23.03.2016-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் குற்றங்கள் அதிகமாக நிகழும் மாகாணங்களை பற்றிய புள்ளிவிபரங்களை அந்நாட்டு மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.சுவிசின் ஒட்டு மொத்த மாகாணங்களை ஒப்பிடுகையில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து தற்போது வரை குற்றச் செயல்கள் ஓரளவு குறைந்துள்ளது.
குறிப்பாக கடந்தாண்டு மட்டும் நாடு முழுவதும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவங்கள்42,416 என்ற எண்ணிக் கையில், அதாவது 19 சதவிகிதம் குறைந்துள்ளது.ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டிலேயே யெனிவா மாகாணத்தில் மட்டுமே அதிகளவில் குற்றங்கள் நிகழ்ந்து வருவதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யெனிவாவில் உள்ள 1,000 நபர்களில் 123 குற்றவாளிகள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 4.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.யெனிவாவிற்கு அடுத்த இடத்தில் குற்றங்கள் அதிகம் நிகழும் மாகாணங்களின் பட்டியலில் பேசல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்து 3-வது இடத்தில் Neuchatelமாகாணம் மற்றும் 4-வது இடத்தில் Vaud மாகாணமும் இடம்பெற்றுள்ளன.
இதே ஆய்வில், சுவிசில் உள்ள 26 மாகாணங்களில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடக்கும் மாகாணங்களில் பட்டியலில் Uri மாகாணம் முதல் இடம் பெற்றுள்ளது.
இந்த மாகாணத்தில் குற்ற நடவடிக்கைகள் 38 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இந்த ஆய்வில் சூரிச் மாகாணத்தில் 6 சதவிகிதம் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது.
Nidwalden மற்றும் Appenzell-Innerrhodes மாகாணங்களிலும் 20 சதவிகிதம் குற்றங்கள் குறைந்துள்ளன.
இதே பட்டியலில், வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாகாணங்களில் பேசல் முதல் இடத்திலும், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் குற்றங்களில் யெனிவாவும் முதல் இடத்தில் வகிக்கின்றன.
சுவிசின் Fribourg நகரத்தில் கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.