27.03.2016-சுவிற்சர்லாந்தில் புதிதாக எதிலி விண்ணப்பம் சமர்ப்பித்து விசாரணைகளின் தொடரில் இருப்பவர்கள். எதிலியாக ஏற்று உதவிப்பணம் பெறுவோர் புதிதாக வேலை ஒன்றினை பெற்றுக் கொள்ளும் போது வழமையாக இருந்த வேலை அனுமதிப்பத்திரம் பெறுதல் நடைமுறையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த 15 ம் பக்கல்( திகதி) முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இம்நடைமுறையைப்பின்பற்றாது செயற்படினும்’ அறிந்து கொள்ளாதவிடத்து சட்டச்சிக்கல்களை வேலை வழங்குனர்களும் பெறுபவர்களும் எதிர்கொள்ளலாம். ஆகையால் அவற்றை உரியமுறையில் அறிந்து செயற்படுங்கள் என்று குமரிநாடு இணையத்தளம் கேட்டுக் கொள்கின்றது.