குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

16.04.2016-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்ப மேற்படுத்த வேண்டாம்.

முதலில் நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை மாதத்தின் முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகள் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். அதாவது 'பிரபவ' என்ற முதலாம் ஆண்டு தொடங்கி 'அட்சய' என்ற அறுபதாவது ஆண்டு வரை அறுபது ஆண்டுகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூட தமிழிலில்லை. அனைத்துமே வடமொழிப் பெயர்கள்தான். அப்படியெனில், தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்லி தொடங்கும் வருடங்களின் பெயர்கள் மட்டும் எப்படி வடமொழியில் இருக்க முடியும்? உலகின் மூத்தகுடியான தமிழர்கள் தங்கள் ஆண்டுகளின் பெயரை வேற்றுமொழியில் இருந்து கடன்வாங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்த அறுபது ஆண்டு சுழற்சி நடைமுறைக்கு வந்த வரலாற்றைப் பார்ப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனா ன சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சில வரலா ற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுகின்றனர். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு தமிழர்களிடையே நிலைநிறுத்தப்பட்டது.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற இந்துமத புராண நூலில் 1392ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் :

ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார். ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள்.

இந்த அறிவுக்கொவ்வாக் கதையைக் கொண்டுதான் ஆரியர்கள் அறுபது ஆண்டு முறையை நடைமுறை படுத் தினர். இக்கதை தமிழர்களின் மரபுக்கும் மானத்திற்கும் இழுக்கு விளைவிப்பதாக உள்ளது. தமிழர்கள் ஏன் சித்திரை புத்தாண்டை ஏற்கவில்லை என்றால் இதுவும் ஒரு காரணமே. இந்த இழிநிலையைப் போக்க, 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் கலந்தாலோசித்து தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனும் முடிவுக்கு வந்தனர். அவர்களைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள் நாமல்ல இதைப் பற்றி வாதம் செய்ய. சான்றோர்களின் முடிவே எங்களின் முடிவுமாகும்.

௧) சித்திரை முதல் நாள் நிச்சயமாகத் தமிழ்ப்புத்தாண்டு அல்ல. தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு.

௨) சித்திரையில் ஆண்டு தொடங்குகிறது என்பதில் தமிழர்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இந்துகளின் நம்பிக்கை அதுவே. அதனால், சித்திரை முதல் நாளைச் சித்திரை புத்தாண்டு எனவும் குறிப்பிடலாம்.

௩) சித்திரை முதல் நாள் இந்துமதத்தைத் தழுவியிருக்கும் மக்கள் மட்டுமே கொண்டாடுவது என்பதால் இந்நாளை இந்து புத்தாண்டு என்றும் குறிப்பிடலாம்.

ஆகவே, நாளை இந்துகள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வேளையில் "சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்" அல்லது "இந்து புத்தாண்டு வாழ்த்துகள்" என வாழ்த்திக் கொள்ளுங்கள். ஆனால், தயவுசெய்து "தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்" என்று தவறாக வாழ்த்தைப் பரிமாற்ற வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

தமிழ்ப்புத்தாண்டு பற்றிய புரிதல் தமிழர்களிடையே ஏற்பட்டு வரும் காலகட்டம் இது. இந்த சந்தர்பத்தைச் சாதகமாக பயன்படுத்தி முகநூல் போன்ற ஊடகங்களின் வாயிலாக மேலும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம்.

(குறிப்பு : தமிழர்கள் சம்பந்தமில்லாமல் இந்துக்களின் பண்டிகையில் தலையிட முயற்சிக்கவில்லை. மாறாக, இந்துகளின் பண்டிகையில் தமிழின் பெயர் சற்றும் சம்பந்தமில்லாமல் சிக்குண்டிருப்பதால், மாற்றபட்ட வரலாற்றை மீண்டும் மாற்றியமைக்க தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவே முயற்சிகின்றோம். உண்மை அறிந்தவருக்கு இது புரியும், அறியாதவர் கூகிளின் உதவியை நாடவும்.)

நன்றி. smile உணர்ச்சிலை

‪#‎தமிழர்களின்வரலாற்றைஅறிவோம்‬

‪#‎நம்பண்பாட்டைமீட்டெடுப்போம்‬