குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

மொரீசியசில் தமிழர் - பாகம் - ௧

 

மொரீசியஸ் தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.

மேலும் வாசிக்க...
 

திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் -முனைவர் நா. கணேசன்

திருவள்ளுவர் பிறந்தநாள் தேர்வில் நாவலர் பாரதியார் பங்கு: தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் இரு தமிழ்ப் பேராசிரியர்கள் முக்கியமான வர்கள். அவர்களில் முதல்வர் சென் னையில் வாழ்ந்த மறைமலை அடிகளார். இரண்டாமவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் வீற்றிருந்த பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879  1959). நாவலர் பாரதியாரும், பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும் பள்ளித் தோழர்களாய் எட்டயபுரத்தில் வளர்ந்த போது இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை ஈழப்புலவர் வழங்கினார்.

மேலும் வாசிக்க...
 

இறைவன் இருக்கின்றார்! அறிஞர் போற்றிய அருந்தமிழ்

 

20.04.கி.ஆ2012தமிழாண்டு2043-மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தம் 'தமிழர் மதம்' என்ற ஆய்வு நூலில் கடவுள் உண்டு என்பதற்கான அசைக்க முடியாத புறச்சான்றுகள் இருக்கின்றன என வலியுறுத்துகின்றார். அதனை வைதே கடவுள் எனும் பேராற்றல் இருக்கின்றது என நம்பத் தோன்றுகிறது என்ற ஒரு முடிவான கருத்தை அவர் கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு.

மேலும் வாசிக்க...
 

பல சமயத்தார் போற்றும் பைந்தமிழ்

 

20.04.கி.ஆ2012தமிழாண்டு2043-உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பின் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.

மேலும் வாசிக்க...
 

சித்திரை தமிழப்புத்தாண்டா?

20.04.2012-தமிழாண்டு2043-ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 124 - மொத்தம் 141 இல்