சுவிசில் உள்ள பேசல் நகருக்கு 2.45 மணியளவில் வந்தடைய நேரம் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய சுவிசில் உள்ள லூசேர்ன் நகருக்கு வந்தபோது சுமார் 2 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மிதமான வேகத்தில் வந்த தொடருந்து திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
தொடருந்துடன் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்திற்குள்ளானது. எனினும், பயணிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
7 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், இவ்வழியாக வந்த இரண்டு பயணியகள் தொடருந்து உடனடியாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
தொடருந்து எதனால் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சில மணி நேர பரிசோதனைகளுக்கு பின்னர், தொடருந்துசேவை முழுமையாக சீரடைந்தது. சுவிசில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது தொடர்பாக தொடருந்து துறை அதிகாரிகள் மற்றும் கா.து விசாரணை நடத்தி வருகின்றனர்.