23.10.2015-சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் இயங்கும் பேர்ண் வள்ளுவன் தமிழ்ப்பாடசாலை 2046 தைப்பொங்கல் தமிழப்புத்தாண்டிற்காக தயாரித்து வெளியிட்ட பாடலும் நடனக்காட்சியும். பாடலாசிரியர் பூநகரி பொன்.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து. -இசை தமிழ்நாட்டுக்கலைஞர்கள். ஒளிப்பதிவு டியி போட்டோ - எசு.வீ.அயந்தன்.
நடனம். கு.கௌசிகன்-க.சக்திவேல்-நா.அபிலாசு(ஸ்)-க.நவீன்-அ.அடோனிசு(ஸ்) -மு.அருளினி.ம.மாதுளா.செ.அசு(ஸ்)வினி-செ.அபிராமி லி.நிலானி-நடனக்குழு..... ஞா.சினேகா-வி.அபினா-வ.அட்சாயா-வ.கோபிகா- வி.விதுசா
கற்ககசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்கு தக
கற்ககசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்கு தக
கல்வியை தவறின்றிக்கற்று கற்றபின்
அதன்படி வாழுதல் உயர்வு.
எப்பொருள் யாா் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி !
அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி !!
தாயும் சேயும் பேசுவது அன்னியமொழி!
அழியாதோ எம் தமிழ்மொழி!!
அது நடக்க விடலாமோ தடுக்க முயற்ச்சிகள் வேண்டாமோ!
பூமியின் முதல் மொழியான எம்மொழி தாய்மொழி தமிழ் மொழி!!
ஓ ...... ஓ ........ ஓ.........ஓ.......
தமிழா தமிழா தமிழா தமிழா.
ஆய்வாளரை அதிரவைத்தமொழி பண்டைய தமிழன் படைத்தமொழி
ஏடுகளாய் மதுரை கலைமகளில் குவிந்திருக்கும் மொழி எம் மொழி
அகநானுாறு என்றும் காதல் கூறும் காமத்துப்பால் என்று திருக்குறள் தரும் மொழி
குமரிக்கண்டத்தில தோற்றம் கண்டதுண்டு அறிவியல் ஆய்வுகள் கூறும் மொழி
எம்மொழி காக்க தமிழா தமிழ்பேசு எம்தமிழ்மொழிகாக்க
தமிழ்மொழி அழிவதைத்தடுக்க தமிழா தமிழ் பேசு!
தமிழ்த்தாய் தமிழிச்சியென்று எழுச்சிகொண்டால்
தமிழ்மொழியும் தமிழ் உலகமும் தானே வளரும்.
என் தாய் மொழி அது தமிழ்மொழி என்தாய்மொழி அது தமிழ்மொழி.
கட்ச்சிக்காறன் மீட்பானா ?எம்தமிழை சினிமாக்காறன் மீட்பான? எம்தமிழை.
கோயில் காறன் மீட்பானா ?எம்தமிழை இல்லை வணிகன் மீட்பான? எம் தமிழை.
தமிழன் கணனியில் தமிழ்ஏற்று கணவனும் மனைவியும் தமிழில் பேசு
தமிழ்க்குடும்பத்தில் தமிழில் உரையாடு தமிழ்மொழிதான் உயர்ந்தது நீ கூறு
உயர்ந்தது நீ கூறு தமிழ் உயர்ந்தது நீ கூறு.
அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி முன்னணி !
அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி !!
தாயும் சேயும் பேசுவது அன்னியமொழி!
அழியாதோ எம் தமிழ்மொழி!!
உலகம் மகிழ்ந்து வாழ வள்ளுவன் தந்த திருக்குறளை நாளும் படி
தமிழும் உயரும் உன்வாழ்வும் உயரும் உயிரும் உலகும் மகிழுமினி
ஆரியர் தாமே எல்லாமென்பதை வெள்ளையர் தாமே அறிவுளதோர்
தமிழரும் அத்தனையும் உடையாரே என்பதை உணரு தமிழா
என் தாய்மொழி அது தமிழ்மொழி!
என் தாய்மொழி அது தமிழ்மொழி!
என் தாய்மொழி அது தமிழ்மொழி!
என் தாய்மொழி அது தமிழ்மொழி!
என் தாய்மொழி அது தமிழ்மொழி!
என் தாய்மொழி அது தமிழ்மொழி!
01.01.2046 தமிழாண்டு -15.01.2015 கிறிசு ஆண்டு.