சுவிசில் மொத்தம் 13,000 இடங்களில் பற்றுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், விற்பனை தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.
கடந்த 2011ம் ஆண்டு முதல் தனது இசை நிகழ்ச்சியை ஐரோப்பாவில் தொடங்கிய அடெல், சுற்றுப்பயண அடிப்படையில் நடத்திவருகிறார்.
மேற்படி சுற்றுப்பயணங்கள் 2016 பிப்ரவரி 29ஆம் திகதி முதல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஸ்வீடன், நோர்வே, டென்மார்க், ஜேர்மன், போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற இடங்களில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்கள் கிடைக்காதவர்கள் 90,110 பிராங்குகள் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.