--------------------------------------------------------------------------------------------
லெமூரியா" என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது "மூ" எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் "லெமூரியா" என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)
இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரணமாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர் பார்க்கலாம்.... இது ஒரு கலந்துரையாடல்.... உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன!
எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ? (லெமூரியா 02)
Share லெமூரியா 02
---------------------------------------------------------------------------------------
"லெமூரியா" தொடரின் முதலாவது பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நாளில் 250 ஹிட்ஸ் கிடைத்தது என்னை பொறுத்தவரையில் என்க்கு கிடைத்த ஹிட்ஸ்களில் இது தான் அதிகூடியது. ( சில வலைப்பதிவர்களுக்கு நான் சொல்வது சிரிப்பா இருக்கும். அவர்களுக்கு குறைந்ததே இதுவாக இருக்கலாம்.) நான் வலைப்பதிவு ஆரம்பித்து 43 நாட்கள்தானே ஆகின்றன! ஆகவே எனக்கிது பெருசு!
---------------------------------------------------------------------------------------
போனபதிவில் லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.
ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)
இனி "லெமூரியா" எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன...
அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))
கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்...
அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்... அத்தட்டுக்கள் சாதாரணமாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய "ஸீஸோ" விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.
(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)
இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது... ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)
சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!
இன்றைய பதிவு சொல்ல வந்த விடையத்தை(எவ்வாறு அழிந்தது) சொல்லமுதலே நீள்மாகிவிட்டது.
ஒன்றை விளக்க வெளிக்கிடும் போது பல பாதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்போது தான் நாம் சொல்லவருவது ஒரு நம்பகத்தன்மையானதாக இருக்கும். நாம் அடுத்த பதிவில் ஒரு அனிமேஷன் விளக்கத்தோடு எவ்வாறு அழிந்திருக்கும் என்பதை பார்க்கலாம். (ஒரு விஷையத்தை எழுதுவதை விட படத்தால் விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். என்று நம்புகிறேன்.)
இது ஒரு கலந்துரையாடல்.... உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன! ( ஏன் என்றால் நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை! வாசிச்சது, கேட்டது , ஜோசித்தது எல்லாம் சேர்ந்து தான் இந்த ஆக்கம். அதனால், இத்தொடரை பிரயோசனமாக்குவதற்கு உங்களது பங்களிப்பு நிச்சயம் தேவை!
எங்கே லெமூரியர்/குமரி இனத்தவர்? (லெமூரியா *03*)
லெமூரியா 03
----------------------------------------------------------------------------------------
இது லெமூரியா பற்றிய மூன்றாவது பதிவு. முன்னைய இரு பதிவுகளுக்கும் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது. போனபதிவில் ஆரம்பிக்கப்பட்ட விடையத்தை (எவ்வாறு அழிந்தது லெமூரியா?) சொல்லாமலே பதிவை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. ஒரு அனிமேஷனுடன் விளக்குவதாக கூறியிருந்தேன். சில காரணங்களால் இன்னமும் செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் எப்படியும் இன்று வார்த்தைகளால் விளக்குவது என்டு முடிவெடுத்துள்ளேன். இங்குள்ள படத்தை அவதானிக்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக நான் கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இனைந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் மூள்கிப்போக காரணமாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடையம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.
இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காணப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். எனவேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு "இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா?" எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. "அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே? அவை பிறபகுதிகளுக்கு குடிபெயரவில்லையா?" எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே? எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ( இங்கு, மனித சாமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.) இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் "பொரிக்ஷா" எனும் ரஷ்ஷிய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் எனவும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் ஆறியப்படவில்லை. ஆனால், எமது புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்).
அத்துடன் பரிமாண வழர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. ( இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.) இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தார்ஸ் களினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------
யார் இந்த நியான்டர்தார்ஸ்? மேலும் பல உண்மையான வியப்புக்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம். இது ஒரு கலந்துரையாடல் உங்களது கருத்துக்கள் தேவைப்படுகின்றது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
லெமூரிய(குமரி) குடிகளா? (லெமூரியா 05)
Share6லெமூரியா
-----------------------------------------------------------------------------------------
"லெமூரியா" தொடர்பான பதிவினை போன கிழமை போட முடியவில்லை மன்னிக்கவும். கொஞ்சம் அரசியல் பக்கம் (???) சாய்ந்ததால் ஏற்பட்ட நெருக்கடி.
போனபதிவில் லெமூரியாவுக்கும் இராமாயணத்திற்கும் இடையிலான தொடர்பை பார்த்திருந்தோம். பல எதிர்ப்பு, வழமை போலவே ஃபெஸ் புக் நண்பர்கள் மூலம் தான் கடும் எதிர்ப்பு. ஒரே வட்டத்துக்குள்ள இருந்துட்டு வெளில வர மாட்டாங்க என்கிறாங்க.
-----------------------------------------------------------------------------------------
சரி நாங்க தொடருக்குள் போவோம்.
போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது...
அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் "திருநெல்வேலி" எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப "தின்ன வேலி" என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.
இவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)
ஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)
நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.
தொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. ...)
எது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.
ஏற்கனவே கூறியிருந்தேன் "லெமூரியா கண்டத்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது" என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.
பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான "ஃபை"(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!
அவர்கள் எவ்வாறு அவ் அறிவை பெற்றனர்? மேலும் வியத்தகு சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...
-----------------------------------------------------------------------------------------
இது ஒரு கலந்துரையாடல்... உங்களது கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன...லெமூரியாவும் (தமிழ்) கலண்டரும்... (லெமூரியா 07)
Share8லெமூரியா
---------------------------------------------------------------------------------------
இது லெமூரியா தொடர்பான 7 வது பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகு லெமூரியா பதிவு இடுகின்றேன்... போனபதிவில் நான் திராவிடம் பற்றி கதைத்து இருந்தமைக்கும், புராணங்களை லெமூரியாவுடன் இணைத்து எழுதி இருந்தமைக்கும் பித்தன் வாக்கு ( என்னை எழுத ஊக்கு வித்து வருபவர்) என்பவரிடமிருந்து சில கண்டனங்கள் எழுந்து இருந்தது. முக்கியமாக காலம் தொடர்பான கருத்து வேற்றுமைகள் காணப்பட்டன.
---------------------------------------------------------------------------------------
அவரின் கருத்தின் படி, இராமாயணம் முதலிய புராணங்கள்(?) கி.மு 2000 ஆண்டளவில் நடந்து இருக்கலாம் என்பதாகும்.
ஆனால், என்னால் இதை முற்றாக ஏற்று கொள்ள முடியவில்லை. காரணம், நமது இதிகாசங்கள் (?) களில் காலம் தொடர்பாக பெருசாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.
ஆனால், நான் ஆறிந்த வகையில்...
மகாபாரதத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் காலம் கூறக்கூடியதாக இருக்கிறது.
1. பீமன்(?) பல்லை விளக்கியவாறே தர்மரிடம் சென்று " இன்று கலியுகம் ஆரம்பித்து விட்டதாம்..." என கூறுகிறார்.
அதற்கு, தர்மர் " உன்னை பார்க்கவே விளங்குது..." என கூறுவதாக ஒரு சந்தர்ப்பம் வருகிறது. இது மகாபாரத வரலாறு கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் நடந்து இருக்கிறது என்பதற்கு சான்றாக கொள்ளலாம்.
( எனினும் இதுவும் இட்டுகட்ட பட்ட ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், காலங்கள் தொடர்பாக பெரும்பாலான இடங்களில் கூறப்பட வில்லை என் பதால் இட்டு கட்ட படவில்லை எனவும் கொள்ளலாம்.)
2. 2ம் சம்பவம்... திடமாக என்னால் கூறமுடியாது. நன்றாக தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.
மாகாபாரத யுத்தம் சூரிய கிரகமும், சனி கிரகமும் ஒரே யோசிய பெட்டியினுள் நிற்கும் போது நடந்ததாக கூறப்பட்டுள்ளது. ( நகுல சகோதரர்கள் கூறுவது போன்று சம்பவம் உள்ளதாக்கும்.)
5000 ஆண்டுகளுக்கு முன்னர் லெமூரியா இருந்திருப்பின்... நிச்சயமாக லெமூரிய மக்களின் எச்சங்கள் கண்டு பிடிக்க பட்டு இருக்கும். மாபெரும் கடற்கோல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்து இருக்கும்... என்பதே பலரால் ஏற்று கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், 5000 வருடத்திற்கு முன்னர் அவ் அழிவு ஏற்பட்டு இருப்பின் நிச்சயமாக புவியியல் ரீதியாக அதன் பாதிப்பு இன்றும் தெரிய கூடிய வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு நடந்து இருப்பின் "அலெக்ஸ்ஸான்டர் கொன்றதேவ்"இன் ஆராய்ச்சியாளர்கள் இந்து சமுத்திரத்தில் மேற் கொண்ட ஆராச்சியில் ஒரு சிறு படிமம் ஆவது கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு நடக்க வில்லை.
எனவே, இராமாயணம், மகாபாரதம் முதலியன 2000 ஆண்டுக்கு உட்பட்டவை என்பதை ஏற்றுகொள்ள முடியாதுள்ளது.
---------------------------------------------------------------------------------------
இன்று... நீண்ட நாட்டளாக நான் அடுத்து வரும் என கூறிவந்த லெமூரிய/குமரி மக்களின் கலண்டர் தொடர்பான சில விடையங்களை பதிவிடலாம் என நினைக்கின்றேன். ( கலண்டர் தொடர்பான விடையங்களை முதலில் பார்த்து விட்டு... பின்னர் எமது புராணத்துக்கும் (?) லெமூரியாவிற்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வோம்...)
இன்று எவ்வாறு "கிறீன் விச்" எனும் இடம் சர்வதேச நியம நேரமாக (0) தொழிற்படுகிறதோ... அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது.
காரணம்...
நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது... இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது... இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது... இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.)
தென்னிலங்கை... இது இராவணனின் தலை நகரம்...
நிரட்ச இலங்கை... இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது... ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\குமரி மந்தன் குறிப்பு\\\ )
இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.
லங்காபுரி... ரோமபுரி...சித்தபுரி...பத்திராசுவம் எனும் நான்கு... முக்கிய பெரும் நகரங்களும்... ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன.
இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)... ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது.
பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது... அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது... (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.)
5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே... பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு... என வெவ்வேறு... பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது...)
இதில்... இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது... சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே...
அதாவது...
சூரியன் தன்னை தானே... அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்... அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்... சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது... ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது...)
இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன.
ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்.... அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை...
அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்... ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது.... தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ... அவ்வாறே... முன்னர்... 12 பயன்பட்டுள்ளது.... ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்... அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது...))
இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு... அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)
இதை கணித்த முறை மிகவும் வியப்பானது... காரணம்... அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது...
இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்....
16 ம் நூற்றாண்டில்... போப் கிரகெரி... என்பவராலேயே... இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை!!??)
மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத... காரணத்தாலேயே... கிரகெரி... ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்...
---------------------------------------------------------------------------------------
ம்... இப்ப மாதிரி அப்ப தமிழன் இருந்து இருந்த சவுன்ட் ஆச்சும் விட்டு இருப்பாங்க...
ஓகே பதிவு நீளமாகிறது....
நீண்ட நாட்களாக கலண்டரை பற்றி சொல்லுறன் என்றுட்டு சொல்லாமல் விட்டதுக்காக இன்றைக்கு முக்கியமான சிலத சொல்லியிருக்கன்....
மேலும் பல... சுவாரஷ்யமான விடையங்கள் இருக்கின்றன... வரும் பதிவுகளில் பார்ப்போம்....
லெமூரியாவும் (தமிழ்) கலண்டரும்... (லெமூரியா 07)