07.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Brienz என்ற ஏரியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குறித்து சுவிசு மற்றும் வெளிநாடுகளில் கா.து விசாரணை செய்து வந்துள்ளனர்.
ஆனால், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை கா.து நேற்று வெளியிட்டுள்ளனர்.
அதில், பெண் உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், உப்பு கலந்த ஏரியில் சடலம் இருந்ததால் உடல் பாதுகாப்பாக இருந்துள்ளது.இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், தற்கொலைக்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
உயிரிழந்த பெண் உயரமானவர் என்றும், 30 முதல் 50க்குள் வயது இருக்கும் எனவும், சடலத்தின் மீது நாகரீகமான உடைகள் இருந்ததாகவும் கா.து தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த அடையாளங்களுடன் உறவினர் காணாமல் போயிருந்தால் அவர்கள் உடனடியாக கா.து தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.