குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களத்தின் செயலகம் ஞானலிங்கேச்சுரர் கோவிலுக்கு வருகை

13.05.2017-சுவிட்சர்லாந்து நடுவன் அரசின் குடிவரவுத்திணைக்களத்தின் செயலகம் இன்றும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகையளித்திருந்தது. குவடிவுச் செயலகத்தின் செயலர் மாறியோ கற்ரிக்கெர் தலமையில் இணைச் செயலர் பார்பெறா பூசி அவர்களுடன் குடிரவுத்திணைக்கழகத்தின் 22 துறைசார் முகாமையாளர்களுடம் வருகை அளித்திருந்தனர்.

இத்திணைக்களம் குடிவரவுத்திணைக்கள் என்ற பெயரில் இருந்து நடுவன் அரசின் குடிவரவிற்கான அரசசெயலகம் என்ற பெயருடன் பல அதிகாரங்களைக்கொண்ட மையமாக மாறம்றம் பெற்றது. சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாகக் குடியேருபர்கள் உள்நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது அதனைச் சரிபார்க்கும் பபெறும்ப்பும் இத்திணைக்களத்தையே சாருகிறது. அதுபோல் 3வது நாடுகளில் இருந்து தொழில்முனைப்பில் குடியேறுபவர்களும் அதுபோல் தஞ்சம்கோருபவர்களின் விண்ணப்பத்தினை ஆய்வு செய்வதும் இத்திணைக்களத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது சுவிஸ் நடுவன் அரசின் எதிர்பார்ப்பினை விண்ணப்பதாரர் நிறைவுசெய்திருக்கிறாரா என ஆய்வு செய்வதும் இத்திணைக்களம் ஆகும். அதுபோல் தஞ்சம் கோரி ஒருவர் சுயவிருப்பல் தனது தாயகத்திற்கு மீளத்திரும்ப ஏற்பாடு செய்துகொடுப்பதும் இவர்கள் ஆவர். பேர்ன் நகரில் அமைந்திருக்கும் தமிழ்வழிபாட்டுத் திருக்கோவிலுக்கு இத்துறைசார் அதிகாரிகள் 10. 05. 2017 புதன்கிழமை மேழத்திங்கள் முழுமதித் திருநாளில் நண்பகல் 11.30 மணிக்கு வருகை அளித்து தமிழர்களின் வாழ்வியல், சமயம், பண்பாடு மற்றும் இசைவு வாழ்வு தொடர்பான சைவநெறிக்கூடத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்ததுடன் ஞானலிங்கேச்சரர் திருக்கோவிலையும் சுற்றிப்பார்த்து, தமிழர் கலை வடிவத்தினையும் இரசித்தனர். நிறைவில் பல்சமய இல்லத்தின் வணக்கம் உணவக்த்தில் தமிழர் பண்பாட்டு உணவினை அறுசுவை விருந்தாக சுவைத்துச் சென்றனர். மேலும் சந்திப்புக்கள் தொடரும் என்ற வாசகத்துடன் இன்றைய நிகழ்வு நிறைவடைந்தது.

 

கர்நாடக வாழ் தமிழர்கள் மீது தாக்குதல்: சுவிட்சர்லாந்து சைவத் தமிழ்ச் சங்கங்கள் கண்டனம்கர்நாடக வாழ் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவெறியைக் கண்டித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள சைவத் தமிழ்ச் சங்கம், பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள சைவநெறிக்கூடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்னில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை அறங்கால் செய்து வரும் சைவத்தமிழ் அமைப்பு சைவநெறிக்கூடம் ஆகும். கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் விவசாய சங்கத்தினர் போராட்டம் கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் விவசாய சங்கத்தினர் போராட்டம் தஞ்சையைச் சேர்ந்த ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி.. 00:56 கலக்குகிறது அமீர்கான் நடித்த டாங்கல்… கரியானாவிலும் வரி.. 01:19 யாழ்ப்பாணத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஞானலிங்கேச்சுரத்தில் சைவநெறிக்கூடத்தால் 17. 09. 2016 வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுவழிபாட்டில் கர்னாடகா வாழ் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவெறிச்செயல்களைக் கண்டித்து சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவில் - சைவத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கண்டன அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது. இதேவேளை இக்கூட்டுக் கண்டன அறிக்கை சுவிற்சர்லாந்தின் பொருளாதர நகரமாகக் கருதப்படும் சூரிச் மாநிலத்தில் அருள்மிகு சிவன் கோவில் வழிபாட்டு நிறைவிலும் வாசிக்கப்பட்டது. ஞானலிங்கேச்சுரத்தில் பலநூறு சைவத் தமிழ் அடியார்கள் கூடியிருந்து நடைபெற்ற அன்றைய பொது வழிபாட்டின் பலன் கர்னாடகாவில் எம் தமிழ் உறவுகள் எதிர்கொள்ளும் இன்னலை போக்குவதாக அமைய ஞானலிங்கேச்சுரரிடம் வேண்டுவதாக திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் தெரிவித்திருந்தார். முழுமதி சிறப்பு வழிபாடும், வெள்ளிக்கிழமைப் பொதுவழிபாடும் இணைந்து நடந்த இந்நாளில் பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர். மேலும் பொதுவழிபாட்டின் நிறைவில் மேற்காணும் கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐக்கியராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த சைவசிந்தாந்தப் புலவர் பாவலர். திருநிறை. கந்தையா மனோகரன் அவர்கள் கர்னாடகா வாழ் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல் தொடர்பாகவும், பாரதக்கண்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட வரலாற்று உவமைகளையும் எடுத்துக்காட்டி, இன்றை தமிழர்களின் நிலைக்கு வரலாற்றில் ஏற்பட்ட தவறுகளை தன் கண்ணோட்டத்தில் எடுத்துரைத்தார். 'சிந்து நதியின்' எனத் தொடங்கும் பாடலில் பாரதியார் கண்ட கனவு, இன்று வெறும் கனவாகப் போனதையும், திராவிட மாயையில் தமிழர்கள் தமிழகத்தில் தமிழ் அடையாளம் இழந்ததையும் மீள்மீட்டி அடியார்கள் எண்ணத்தை தூண்டினார். நிறைவில் உலகெங்கினும் வாழும் தமிழர்கள் யாவரும் ஒற்றுமை என்ற பொருளில் தொடர்ந்து நின்று, மக்கள் ஆட்சி ஒவ்வொரு நாட்டிலும் வழங்கும் பொது உரிமைகள் முழுவதையும் பயன்படுத்தி எங்கள் உரிமைகளை எங்களுக்கும், எதிர்வரும் எம் இளந்தமிழ்ச் சமூகத்திற்கும் படைத்தளிக்க வேண்டும் எனும் வேண்டுதலும் திருக்கோவில் வழிபாடும், கண்டன அறிக்கை வாசித்தளித்தலும் நிறைவுற்றது.

சுவிட்சர்லாந்தில் சைவமும் தமிழும் பரிசளிப்பு விழா: திருக்குறளும், திருப்புகழும் பாடிய குழந்தைகள் பேர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் மாநிலத்தில் சைவநெறிக்கூடத்தால் பேர்ன், லவுசான், மர்த்தினி,யெனீவா ஆகியா நகரங்களில் நடாத்தப்பட்ட சைவமும் தமிழும் போட்டி நிகழ்வின் பரிசளிப்பு 25. 10. 2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தெய்வத் திருமுறைகளும், திருக்குறளும், திருப்புகழும் குழந்தைகள் பாடி ஒப்புவித்து பரிசுகளை பெற்றனர். 833 வெற்றிக் கோப்பைகள் குழந்தைகளுக்கு பரிசாக வழங்கப்பட்டன. சுவிட்சர்லாந்தின் நான்கு திசைகளிலிருந்தும் பலநூறுப்பிள்ளைகள் 7 சைவத் தமிழ்ப் போட்டிகளில் பங்கெடுத்து, தமது வெற்றிக்கிண்ணத்தினையும் வெற்றிச்சான்றிதழ்களையும் பெற்றுச் சென்றனர். திருவேடம் தாங்கல் பரிசளிப்பு மேடையில் போட்டி நிகழ்வாக நடைபெற்றது. 2002ம் ஆண்டு முதல் சைவநெறிக்கூடத்தால் நடத்தப்படும் இப்போட்டி நிகழ்விற்கு 2007ம் ஆண்டு முதல் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் நல்கை வழங்கி வருகிறது. காலை 09.00 மணிக்கு தொடங்கப்பெற்ற நிகழ்வுகள் மாலை 5 மணிக்கு நிறைவுற்றன. 11.30 மணிமுதல் 1.00 மணிவரை இடைவேளை விடப்பட்டு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் நல்கப்பட்ட நண்பகல் உணவு விருந்தாக யாவருக்கும் அளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழா சைவத் தமிழ்பெரியோர்களும், செந்தமிழ் இசைவல்லுணர்களும் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்கி மதிப்பளித்தனர். சுவிட்சர்லாந்திற்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. சூசி லெவின் (Suzi LeVine) சைவநெறிக்கூடத்தின் அழைப்பில் தனது கணவருடன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் பங்கெடுத்து சிறப்பித்தார். தமிழ்முறைப்படி விழா ஈழத்தில் இருந்து அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருவிழாவிற்கு இசை வழங்க வந்திருந்த திருநிறை. மதுசூதனன் இசைக்குழுவினர் தமிழிசை முழங்க வரவேற்பு அளித்தனர். ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் உகந்தளிக்க தூதுவர் தன் கணவருடன் தமிழ் முறையில் மேடையில் மாலை மாற்றிக்கொண்டார். தொடர்ந்து இளந்தமிழ்ப் பிள்ளைகளுக்கு சான்றிதழ்களையும், வெற்றிக்கிண்ணத்தையும் மதிப்பளித்து அளித்தார். அமெரிக்க தூதுவர் சிறப்புரை அமெரிக்கத்தூதுவர் தனது சிறப்புரையினை மேடையில் ஆற்றினார். எந்த இனத்தவர்களும் எங்கு சென்றாலும் தங்கள் மொழி, பண்பாடு, சமயத்தினைப் போற்றுவது போற்றுதலிற்கு உரிய செயல். அவ்வகையில் தமிழர்கள் இன்று இந்நிகழ்வினை நடாத்துவது சாலச்சிறந்தது எனவும், தான் சைவநெறிக்கூடத்தின் நிகழ்வில் பங்கெடுத்து இன்று மேடையில் தன் கணவருடன் மாலை மாற்றிக்கொண்ட 3நிமிட மணித்துளிகள் தன்வாழ்நாளில் என்றும் மறக்குமுடியாப்பதிவு என்றும் கூறினார். உற்சாக விழா மிகு உற்சாகத்துடன் நடந்த நிகழ்வின் நிறைவாக திருவேடம்தாங்கி மேடையில் இறை உருவங்களாகத் திகழ்ந்த பிள்ளைகளுக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கி சைவமும் தமிழும் போட்டி நிகழ்வு 2016 இனிதே நிறைவுற்றது. திருநிறை அரியபுத்திரன் நிமலன் அவர்கள் தனது சிறப்பான தனித்திறனால் நிகழ்வுகளை அழகாக தொகுத்தளித்தார். குழந்தைகள் விருப்புடன் மேடையேறிச் சிறந்தனர். சுவிட்சர்லார்ந்தில் ஒலித்த தமிழ் பேர்ன், யெனீவா, மர்த்தினி தமிழ் ஆசிரியர்களும், வலே மாநில சைவநெறிக்கூட அன்பர்களும் நிறைந்த பங்களிப்பினை இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற வழங்கியிருந்தனர். தெய்வத் தமிழில் இறைபாடல்கள் நிறைந்தொலித்த ஞானலிங்கேச்சுரம், நிறை இளந்தமிழ்ச் செல்வங்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் நிறைந்து சூழ, தமிழா வழிபடு, தமிழில் வழிபடு எனும் மகுடத்துடன் நிறைந்தது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.