குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)

 07.07.2011.த.ஆ.2042--தமிழ்மொழியின் சிறப்பு - திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது. ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False strory) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

ஈழம் உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்

உலகில் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது இன்று எல்லோரும் அறிந்த விடயம்.ஆனால் அவர்களின் நெருக்கடிகள் என்ன என்பது எல்லோருக்கும் அறியப்படாத விடயம் அந்தந்த நாடுகளில் வாழ்வோர் தமது நெருக்கடிகளை வெளிக்கொணரும்போது அவற்றை வெளிப்படுத்த முடியும்.

மேலும் வாசிக்க...
 

வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே

இலங்கையில்  தமிழர்  சனநாயகவழியில் நின்றவர்கள் என்பதை இந்தநேரத்தில் நிகழ்த்திக்காட்டவேண்டும்.  முதலில்  வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே. சோழர்காலத்தில் மன்னரைத்தெரிவு செய்வதற்கு ஓட்டில் அல்லது கல்லில் பெயர்களை எழுதிப்போடுவார்கள் ஒருதினத்தில் எடுத்து எண்ணுவார்கள் அதிகம் பெறுபவர் நிர்வாகத்திற்கு தெரிவு செய்யப்படுவார் இதுவேசனநாயகத்தின் ஆரம்பம். உலக அரங்கில் தமிழர்கள் சனநாயகவிரும்பிகள்  என்பதை இக்காலகட்டத்தில் நிருபிக்கவேண்டும். இதன்மூலம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களுக்கான மதிப்பு உயரும்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2 3 4 5 வரை

 த.ஆ-2042-- 20.06.2011-முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு
தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மேலும் வாசிக்க...
 

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார் 
  சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 161 - மொத்தம் 166 இல்