சுவிசில் கடந்த அக்டோபர் 18ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேட்டிவ் சனநாயக கட்சி அதிக தொகுதிகளை இழந்து பின்னடைவை சந்தித்தது.
ஆனால், சுவிசின் முக்கிய கட்சியான சுவிசுமக்கள் கட்சி(SVP) அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது.
மேலும், எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதி புதிய அரசாங்கத்தை அமைக்கும்போது, சுவிசு மக்கள் கட்சிக்கு கூடுதலாக ஒரு அமைச்சரவை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக நிதி அமைச்சராக பதவி வகித்து வந்த Widmer-Schlumpf(59) என்பவர் தனது பதவியிலிருந்து விலகஉள்ளதாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
தனது தனது பதவிவிலகலுக்கும் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
பதவிவிலகலிற்கு அரசியல் ரீதியாக குறிப்பிட்ட விளக்கம் அளிக்காத அவர், ‘இனிவரும் காலங்களில் தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்காகவே பதவியை பதவி உள்ளதாக’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பாராளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் சனநாயக கட்சி பெரும் பின்னடைவை சந்தித்த காரணத்திற்காகவும், சுவிஸ் மக்கள் கட்சி கூடுதலாக ஒரு அமைச்சரவை கேட்டுள்ளதால், அதன் நிர்பந்ததால் தான்பதவியை விலக்கிக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிசு மக்கள் கட்சிக்கு கூடுதலாக நிதி அமைச்சகமும் வழங்கப்படுமா என்பது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தாத நிலையில், எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதி அதிகாரப்பூர்வமாக நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து வெளியேற உள்ளதாக Widmer-Schlumpf தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் களை கட்டிய காலொவென் திருவிழா: பேய் போல் வேடமணிந்து கொண்டாடிய மக்கள்
காலொவென் திருவிழாவை முன்னிட்டு சுவிட்சர்லாந்தின் சாலைகளில் பேய் போல் வேடமணிந்து சென்றவர்களின் செயல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
உலகம் முழுவதும் ஹாலொவென் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வித விதமாக வேடமணிந்து கொண்டாடி வருகின்றனர்.
இதே போல் சுவிட்சர்லாந்தின் பெசல் நகரில் கடந்த 5 வருடங்களாககாலொவென் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வித விதமாக வேடமணிந்து பேரணி சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஹாலொவென் பேரணி நேற்று நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் யோம்பிக்கள் போன்று வேடமணிந்து கலந்துகொண்டனர்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பயமுறுத்தியவாறு சாலையில் உற்சாகமாக சென்றனர்.
இது தொடர்பாக இந்த பேரணியில் துணை ஒருகிணைப்பாளர் மைக்கெல் கெம்ப் கூறியதாவது, வருடாவருடம் இந்த பேரணியில் கலந்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்கிறது.
இந்த பேரணி அமைதியாக நடைபெறுவதற்கு சில விதிமுறைகளை விதித்துள்ளோம்.
இந்த பேரணியின் முக்கிய நோக்கம் வேடிக்கை மட்டுமே என்று தெரிவித்தார்.