசிக்கொள்வதில்லை, அதனால் பாமர மக்களுக்குள் இனரீதியான வேறுபாடுகள் அங்கே தோன்றுவதில்லை இது ஒரு ஆரோக்கியமான விடயமாக அந்த மக்களுக்கு இருக்கின்றது.

கட்சிகளினால் உதவிகள் வழங்கப்படும்போதும், எனது கட்சிக்காரன் என்றுதான் பார்ப்பார்களே தவிர, எந்த இனம் என்று பார்க்கமாட்டான், இதனால் அந்த மக்கள் இனரீதியான குழப்பங்களுக்கு  ஆளாவதில்லை, இருந்தாலும் அரசாங்கங்களினால் சில விடயங்கள் நடந்தாலும் அதனை ஆர்ப்பாட்டங்களின் முலம் சரிகண்டுவிட முயற்சிப்பார்கள் இந்த விடயங்களை பெரும்பான்மை தமிழ் மக்கள் கண்டுகொள்வதேயில்லை என்பதே உண்மையாகும்.

இதனால் தமிழ் நாட்டு அரசியலில் முஸ்லிம் மக்கள் கோலோட்ச முடியாது விட்டாலும், மறுபக்கம் பெரும்பான்மை மக்களுடன் அன்யோன்னியமாக வாழ்வதை நாம் கண்கூடாக காணலாம்.

 

ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.