சுவிசின் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga இன்று பேர்ன் நகரில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது,யேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் புத்தாண்டு தினத்தில் பெண்களிடம் புலம்பெயர்ந்தவர்கள் அநாகரீகமாக நடந்துக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த நாடாக இருந்தாலும், பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற ஒழுக்கம் தான் முக்கிய நோக்கமாக கருத வேண்டும்.
இந்த அணுகு முறையில் எந்த தவறு நடந்தாலும், அதற்கு விதிவிலக்கு, மன்னிப்பு என எதுவும் கிடையாது.
பெண்களை ஆண்கள் நிச்சயம் மதித்து மரியாதை செலுத்த வேண்டும். இதை தான் பெண்களும் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இதனை செய்வதில்லை.
அதே சமயம், சுவிசு நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு உள்ளூர் பெண்களின் பண்பாடு, நாகரீகம், பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை அவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தால், பெண்கள் மீதான வன்முறையை தடுக்கலாம். ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டால், அவர்களுக்கு புகலிடம் கிடைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என Simonetta Sommaruga கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் யேர்மனி மற்றும் சுவிசு நாடுகளில் பெண்கள் மீது கொடூரமான முறையில் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த சம்பவத்தில் புலம்பெயர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.