குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழ்ப் பற்று - தமிழ் வள்ளுவர்

05.01.2015-இல்லாததொன்றில்லை என உலகத்தோரால் உரைக் கப்படும் அகிலப் பொது மறையாம் தெய்வத் திருக்குறளில் கூட வள்ளுவனார் இயம்பாது விடுத்து விட்ட ஒரு துறை; வையத்து மாந்தரால் போற்றப் பட வேண்டிய ஒரு பேரியல்; தாய் மொழிப் பற்று. இற்றைக் காலத்தில் ஒரு மாந்தனின் வாழ்வில் தாய்மொழி யின் பங்கு பெரிதும் வேண்டற்பாலது. இன அடையாளத் தையும்; தனித்துவத்தையும்; சீரிய முன்னேற்றத்தையும் அளிக்க வல்லது தாய் மொழியின் பயன்பாடேயாகும்.

மேலும் வாசிக்க...
 

பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார், தமிழர்

04.01.2015-இதற்கு எதிர்மறை இசை ஓவியம் கலைகளி ல்  ஈடுபாடு அற்ற ஆசி்ரியர்களால் திறனற்ற குழந்தைக ளாக வளர்க்கப்படு கின்றார்கள்..அப்படி என்னதான் இரு க்கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக அளவில் ‘கல்வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள்.

மேலும் வாசிக்க...
 

தமிழின் சிறப்பு!

மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு.

இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு.

தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.

மேலும் வாசிக்க...
 

திருக்குறளின் பெருமைகள்

திருக்குறளின் பெருமைகள் - முனைவர் தொ.பரமசிவன்

மிகவும் அரிதான செய்திகளை தொல்லியல் ஆதாரங்களோடு திருக்குறளின் பெருமைகளை தொ. பரமசிவன் (முனைவர் - தமிழ்த்துறை ம. சு. பல்கலைக் கழகம், திருநெல்வேலி) அவர்கள் இங்கு வழங்குகிறார்.

மேலும் வாசிக்க...
 

அமையப்போவது மைத்திரி ஆட்சியா இராணுவ ஆட்சியா?

26.12.2014- மிகவும் கீழ்த்தரமான  மறைகேடுகிளன் மூலம் எதிர்த்தரப் பின் வெற்றி வாய்ப்பை இழக்கச்செயும் தேர்தலா க இத்தேர் தல் அமையும் என்கின்றது குமரிநாடு.நெற்..

நாட்டில் சனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனவரி 8ம் திகதி நடைபெற்றாலும் 2016 நவம்பர் மாதம் வரையும் தற்போ தைய சனாதிபதி மகிந்தரின் ஆட்சிக் காலம் உள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 113 - மொத்தம் 166 இல்