குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, வைகாசி(விடை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தது உண்மைதான்: ஒப்புக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்

12.04.2017-ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தது உண்மைதான் என சுகாதாரத்துறை அமைச்சர் வியயபாசுகர் கூறியுள்ளார்.ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு, அப்பகுதி மக்களுக்கு தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர், சுகாதாரத்துறை அமைச்சர் வியயபாசுகர் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 (85 சதவீதம்) வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை வருமானவரித் துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆயராக வேண்டும் அமைச்சர் வியயபாசுகருக்கு சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து, துணை இயக்குநர் ராயமாணிக்கம் முன்னிலையில் ஆயரானார்.

வியயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், பணப்பட்டுவாடாவுக்கான முழுப்பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் சில அமைச்சர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.